பொருளடக்கத்திற்கு தாவுக

காக்கைக்கே இரையாகி…!

ஜூன் 25, 2010

crw01

யிர் செம்மையாக இருக்கவேண்டுமாயின் உடல் செம்மையாக இருக்கவேண்டும்; உடல் செம்மையாக இருக்கவேண்டுமாயின் உணவு உட்கொள்ள வேண்டும்.

உணவு உட்கொள்ள வேண்டுமாயின் உணவு தேடவேண்டும்; உணவு தேடவேண்டுமாயின் உழைத்துத்தான் ஆகவேண்டும்.

இதனை நம் சமயம் கட்டாயம் என்றே சொல்கிறது.

ஆயினும் உடலுக்கு உணவு தேடுவதே வாழ்க்கை ஆகிவிடுமோ?

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
(5.90.5)

பூக் கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே.

`பூக்களைக் கையில்கொண்டு சிவபெருமானின் பொன்னார் திருவடிகளைப் போற்றாதவர்களும் நாக்கைக்கொண்டு இறைவனின் திருப்பெயரைக் கூறாதவர்களும் தம் உடலுக்கே உணவு தேடி அலைந்து இறுதியில் காக்கைகளுக்கே இரையாகிக் கழிவார்கள்.’

போற்றிலார் – போற்றாதவர்கள்
அரன் – சிவபெருமான்
நவில்கிலார் – சொல்லாதவர்கள்
ஆக்கை – உடல்
அலமந்து – அலைந்து; வருந்தி
கழிவர் – அழிந்தொழிவார்கள்

`இரை’ என்னும் சொல் பொதுவாக விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் உணவைக் குறித்தாலும் சிறப்பாகப் பறவைகளின் உணவையே குறிக்கும்.

நாள் முழுதும் இரை தேடுவது பறவைகளின் இயல்பு; உணவு தேடுவதற்காகவே வாழ்பவர்களை `ஆக்கைக்கே இரைதேடி அலமந்து’ எனும் தொடரால் குறிக்கிறார் அப்பர் பெருமானார்.

உடலுக்கு மட்டும் உணவு தேடினால் போதுமோ?

உயிருக்கும் உணவு வேண்டாவோ?

உயிருக்கு உணவாவது இறை வழிபாடு.

`உடலுக்கு உணவு தேடுங்கள்; ஆனால் உடலுக்கு மட்டுமே உணவு தேடாதீர்கள்; உயிருக்கும் உணவு தேடுங்கள்’ என்று அருளிச்செய்கிறார் பெருமானார்.

- அ. நம்பி

6 மறுமொழிகள் leave one →
  1. ஜூன் 27, 2010 9:17 பிற்பகல்

    excellent
    om nama sivaya, sivaya nama om

  2. ஜூன் 27, 2010 10:20 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //excellent
    om nama sivaya, sivaya nama om//

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. ஜூலை 7, 2010 7:04 பிற்பகல்

    நல்ல பகிர்வு.
    அருமை

  4. ஜூலை 7, 2010 7:49 பிற்பகல்

    அன்பருக்கு,

    //நல்ல பகிர்வு. அருமை//

    மகிழ்ச்சி ஐயா.

  5. ஜூலை 12, 2010 10:55 பிற்பகல்

    THIRUNAAVKKARASARIN SIRANTHA PAADALAI THANTHATHARKKU NANRI. KIRUPAANANTHAVAARIYAAR ITHEE KARUTHTHAI “”IRAI THEDUVATHUDAN IRRRAIYUM THEDU “”"ENRU KOORRICH SENRRAR!!

  6. ஜூலை 13, 2010 1:33 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    உங்கள் மறுமொழி வேறு இடத்துக்கு (spam) எப்படியோ சென்றுவிட்டது; பார்க்கவில்லை; தாமதத்திற்கு வருந்துகிறேன்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers