பொருளடக்கத்திற்கு தாவுக

திருமணம் ஆன ஆண்களுக்கு மட்டும்…!

மே 25, 2010

tmnn01 மாலை நேரம்.

வீட்டுக்கு வருகிறீர்கள்.

நல்ல பசி; வயிற்றைக் கிள்ளுகிறது.

சாப்பிட உட்காருகிறீர்கள்.

மேசையில் உணவு ஏதுமில்லை.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. மனைவிக்கு உதவி செய்யச் சமையலறைக்குச் செல்வீர்கள்.

ஆ. தொலைக்காட்சி பார்த்தபடி பொறுமையோடு காத்திருப்பீர்கள்.

இ. `விருட்’டென்று எழுந்து ஏதேனும் உணவகத்துக்குச் செல்வீர்கள்.

ஈ. எகிறிக் குதித்து எட்டு ஊருக்குக் கேட்குமாறு காட்டுக்கூச்சல் போடுவீர்கள்.

உங்கள் விடை என்ன?

உங்கள் விடை `அ’ என்றால்… உங்கள் மனைவி தமன்னாவாக இருக்கவேண்டும்; இல்லையெனில் கிட்…டத்…தட்…ட… ஒரு தமன்னாவாக இருக்கவேண்டும்.

`ஆ’ என்றால்… அண்மையில்தான் உங்களுக்குத் திருமணம் ஆகி இருக்கவேண்டும்.

`இ’, `ஈ’ – இவை இரண்டுக்கும் விளக்கம் தேவை இல்லை. `தமிழ்கூறு நல்லுலகில்’ ஏறத்தாழ ஆண்கள் எல்லாரும் இப்படித்தான் என்று சொன்னால் தவறாகாது.

மேலே உள்ள நான்கு விடைகளுக்கு அப்பால் ஐந்தாவது விடை ஒன்று இருக்கிறது. `ஐந்தாவது விடை’ என்பதைவிட (உங்கள் விடை `அ’, `ஆ’ இல்லையென்றால்) இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் கைக்கொள்ள `மிகச் சிறந்த வழி’ என்பது பொருந்தும்.

அந்த `மிகச் சிறந்த வழி’: இங்கு

- அ. நம்பி

22 மறுமொழிகள் leave one →
  1. மே 25, 2010 3:36 பிற்பகல்

    கொளுத்திட்டாப் போச்சு….

    :-)

  2. மே 25, 2010 4:06 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //கொளுத்திட்டாப் போச்சு…. :-)//

    மிக மிக `ஆபத்தான’ ஆள்போலத் தெரிகிறதே ஐயா!

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. மே 25, 2010 4:15 பிற்பகல்

    அய்ய்ஹா … எனக்கு பொண்டாட்டியே இல்லையே…

  4. மே 25, 2010 4:57 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //அய்ய்ஹா … எனக்கு பொண்டாட்டியே இல்லையே…//

    இருந்தால்…? மேலே அன்பர் `அகல்விளக்கு’ சொன்னாற்போல் `கொளுத்திட்டாப் போச்சு….’ என்பீர்களா?

    கொளுத்துவது இருக்கட்டும்; நீங்கள் வழக்குரைஞர்! இப்படி ஓர் `ஆபத்தான’ ஆலோசனையைச் சொன்னதற்காக என்னை ஏதும் வழக்கில் சிக்கவைத்து நீதிமன்றத்துக்கு இழுத்துவிடாதீர்கள் ஐயா. என்னால் அவ்வாறெல்லாம் அலைய முடியாது; நான் அகவை கூடியவன்; என்பால் இரக்கம் காட்டி என்னை விட்டுவிடுங்கள்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  5. மே 26, 2010 1:12 மு.பகல்

    என்னா கொலைவெறி!

  6. மே 26, 2010 9:02 மு.பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //என்னா கொலைவெறி!//

    கொலைவெறியா? எனக்கா? ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் உத்தமனுக்கு (நான்தான்….!) ஏன் ஐயா இந்த அவப்பெயர்?

    உள்ளூரில் (மலேசியா) வெளிவரும் ஓர் ஆங்கில நாளிதழில் இந்தச் செய்தியைப் படித்தேன்.

    `குடும்பப் பிரச்சினை’யைத் தீர்க்க வழி தெரியாமல் `நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்’ ஆக அவதிப்படும் கணவர்களுக்கு `ஒரு நல்ல வழி காட்டுவோம்’ என்று நினைத்தேன்; செய்தியை இங்கு வெளியிட்டேன்.

    ஒருமுறை தீ வைத்துவிட்டால் மீண்டும் பிரச்சினை வருமா என்ன? எவ்வளவு சிறந்த வழி!

    `என் பரந்த உள்ளத்தையும் சமுதாய உணர்வையும் எல்லாருக்கும் உதவ நினைக்கும் மேலான எண்ணத்தையும்’ பாராட்டக்கூடாதா ஐயா?

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  7. மே 26, 2010 9:54 மு.பகல்

    PASI VANTHIDA PATHHTUM MARRANTHUPOM YENPTHU” THEE ” VAITHALAI SERTHTHU PATHINONTRAHA MAARRI VITTATHE !!

  8. மே 26, 2010 10:14 மு.பகல்

    அன்பருக்கு,

    காலம் மாறுகிறது ஐயா.

  9. மே 26, 2010 10:37 மு.பகல்

    //உங்கள் விடை `அ’ என்றால்… உங்கள் மனைவி தமன்னாவாக இருக்கவேண்டும்; இல்லையெனில் கிட்…டத்…தட்…ட… ஒரு தமன்னாவாக இருக்கவேண்டும். //

    :)

    எப்புடி இப்புடி எல்லாம் ?

  10. மே 26, 2010 11:10 மு.பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //:) எப்புடி இப்புடி எல்லாம் ?//

    உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன்… எனக்கு ஓர் ஐயம் தோன்றுகிறது. ஒருவேளை ஏதேனும் `கோளாறு’ இருக்குமோ? `கோளாறு’ என்னிடம்தானோ? ஒன்றும் விளங்கவில்லை ஐயா! (`கோளாறு’ முற்றிப்போகாமல் இருந்தால் சரி!)

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  11. மே 26, 2010 11:52 மு.பகல்

    //உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன்… எனக்கு ஓர் ஐயம் தோன்றுகிறது. ஒருவேளை ஏதேனும் `கோளாறு’ இருக்குமோ? `கோளாறு’ என்னிடம்தானோ? ஒன்றும் விளங்கவில்லை ஐயா! (`கோளாறு’ முற்றிப்போகாமல் இருந்தால் சரி!)

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.//

    ஆக அழகான மனைவி என்பவள் சேலைக்கடை பொம்மை எதுவும் செய்யாவிட்டாலும் கடைக்காரர் நாள் தோறும் சேலை மாற்றி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார் இல்லையா ?

  12. மே 26, 2010 12:18 பிற்பகல்

    அன்பருக்கு,

    //ஆக அழகான மனைவி என்பவள் சேலைக்கடை பொம்மை எதுவும் செய்யாவிட்டாலும் கடைக்காரர் நாள் தோறும் சேலை மாற்றி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார் இல்லையா ?//

    அப்படியா, அப்படி இல்லையா? நீங்கள் சொன்னால் சரிதான் ஐயா.

  13. மே 26, 2010 1:37 பிற்பகல்

    என்ன கொடுமை சார் இது

  14. மே 26, 2010 2:15 பிற்பகல்

    அம்மா,

    //என்ன கொடுமை சார் இது//

    எதைக் கொடுமை என்கிறீர்கள்? வீட்டை எரித்தாரே அந்தக் கிழவர், அதைச் சொல்கிறீர்களா? இல்லை, அந்தச் செய்தியை இங்கு எடுத்து எழுதி இருக்கிறானே இந்தக் கிழவன் (அ. நம்பி), இதைச் சொல்கிறார்களா?

    எது கொடுமையோ, என்ன கொடுமையோ, சிரியுங்கள்; சிரித்துவிட்டு விட்டுவிடுங்கள் அம்மா! சிரிப்பதற்காக எழுதப்பட்டதுதான் இந்த வரைவு!

    (உங்கள் பெயரைக்கொண்டு நீங்கள் பெண்ணென்று எண்ணி `அம்மா’ என விளிக்கிறேன். என் எண்ணம் தவறெனில் சொல்லுங்கள் – என்னைத் திருத்திக்கொள்வேன்.)

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  15. மே 26, 2010 10:59 பிற்பகல்

    கல்யாணமான புதிதில் இ யில் இருந்தேன். அப்போது அது செல்லுபடி ஆயிற்று.

    ஒரு பத்து வருஷம் கழித்து ஆவன்னா. இனா செல்லுபடி ஆகவில்லை.

    பிள்ளைகள் வளர்ந்ததும் ஈயன்னாவுக்குத் தாவினேன். இயலாமை!

    இப்போ அ தான். அ விலேயே ஸ்பெஷல் அ. உதவி கிதவி எல்லாம் கிடையாது.

    ஹி..ஹி…. நாந்தாங்க எல்லாம்!

    http://kgjawarlal.wordpress.com

  16. மே 27, 2010 9:02 மு.பகல்

    அன்பருக்கு,

    //இப்போ அ தான். அ விலேயே ஸ்பெஷல் அ. உதவி கிதவி எல்லாம் கிடையாது.

    ஹி..ஹி…. நாந்தாங்க எல்லாம்!//

    இதோ, மனிதருள் ஒரு மாமனிதர், ஆண்களுள் ஒரு மாணிக்கம்!

    திருமதி ஜவகர் கொடுத்துவைத்தவர்!

    வாழ்க!

  17. மே 27, 2010 10:01 மு.பகல்

    the manna has already entered in your mind.
    two to three articles appeared in your blog.on tamanna
    that is tamanna

  18. மே 27, 2010 10:36 மு.பகல்

    அன்பருக்கு,

    //the manna has already entered in your mind. two to three articles appeared in your blog.on tamanna that is tamanna//

    மேலே அன்பர் கோவி. கண்ணனுக்கு நான் எழுதிய மறுமொழியைப் பாருங்கள்; `ஒருவேளை ஏதேனும் `கோளாறு’ இருக்குமோ? `கோளாறு’ என்னிடம்தானோ? ஒன்றும் விளங்கவில்லை ஐயா!’ என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

    நீங்கள் சொல்வதுதான் அந்தக் கோளாறாக இருக்குமோ?

  19. மே 27, 2010 5:06 பிற்பகல்

    Kolaaru neenga kolaru pathigam padiyungal
    or nothing wrong in enjoying the beauty without corrupting the mind.

  20. மே 27, 2010 6:04 பிற்பகல்

    அன்பருக்கு,

    //nothing wrong in enjoying the beauty without corrupting the mind.//

    `சிந்தனையில் களங்கம் ஏற்படுமோ’ என்று அஞ்சும் நிலையில் நான் இல்லை ஐயா. உங்கள் விளக்கம் நன்று.

  21. ஜூன் 20, 2010 4:48 பிற்பகல்

    தமன்னா மாதிரி இருந்தா சமையலுக்கு உதவுவானேன்.. சமயலே நாம தான் செய்யனும். எதுக்கு வம்பு….ஹான்

  22. ஜூன் 20, 2010 5:32 பிற்பகல்

    அன்பருக்கு,

    //தமன்னா மாதிரி இருந்தா சமையலுக்கு உதவுவானேன்.. சமயலே நாம தான் செய்யனும். எதுக்கு வம்பு//

    தமன்னாவைப்போல் இருந்தால்…? சமையல் மட்டுந்தானா… இதர வீட்டு வேலைகளை எல்லாம் யார் செய்வது?

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers