கோபாலபுரத்துக் கேழ்வரகு…!

2009 November 2

etm3

இந்த நிலையில், இங்கே அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களை இந்த மண்ணின் நிரந்தர குடிமக்களாக ஆக்கவேண்டுமென்ற எனது வேண்டுகோளை பரிசீலிப்பதாக மத்திய அரசு வாக்களித்துள்ளது.

இது மட்டும் போதுமா? இலங்கையில் எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என எல்லாத் தமிழர்களையும் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்திற்கு வரச்செய்து அவர்கள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம்; உங்கள் ஆருயிர் நண்பர் மகிந்தா ராஜபக்சேவுக்குத் `தொல்லை’ விட்டுப்போகும். இலங்கைத்தீவு முழுவதும் சிங்களவர்களுக்கே உரிமையாகிவிடும். இப்படி ஒரு வேண்டுகோளை மைய அரசுக்கு விடுக்கலாமே!

etm6

இந்தியாவில் நான்கு இலட்சத்துக்கும் மிகுதியான ஏதிலிகள் இருக்கிறார்கள். தமிழ் ஏதிலிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க முடியுமா? இவ்வாறு வழங்கினால் ஏதிலிகள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கவேண்டும் என்னும் சூழ்நிலை உருவாகாதா? அனைவருக்கும் வழங்க மைய அரசு ஒப்புக்கொள்ளுமா?

நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்று இன்னமுமா உங்களுக்கு எண்ணம் இருக்கிறது?

`கேழ்வரகில் நெய் வடிகிறது’ என்கிறீர்கள்; இவ்வாறு சொல்வது உங்கள் பழக்கம். ஆனால் `கேட்பவர்களுக்கு அறிவே இருக்காது’ என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் நிலை பற்றி வெளிவந்துள்ள நீண்ட கட்டுரை ஒன்றை நான் படிக்க நேர்ந்தது. இங்கே அகதிகளாக உள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் தாங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் எதுவுமின்றி எத்துணை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என்பதை காட்டும் புகைப்படங்களை கண்டு கண்ணீர் விட்டேன்.

நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர். முதலமைச்சர் என்றால் ஆள், அம்பு, சேனை, பானை, `ரத கஜ துரக பதாதிகள்’ என்று என்னென்னவோ இருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். ஒரு கட்டுரையைப் படித்துத்தானா ஏதிலிகளின் நிலையை நீங்கள் கண்டுகொண்டீர்கள்? உலகத்துக்கே தெரிந்த உண்மையை இப்போதுதானா நீங்கள் தெரிந்துகொண்டீர்கள்?

கண்ணீர் விட்டீர்களா? ஆடுகள் நனைந்தால் நனையட்டுமே! அழவும் தெம்பற்ற ஆடுகள் அவை; அவற்றுக்காக நீங்கள் ஏன் கண்ணீர் விடுகிறீர்கள்?

அவர்கள் கவலைகளை உடனடியாக தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை மேற்கொள்வதுதான் நமது கடமையாகுமென கருதி, இலங்கை தமிழ் அகதிகளை பாதுகாத்திடவும், அவர்தம் பட்டினி போக்கிடவும், படிப்பு வாய்ப்பு வழங்கிடவும், தமிழக அரசின் எல்லா துறையினருக்கும் பொறுப்புண்டு. எனவே, இலங்கை அகதிளுக்கு வாழ்வளிக்க, தொடர்புடைய துறையினர் அனைவருக்கும் ஆலோசனை வழங்கவும், ஆய்வுகள் மேற்கொண்டு ஆவணம் செய்யவும், இலங்கை தமிழர்கள் அல்லல் போக்கிட உடனே அரும்பணிகள் தொடரப்பட வேண்டுமென்று ஆணையிடுவதற்கு வாய்ப்பாக நாளை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகளை அழைத்து விவாதிக்க இருக்கிறேன்.

உடனடியாக…, அவசர நடவடிக்கை… அடடா, உங்கள் விரைவை நினத்தால் உடம்பு புல்லரிக்கிறது. `இத்தனை ஆண்டுகள் ஏன் இவற்றைச் செய்யவில்லை’ என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்று நினைத்துச் செயல்படும் உங்கள்  அரசியல் பாராட்டுதற்கு உரியது.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இன்னல் இம்மியளவும் இல்லாத வகையில் இன்புற்று வாழ்ந்திட நாளைய கூட்டத்தின் வாயிலாக தேவையான நிதி ஒதுக்கி அவர்தம் தேவைகள் நிறைவு செய்யப்பட வழிவகுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் `உலகக் கலைப்படைப்பாளி” என்று தெரியும். ஆனால் உங்கள் நாடகங்களில்  இப்போது நகைச்சுவையே மிகுந்து நிற்கிறது. எனவே `கலைஞர் கருணாநிதி’ என்பதைப் பார்க்கிலும் `நகைச்சுவைக் கலைஞர் கருணாநிதி’ என்பதுதான் நன்கு பொருந்துகிறது. இதுதான் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் என்றும் தோன்றுகிறது.

- அ. நம்பி

வெளியே தளுக்கு உள்ளே அழுக்கு

2009 November 1

வட்டார ஆட்சியர் மாநாட்டில்: – 20.6.2008

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதே நமது மொழிக் கொள்கை. – கருணாநிதி

திரைப்பட ஒலிவட்டு வெளியீட்டு விழாவில்: – 20.7.2008

இன்றைக்கு இந்தியாவிலேயே முழு வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களைக் காணுகிறீர்கள். ராஜாஜி மண்டபத்தில் படப்பிடிப்பு நடத்த முன்பு ஒரு லட்ச ரூபாய் கட்டணம். இப்போது அது வெறும் ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

இவ்வளவுக்கும்  பிறகு நான் உங்களைக் கேட்பதென்ன? நல்ல தமிழில் தலைப்புகளைச் சூட்டுங்கள் என்றுதானே. இதைக்கூடக் கேட்கக் கூடாதா? இவ்வளவு சலுகைகள் அளித்தும்கூட தமிழில் பெயர் வைக்காமல் ஏபிசிடி என்றெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள்……

……இனிமேலாவது நல்ல தூய தமிழில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் தமிழ் என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்கு தலைப்புகளை வைப்போம். எதிர்காலத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே படங்களை எடுப்போம். தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் திரைத்துறையினர் எடுத்துக்கொள்ள வேண்டும். – கருணாநிதி

2009:

கோவையில் கனிமொழி செம்மொழி மாநாடு 

31.10.2009

ete01

இன்று முதல்
உங்கள் Sun TV-இல்

Surf excel

Deal-ஆ No Deal-ஆ

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…
73 நாடுகளில் கலக்கிய

Mega Game Show

Deal-ஆ No Deal-ஆ

உங்கள் Sun TV-இல்

 

`ஊருக்குத்தானடி உபதேசம்,

உனக்கும் எனக்கும் இல்லை!’

ஊரை ஏமாற்றி உலையில் போடும் சோதிடர்கள்…!

2009 October 30

nss01

சோதிடர்களின் ஏமாற்று வேலைகளுக்கு ஓர் எல்லை இல்லாமல் போய்விட்டது.

அவர்களின் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் திருகுதாளமும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

அவர்களை நம்பி அடியோடு கெட்டுச் சீரழிபவர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டு இருக்கிறது.

`எவர் எக்கேடு கெட்டாலும் கெடட்டும்; எங்களுக்கு என்ன? எங்களுக்குப் பணம் வந்தால் போதும்’ என்னும் சிந்தனையோடு திட்டமிட்டுச் சமுதாயத்தைக் கெடுக்கிறார்கள்.

இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளிவந்த சோதிடப் பகுதியில் ஒரு வினா:

ast01

பிள்ளைகளின் படிப்பைக் குறித்துக் கவலையுறும் பெற்றோர்கள் அதுபற்றிப் பேசவேண்டுமானால் அவர்கள் பயிலும் பள்ளிக்குச் செல்லவேண்டும். ஆசிரியர்களிடம் கலந்துரையாடவேண்டும்; தேவையெனில் மருத்துவர்களை நாடவேண்டும்.

ஆனால் இந்தத் தந்தையோ சோதிடரிடம் கேட்கிறார்.

`அவனது போக்கில் எப்போது மாற்றம் ஏற்படும்’ என்னும் கேள்விக்குக் கல்வியாளர்களோ மருத்துவர்களோ விடையிறுக்கக்கூடும்.

`10–ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அவன் தேர்ச்சி பெறுவானா’ என்பது அடுத்த கேள்வி; இக்கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியுமா?

`பரிகாரம் ஏதும் செய்யவேண்டுமா’ என்பது இன்னொரு கேள்வி.

கண்டிப்பாகப் `பரிகாரம்’ செய்யவேண்டும்; `என்ன செய்யவேண்டும்’ என்று சொல்லத் தகுதி உடையவர்கள் கல்வியாளர்களும் மருத்துவர்களுமே ஆவர்.

எல்லாக் கேள்விகளுக்கும் சோதிடப் புரட்டர் விடை சொல்கிறார்:

ast06

`இந்தப் பிள்ளையின் படிப்புப் பிரச்சினைக்குக் கோள்களே காரணம்; கோள்கள் இடம் மாறும்போது பிரச்சினை தானே நீங்கிவிடும்’ என்கிறார் சோதிடர்.

என்ன மேற்படிப்புப் படிக்கவேண்டும் என்றும் சொல்கிறார்; இதனைச் சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

`உங்கள் மகனின் வருங்காலம் குறித்துப் பெரிதாகக் கவலைப்பட ஏதுமில்லை’ என்றால் என்ன பொருள்? `என்னை நம்புங்கள்; அவன் படிப்புக் குறித்து ஏதும் சிந்திக்கத் தேவையில்லை; அவன் கெட்டுக் குட்டிச்சுவர் ஆகட்டும்’ என்றுதானே பொருளாகிறது?

பெண்மணி ஒருவர் கேட்கிறார்:

ast04

மருத்துவரைக் காணவேண்டும்; அவரைக் கேட்கவேண்டும்; ஆனால் சோதிடரைக் கேட்கிறார்.

சோதிடர் சொல்கிறார்:

ast05

`அடுத்த ஆண்டு மேத் திங்களுக்குப் பிறகு தீரும்’ என்றால் என்ன பொருள்?

`கோள்களின் இருப்பால் நோய் வந்துள்ளது; அடுத்த ஆண்டு மேத் திங்களுக்குப் பிறகு கோள்களின் நிலை மாறும்; நோய் தீரும்; அப்போதுதான் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்’ என்றுதானே சொல்கிறார்?

`இன்னும் ஏழு திங்கள் நோயில் துன்புற்றுத்தான் ஆகவேண்டும்; மருத்துவம் செய்துகொண்டாலும் நோய் தீராது’ என்று பொய் சொல்லி ஏமாற்றலாமா?

மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

இது பட்டினத்தார் பாடல்.

கண்காட்டும் வேசியருக்கும் சோதிடர்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்தச் சோதிட வேசியரின் ஏமாற்று வலையில் சிக்கினால் அங்காடி நாய்போல் அலைய நேரிடுவது திண்ணம்; தவிர்க்க இயலாது.

சிக்கிக்கொள்ளாது இருப்பதே அறிவுடைமைக்குச் சான்றாகும்.

- அ. நம்பி

சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்…!

2009 October 29
by அ.நம்பி

btn02

 
 

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
   சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
   தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!

– பாவேந்தர்

 

செம்மொழி மாநாடு : கனிமொழிக்கு பொறுப்பு

சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான ஆய்வரங்க அமைப்புக் குழுவின் செயலராக கனிமொழி எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். மாநாட்டுக்கான தனி அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

mkk01

கோவையில் வரும் ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்கள்,  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநாட்டில் ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள, ஆய்வரங்க அமைப்புக் குழுவை அமைத்து, அரசு ஆணையிட்டுள்ளது.

குழுவின் தலைவராக இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி, துணைத் தலைவர்களாக அவ்வை நடராஜன், பொற்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக்கு, குழுவின் செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.