பொருளடக்கத்திற்கு தாவுக

எதிர்காலத்துக்காக… விழுங்கு, விழுங்கு இப்போதே…!

மே 20, 2010

yp01

நல்ல முயற்சி; பாராட்டுக்கு உரிய முயற்சி.

இப்படி ஓணான் முதலிய சிறு உயிரினங்களைப் பிடித்து விழுங்கிப் பயிற்சி பெறுவது மிக நல்லது.

இப்போதே பயிற்சி பெற்றால்தான் நாளைக்கு வளர்ந்து பெரிய மலைப்பாம்பு ஆனவுடன் பெரிய விலங்குகளை எளிதாக விழுங்கலாம்.

பெரிய மலைப்பாம்புகளே பொறாமைப்பட்டுப் பெருமூச்சு விடும்வண்ணம் பெரிய பெரிய விலங்குகளை விழுங்கி ஏப்பமிட்டுக் காட்டில் பிற விலங்குகளுக்கு இடையே ஒரு `ராசா’வைப்போல் திகழலாம்; `ராச’வாழ்க்கை வாழலாம்.

- அ. நம்பி

வேலி ஓணானை விழுங்கிய மலைப்பாம்புக் குட்டி

புதன் 19, மே 2010

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரை மணிமூர்த்தீஸ்வரம் கிராமம். ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது அதிகமான மலைப்பாம்புகள் கரையோரத்தில் ஒதுங்கும்.

மலைப்பாம்புகள் அவ்வப்போது கோழி மற்றும் ஆடுகளை விழுங்குவது நடந்துவரும். இந்நிலையில் தாமிரபரணியின் ஆற்றுப்படுகையின் கரையோரத்தில் வேலி ஓணானைப் பிடித்து விழுங்கிய மலைப்பாம்புக் குட்டி.

குட்டி மலைப்பாம்பு இன்று வேலி ஓணானைப் பிடித்து விழுங்குவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

செய்தியும் படமும்: Tuty online

4 மறுமொழிகள் leave one →
  1. மே 20, 2010 4:09 பிற்பகல்

    NANDRAAHA PAYIRCHI EDUTHAAL MALAIYAIK KOODA VILUNKALAAM !! IPPOTHU AATRU MANALAI VILUNGI PAYIRCHI YEDUPPATHAI THANATHU RAJA VILIYAL PARTHU RASIKKUM “THALAMAI” , MALAYAI VILUNGUM POTHU KAITHATTI RASIKKATHA!!!!

  2. மே 20, 2010 5:54 பிற்பகல்

    அன்பருக்கு,

    //NANDRAAHA PAYIRCHI EDUTHAAL MALAIYAIK KOODA VILUNKALAAM !! IPPOTHU AATRU MANALAI VILUNGI PAYIRCHI YEDUPPATHAI …//

    `முதலில் மணலை விழுங்கிப் பயிற்சி எடுத்தால் பின்னர் மலையையே விழுங்கலாம்.’ அருமையாகச் சொல்கிறீர்கள் ஐயா.

    (தமிழில் எழுதுவது எளிது ; வலப்பக்கம் கீழே `தமிழில் எழுத’ (Google transliteration) என்றிருப்பதை முயன்று பார்க்கலாமே!)

  3. மே 25, 2010 11:25 பிற்பகல்

    ஆத்தி, இந்த படத்தை எங்க பிடிச்சீங்க. ஒரே பயமா இருக்கு.

  4. மே 26, 2010 8:49 மு.பகல்

    அன்பருக்கு,

    //…ஒரே பயமா இருக்கு.//

    பயம் எதற்கு ஐயா? எவ்வித அச்சமும் இல்லாமல் `ராசா’வைப்போல் இருக்கலாமே!

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers