கோவைக்கூத்து…!
“பாவைக்கூத்து என்றால் தெரியும்; என்ன அது கோவைக்கூத்து?”
“சரி, பாவைக்கூத்து என்றால் என்ன?”
“பொம்மலாட்டம்!”
“பொம்மலாட்டம் என்றால்…?”
”பொம்மைகளை ஆட்டுவித்து நடத்தப்படும் கூத்து!”
“சரி!”
“சரி என்றால்…?”
”கோவைக்கூத்து என்பது இன்னொரு விதப் பாவைக்கூத்து!”
”இன்னொரு விதப் பாவைக்கூத்து என்றால்…?”
”கோவைக்கூத்து என்பதும் பொம்மலாட்டம்தான்!”
“அப்படி என்றால் கோவைக்கூத்தும் பாவைக்கூத்தும் ஒன்றுதானா?”
“ஒன்றுதான்! ஆனாலும் வேறுபாடுகள் உள்ளன!”
“என்ன வேறுபாடுகள்?”
”பாவைக்கூத்து நடத்த அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஆகும்; ஆனால் கோவைக்கூத்துக்கு ஐந்து நாள் தேவைப்படும்.”
“சரி, வேறு…?”
“பாவைக்கூத்துக்குச் செலவு குறைவு; கோவைக்கூத்து நடத்த நானூறு, ஐந்நூறு கோடி செலவாகும்!”
”ஆமாம், கோவைக்கூத்து என்று பெயர் வரக் காரணம் என்ன?”
“பல கூத்துக்களைத் தொகுத்துக் கோவையாக ஐந்து நாள் தொடர்ந்து கூத்து நடத்தப்படுவதால் கோவைக்கூத்து என்று ஆயிற்று!”
”ஆமாம், கேட்க மறந்துவிட்டேன்; பாவைக்கூத்து நடத்துவதுபோல் யார் வேண்டுமானாலும் கோவைக்கூத்து நடத்த முடியுமா?”
“முடியாது! மாமன்னர்களால் மட்டுமே கோவைக்கூத்து நடத்த முடியும்!”
”அப்படியா? கோவைக்கூத்துக் குறித்து மேலும் விவரங்கள் வேண்டுமே…!”
“மேலும் விவரங்களா…? முன்பே எழுதியதுதான்! ஆனால் இப்போது ஒரே கோப்பில் படிக்கலாம்!”
1. ஒரே கோப்பில் படிக்க: இங்கு (நீளம் கூடிய கோப்பு; திறக்கச் சற்று நேரமாகும்; படியிறக்கம் செய்து படிப்பது நன்று.) கோப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது; விரைவில் படியிறக்கம் செய்துகொள்ளலாம்.
2. ஏழு பகுதிகளாகப் படிக்க: இங்கு
- அ. நம்பி
அப்படிப் போடு அருவாளை.
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//அப்படிப் போடு அருவாளை.//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
in Tamilmanam, it shows kovai kootthu- narsim
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//in Tamilmanam, it shows kovai kootthu- narsim//
kovai kootthu- narsim…? விளங்கவில்லை; விளக்கிச் சொன்னால் நல்லது ஐயா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
பிரமாதம்…….ஆனா இந்தக் கோவைக்கூத்துக்கெல்லாம் யாரு, எப்போ முடிவு கட்டப்போறாங்களோ?! (அதாங்க இந்த பூனைக்கு யாரு மணி கட்டுறதுன்னெல்லாம் சொல்லுவாங்களே அதுமாதிரி).
நெஞ்சு பொறுக்குதில்லையே…..இந்த நிலைகெட்ட ………. எண்ணி???
அன்பருக்கு,
//ஆனா இந்தக் கோவைக்கூத்துக்கெல்லாம் யாரு, எப்போ முடிவு கட்டப்போறாங்களோ?! //
இந்தக் கூத்துக்களை நடத்துபவர்கள் அரசியலாளர்கள்; அரசியல் கட்சிகள். மொழியை முன்வைத்துக் கூத்து நடத்துவது அரசியல் ஆதாயம் கருதியே என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஒரு கட்சி போனால் இன்னொரு கட்சி; தொடர்ந்து நடத்துவார்களே ஒழிய யாரும் இத்தகைய கூத்துகளுக்கு முடிவு கட்டமாட்டார்கள் ஐயா.
நம்பி சார், எல்லாத்தையும் ஒதுக்கிட்டு இது தமிழ் மொழிக்குக் கிடைக்கிற பிராபல்யம், அங்கிகாரம், மரியாதைன்னு மட்டும் பார்த்தா ஓக்கேன்னு சொல்லலாம் இல்லையா? மன்னிக்கணும், இது என் சொந்தக் கருத்து. நான் தப்பாவும் இருக்கலாம்.
http://kgjawarlal.wordpress.com
அன்பருக்கு,
//எல்லாத்தையும் ஒதுக்கிட்டு இது தமிழ் மொழிக்குக் கிடைக்கிற பிராபல்யம், அங்கிகாரம், மரியாதைன்னு மட்டும் பார்த்தா ஓக்கேன்னு சொல்லலாம் இல்லையா? //
கடை அடைத்த பிறகுதான் கல்லாப்பெட்டியில் எவ்வளவு இருக்கிறது என்று கணக்குப் பார்ப்பார்கள்; எவ்வளவு ஆதாயம் என்று கூத்து முடிந்த பிறகு பார்க்கலாம் ஐயா.
உங்கள் சரித்திர குறு நாவல் பிரமாதம்.
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//உங்கள் சரித்திர குறு நாவல் பிரமாதம்.//
`மன்னர்’களின் கதை… அப்படித்தான் ஐயா இருக்கும்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
ithu varai thamizh maanatukalai international centre for tamil endra amaippe nadathi vanthulathu
athu 2011 il maanadu nadatha thittamitirunthathu
annal avasara avasaramaak ippothu nadatha vendiya avasiyam enna
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
உங்கள் மறுமொழி எப்படியோ வேறு இடத்துக்குச் (spam) சென்றுவிட்டது; அதனால்தான் தாமதம்; வருந்துகிறேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
KADAI THAAN ADAIKKAPPATTU VITTATHEE, KALLAAVIL EVVALLAVU SEERNTHU ULLATHU?
அன்பருக்கு,
//KADAI THAAN ADAIKKAPPATTU VITTATHEE, KALLAAVIL EVVALLAVU SEERNTHU ULLATHU?//
கல்லாப்பெட்டியில் தமிழுக்கு எவ்வளவு சேர்ந்துள்ளது எனத் தெரியவில்லை ஐயா; விரைவில் தெரியக்கூடும்.