பொருளடக்கத்திற்கு தாவுக

இஸ் திஸ் தமிழ் லாங்குவேஜ்…?

மே 27, 2010

itt02

`ஷாப்’களின் `நேம்போர்ட்’கள் தமிழ் லாங்குவேஜில் இருக்கவேண்டும் என்னும் சென்னை `கார்ப்பரேஷன்’ `ஆர்டர்’ எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

`பிஸ்னஸ் எஸ்டாபிளிஷ்மெண்ட்’களின் `ஓனர்’கள் இந்த `ஆர்டரை’ நிச்சயமாக `இக்நோர்’ பண்ணமாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் `கேபிட்டல் சிட்டி’யான சென்னையின் ஒவ்வொரு `ஷாப்’பும் தமிழில் `ரைட்’ பண்ணப்பட்ட `நேம்போர்ட்’-ஐக் கொண்டிருக்கவேண்டும் என்பது தமிழரின் `எக்ஸ்பெக்டேஷன்’ ஆக இருத்தல்வேண்டும்.

இது `எக்ஸெசிவ்’ ஆன `எக்ஸ்பெக்டேஷன்’ என யாரும் `கிரிட்டிசைஸ்’ பண்ண முடியாது.

`ஆஃப்டர் ஆல்’ `நேம்போர்ட்’தானே, தமிழில் இருந்தால் இன்னொரு `சுனாமி’யா வந்துவிடும்?

`லாங் லிவ்’ தமிழ் `லாங்குவேஜ்!

- அ. நம்பி

20 மறுமொழிகள் leave one →
  1. மே 27, 2010 12:04 பிற்பகல்

    எஸ். ரைட்டாச் சொன்னீங்க.

    நைன் க்ளௌட்ஸ் ன்னு கம்பெனி நேம் வச்சுக்கிட்டு டமில் சினிமா எடுக்கறாங்க ‘மேலிடத்து’ மக்கள்ஸ்.

    டமில் வாழ்கன்னு சொல்லிட்டுப் போகலாம்.

  2. மே 27, 2010 12:22 பிற்பகல்

    இந்த ப்ளாக் கு என்னோட கமெண்ட் “சூப்பர் ”

    என்ன செய்வது ? பழகு தமிழ் இப்படி பாழாகிறது…’

  3. மே 27, 2010 12:24 பிற்பகல்

    அம்மா,

    வாருங்கள்.

    //எஸ். ரைட்டாச் சொன்னீங்க.

    நைன் க்ளௌட்ஸ் ன்னு கம்பெனி நேம் வச்சுக்கிட்டு டமில் சினிமா எடுக்கறாங்க ‘மேலிடத்து’ மக்கள்ஸ்.

    டமில் வாழ்கன்னு சொல்லிட்டுப் போகலாம்.//

    யூ ஆர் அப்ஸ்சோலியூட்லி கரெக்ட் மேடம். `ரெட் ஜயண்ட் மூவீஸ்’ என்று ஒரு `புரடக்ஸன் ஹவுஸ்’ இருக்கிறதே, அதையும் `மென்ஷன்’ பண்ணி இருக்கலாமே, `ஃபோர்கெட்’ பண்ணி விட்டீர்களோ?

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  4. மே 27, 2010 12:37 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //இந்த ப்ளாக் கு என்னோட கமெண்ட் “சூப்பர் ”

    என்ன செய்வது ? பழகு தமிழ் இப்படி பாழாகிறது…’//

    வேறு என்ன செய்வது ஐயா? நாமும் `பள்கு’ தமிழைப் `பளகிக்’கொண்டால் போயிற்று…!

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  5. மே 27, 2010 12:45 பிற்பகல்

    நான்சென்ஸ். பொலிடீசியன்ஸையும் பப்ளிக்கையும் இப்படி கிரிட்டிசைஸ் பண்ணுவதே நியூஸ்பேப்பர் மற்றும் பிளாகர்களின் வேலையாகி விட்டது.

  6. மே 27, 2010 1:10 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //நான்சென்ஸ். பொலிடீசியன்ஸையும் பப்ளிக்கையும் இப்படி கிரிட்டிசைஸ் பண்ணுவதே நியூஸ்பேப்பர் மற்றும் பிளாகர்களின் வேலையாகி விட்டது.//

    ஐ ப்ளீட் கில்டி, யுவர் ஹானர். ஐ புரொமிஸ் ஐ வில் எக்ஸஸைஸ் கோஷன் (caution) டு தி அட்மோஸ்ட் எக்ஸ்டெண்ட் இன் மை ஃபியூச்சர் போஸ்ட்ஸ்!

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்,

  7. மே 27, 2010 4:12 பிற்பகல்

    நைஸ் போஸ்ட் யார்!!!

  8. மே 27, 2010 4:53 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //நைஸ் போஸ்ட் யார்!!!//

    தட் இஸ் வெரி கைண்ட் ஆஃப் யூ, யார்!

    தேங்க் யூ வெரி மச்!

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  9. மே 27, 2010 5:12 பிற்பகல்

    It is tamil’s modern slang
    Puriyaatha tamilargalukkaaga ezhuthappatta aangila tamil.
    Romba suttham paarkka koodaathu. kudikkum neerai min uruperukkiyil paartthaal thannerai kudikkave mudiyaathu.
    athaipolthaan intha mozhiyum.athan payanpaadum.

  10. மே 27, 2010 5:18 பிற்பகல்

    கஷ்டகாலம்……ஆனா இன்னும் எத்தனை வருடம்/காலத்துக்குத்தான்னு தெரியல! பகிர்வுக்கு நன்றி.

  11. மே 27, 2010 6:09 பிற்பகல்

    ayya ungaludaiya nakkalgalin ullarththam unarghiren! aanaal nam vealaigalellaam seyyaamal chennaiyil TMIZHAR YEZHUCHCHI IYAKKATHTHINAR 10,000-KADAIGALAI TAMIZHPADUTHTHUM SEYALGALIL YEEDUPATTU idhuvarai 500 kku mearppatta kadaigal nalla TAMIZHPEYARGALAI THAANGHI NIRKKINRANA , NAMMAAL MUDINDHAAL 5KADAIGALAAVADHU TAMIZHIL MAARA MUYARCHCHI YEDUPPOAM! ORU KURIPPITTA KUDUMBANGALAI NAMBI TAMIZHUM ILLAI ,TAMIZHANUM ILLAI! KAALAM PADHIL SOLLUM…

  12. மே 27, 2010 6:24 பிற்பகல்

    அன்பருக்கு,

    //Romba suttham paarkka koodaathu. kudikkum neerai min uruperukkiyil paartthaal thannerai kudikkave mudiyaathu. athaipolthaan intha mozhiyum.athan payanpaadum.//

    “உங்கள் தோலை நுண்ணோக்காடியில் பார்த்திருக்கிறீர்களா? கோடிக்கணக்கான சிறு சிறு பூச்சிகளும் பிற நுண்ணுயிரிகளும் நிறைந்திருக்கும்; நாளைக்கு என் மருத்துவமனைக்கு வாருங்கள், பார்க்கலாம்!” என்றார் ஒருமுறை என் மருத்துவ நண்பர். அவர் சொல்லி ஏறத்தாழ முப்பது ஆன்டுகள் ஆகிவிட்டன. மருத்துவமனைக்கு எத்தனையோ தடவை சென்று அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். ஆனால் இன்றுவரை நுண்ணோக்காடியில் தோலைப் பார்க்கும் எண்ணம் எழவே இல்லை.

    தோலில் நுண்ணுயிரிகள் இருப்பது வேறு; புண் ஏற்பட்டு அதில் சீழ் வைத்துப் புரையோடி நாறிக் கிடப்பது வேறு.

    குடிநீரில் நுண்ணுயிரிகள் இருப்பது வேறு; மனிதக் கழிவுகள் கலப்பது வேறு.

  13. மே 27, 2010 6:30 பிற்பகல்

    அன்பருக்கு,

    //கஷ்டகாலம்……ஆனா இன்னும் எத்தனை வருடம்/காலத்துக்குத்தான்னு தெரியல! //

    இன்னும் எத்தனை தலைமுறை கழிந்தாலும் நிலைமை மாறுமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் வருங்காலத் தலைமுறையினர் காலத்தில் என்றேனும் நிலைமை மாறும் என்று எதிர்பார்ப்போம் ஐயா.

  14. மே 27, 2010 6:42 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //TMIZHAR YEZHUCHCHI IYAKKATHTHINAR 10,000-KADAIGALAI TAMIZHPADUTHTHUM SEYALGALIL YEEDUPATTU idhuvarai 500 kku mearppatta kadaigal nalla TAMIZHPEYARGALAI THAANGHI NIRKKINRANA//

    நல்ல முயற்சி; அவர்கள் நம் சமுதாயத்தின் நன்றியறிதலுக்கு உரியவர்கள்; வாழ்க.

    //NAMMAAL MUDINDHAAL 5KADAIGALAAVADHU TAMIZHIL MAARA MUYARCHCHI YEDUPPOAM!//

    நீங்கள் சொல்வது சரிதான் ஐயா; ஆனால் மொழி ஆர்வலர்களே முன்வந்து எல்லாவற்றையும் செய்தல்வேண்டும் என்றால் வணிகர்களுக்கு மொழி குறித்துப் பொறுப்புணர்ச்சி சிறிதேனும் வேண்டாவா?

    //ORU KURIPPITTA KUDUMBANGALAI NAMBI TAMIZHUM ILLAI ,TAMIZHANUM ILLAI! KAALAM PADHIL SOLLUM…//

    விளங்குகிறது ஐயா.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  15. மே 27, 2010 8:17 பிற்பகல்

    KADAIKAL ,NIRUVANAGKALUKKU MATTUM INTHA “TAMIL” UTHTHARAVU POTHUMAA???SUN T V , KTV, CAPTAIN TV , POLIMAR TV , SS MUSIC –PONDRA “TAMIL” TV NIRUVANAGKALUKKU ITHU PORUNTHATHA ???? VAALZHHA VALAMUDAN YENDRU ILAKKANA PILZHAIUDAN YEZHUTHUM MAHARISHI NIRUVANAM INIMEL “VAZHHA VALATHTHUDAN” YENDRU YEZHUTHUMAA???

  16. மே 27, 2010 9:14 பிற்பகல்

    அன்பருக்கு,

    //KADAIKAL ,NIRUVANAGKALUKKU MATTUM INTHA “TAMIL” UTHTHARAVU POTHUMAA???SUN T V , KTV, CAPTAIN TV , POLIMAR TV , SS MUSIC –PONDRA “TAMIL” TV NIRUVANAGKALUKKU ITHU PORUNTHATHA ????//

    தமிழக அரசுக்கே வெளிச்சம்!

    //VAALZHHA VALAMUDAN YENDRU ILAKKANA PILZHAIUDAN YEZHUTHUM MAHARISHI NIRUVANAM INIMEL “VAZHHA VALATHTHUDAN” YENDRU YEZHUTHUMAA???//

    `வளத்துடன்’ என்னும் சொல் பெரிதும் பயின்று வந்தாலும் `வளமுடன்’ (வளமொடு) என்னும் சொல்லும் இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளது ஐயா.

  17. மே 28, 2010 9:16 பிற்பகல்

    வணக்கம் ஐயா, எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து படிக்கின்றேன். நல்ல முயற்சி… தொடர்க!
    தமிழ்நாட்டிலுள்ள நோய் இங்கும் பரவியுள்ளதை அம்பலப்படுத்துங்கள். இங்குள்ள சில வணிகர்களும் இத்தகைய செயலை மேற்கொண்டுள்ளனனர். இங்கும் “தமிழ்”, “தமிங்கிலிஷ்”தான்.

  18. மே 29, 2010 8:17 மு.பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //எப்படி இருக்கின்றீர்கள்?//

    திருவருள் துணையுண்டு; நலமாய் இருக்கிறேன் ஐயா; உங்கள் அன்புக்கு நன்றியறிதல் உடையேன்.

    //தமிழ்நாட்டிலுள்ள நோய் இங்கும் பரவியுள்ளதை அம்பலப்படுத்துங்கள். இங்குள்ள சில வணிகர்களும் இத்தகைய செயலை மேற்கொண்டுள்ளனனர். இங்கும் “தமிழ்”, “தமிங்கிலிஷ்”தான்.//

    தமிழகமாய் இருந்தால் என்ன, மலேசியாவாக இருந்தால் என்ன? எங்கிருந்தாலும் தமிழர் ஓரினம்தானே ஐயா, நம் இனத்தின் `தனித்தன்மை’ நம்மைவிட்டு எங்கே போய்விடும்?

    இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு
    இன்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
    கனியைப் பிழிந்திட்ட சாறு – எங்கள்
    கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!

    எனப் பாவேந்தர் பாடியது இன்று பொருந்தும் என்று தோன்றவில்லை.

    இனிமைத் `தமிங்கிலீஷ்’ எமது – எமக்கு
    இன்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
    கனியைப் பிழிந்திட்ட சாறு — எங்கள்
    கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!

    என்று `திருத்திப்’ பாடினால் இன்றுள்ள நிலைமைக்குப் பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது ஐயா.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  19. மே 29, 2010 9:30 மு.பகல்

    மனித கழிவான மலத்தை தின்று உயிர் வாழும் பன்றியைக் கொன்று
    அதன் இறைச்சியை ருசித்து தின்னும் மனித மிருகங்களும் இவ்வுலகில் ஏராளம் உண்டு.

  20. மே 29, 2010 11:03 மு.பகல்

    அன்பருக்கு,

    //மனித கழிவான மலத்தை தின்று உயிர் வாழும் பன்றியைக் கொன்று
    அதன் இறைச்சியை ருசித்து தின்னும் மனித மிருகங்களும் இவ்வுலகில் ஏராளம் உண்டு.//

    ?

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers