பொருளடக்கத்திற்கு தாவுக

காதல் வசியம், ஏவல், பில்லி சூனியம், செய்வினை!

மார்ச் 22, 2010

eps05

பணம் கிடைக்கிறது என்பதற்காக எந்த விளம்பரம் ஆயினும் வெளியிடுவதுதான் ஊடகங்களின் சமுதாயக் கடப்பாடா?

பணத்துக்காக என்ன வேண்டுமாயினும் செய்யலாம் என்றால் அதன் எல்லைதான் என்ன?

பணத்துக்காகக் கண்டவருக்கெல்லாம் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் பெண்களுக்குப் பரத்தையர் (விபசாரிகள்) என்று பெயர் சூட்டுகிறோம்.

பணத்துக்குக்காக எந்த விளம்பரத்துக்கும் பக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஊடகங்களுக்கு என்ன பெயர் சூட்டுவது?

ஒரு நாளிதழில் நேற்று வெளிவந்த சில வரி விளம்பரங்கள் கீழே:

eps01 eps03 eps04 eps02

ஒரு பழைய செய்தி; அதே நாளிதழில் வெளிவந்தது:

காதலனை வசியம் செய்வதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் நூதன மோசடி
வடபழனி மர்மயோகி சித்தர் மீது பரபரப்பு புகார்

சென்னை, மார்ச்.10-

காதலனை வசியம் செய்து சேர்த்து வைப்பதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை வடபழனியில் வசிக்கும் மர்மயோகி மண் சித்தர் மீது பட்டதாரி பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பட்டதாரி பெண்

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் லதா. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் சென்னை திருவான்மியூரில் தங்கி இருந்து, வேலை பார்த்து வருகிறார். இவர் வாலிபர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் காதலர் திடீரென்று மனம் மாறி இவரை விட்டு விலகி செல்ல ஆரம்பித்தார். இதனால் லதா மனம் உடைந்து காணப்பட்டார். eps06  

காதலனை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இதற்காக சென்னை வடபழனியில் பழனியாண்டவர் தெருவில் ஆசிரமம் அமைத்து வசிக்கும் மர்மயோகி மண் சித்தர் உதவியை நாடினார்.

அவர் தங்கத்தில் சிவலிங்கம் டாலர் செய்து பூஜையில் வைத்து தருகிறேன், அதை காதலனிடம் கொடுத்தால், அவர் அப்படியே வசியப்பட்டு உங்கள் காலடியில் கிடப்பார் என்று தெரிவித்தார். இதற்காக ரூ.20 ஆயிரம் பணம் செலவாகும் என்று மண்சித்தர் கூறினார்.

வசியம் ஆகவில்லை

இதை உண்மை என்று நம்பி லதா முதல் கட்டமாக ரூ.7 ஆயிரம் கொடுத்ததாக தெரிகிறது. சொல்லியபடி சித்தரும் தங்கத்தில் சிவலிங்கம் டாலரை செய்து கொடுத்தார். ஆனால் சித்தர் கூறியபடி காதலன் வசியம் ஆகவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லதா சென்னை வடபழனி போலீசில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இது குறித்து மர்மயோகி மண் சித்தர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது உண்மையான பெயர் ராமச்சந்திரன். நான் எலக்ட்ரிக்கல் தொழில் செய்கிறேன். கடந்த 15 வருடங்களாக வடபழனி பகுதியில் வசிக்கிறேன். நான் யாரையும் ஏமாற்றவில்லை. தங்க சிவலிங்க டாலரை பூஜை செய்து அணிந்து கொண்டால் நினைத்த காரியம் நடக்கும். லதா எனக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே வங்கி காசோலையாக கொடுத்தார். அவர் போலீசில் புகார் கொடுத்தவுடன் அவர் கொடுத்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் நான் தங்கத்தில் கொடுத்த சிவலிங்க டாலரை லதா திருப்பி தரவில்லை. அதைக் கேட்டதற்கு தொலைந்து போய் விட்டதாக கூறி விட்டார்.

கொள்ளை

நான் வசிக்கும் ஆசிரமத்தை உடைத்து அதற்குள் இருந்த, விலை உயர்ந்த பன்முக ருத்திராட்ச மாலை, 30 கிலோ செம்பு, வெள்ளி பாத்திரம் மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை யாரோ கொள்ளை அடித்து சென்று விட்டனர். அது பற்றி நானும் வடபழனி போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.

இவ்வாறு மண் சித்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மலேசியத் தமிழ் ஊடகங்கள் எப்படி?

பணத்துக்காக  இனத்தை  விற்கும்…

ஒப்புக்கு அறவுரையும் பணத்துக்கு…

- அ. நம்பி

7 மறுமொழிகள் leave one →
  1. காளிதாசன் நாகப்பன் நிரந்தரத் தொடுப்பு
    மார்ச் 22, 2010 12:49 பிற்பகல்

    ஐயா, இந்த சாமியார்களின் கதை நமக்கு தெரிந்தவைதானே, மக்கள் மூடர்களாக இருக்கும் வரைதான் இவர்களின் ஆட்டம் எல்லாம். சமூதாயம் திருந்துமா? எப்போது? எப்படித்தான் திருத்துவது? நல்லவர்களின் ஆதங்கம் இது.

  2. மார்ச் 22, 2010 1:29 பிற்பகல்

    அன்பருக்கு,

    //இந்த சாமியார்களின் கதை நமக்கு தெரிந்தவைதானே//

    இந்த ஏவல், பில்லி சூனியம், வசியம் முதலியவை சாமியார்கள் தொடர்புடையவை மட்டும் அல்ல; இவற்றைச் செய்பவர்கள் ஒரு `பல்முனைக் கூட்டணி’போல் செயல்படுகிறார்கள்; விளம்பரங்களைப் படித்துப் பாருங்கள் ஐயா.

    //சமூதாயம் திருந்துமா? எப்போது? எப்படித்தான் திருத்துவது?//

    `சமுதாயம் திருந்திவிடக்கூடாது’ என்று ஊடகங்கள் முனைந்து நிற்கின்றன என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

  3. பெ.கந்தசாமி, சிரம்பான், மலேசியா நிரந்தரத் தொடுப்பு
    மார்ச் 23, 2010 12:16 மு.பகல்

    நாம் உழைப்பை ஏமாற்றலாம். ஆனால், உழைப்பு நம்மை ஏமாற்றாது. இதை அனைவரும் உணர வேண்டும். பில்லி, சூனியம் போன்றவை மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படுபவை. இந்நவீன யுகத்தில் இதை நம்புவது முட்டாள் தனம்தான். உண்மையான இறைபக்தியோடு வணங்கினால் போதும். எல்லாம் நன்மையாகவே முடியும். பணத்திற்காக பாதை தவறக்கூடாது.

  4. பெ.கந்தசாமி, சிரம்பான், மலேசியா நிரந்தரத் தொடுப்பு
    மார்ச் 23, 2010 12:20 மு.பகல்

    பணத்திற்காகப் பாதை தவறினால் படுகுழிதான் மிஞ்சும்.

  5. மார்ச் 23, 2010 9:30 மு.பகல்

    அன்பருக்கு,

    //நாம் உழைப்பை ஏமாற்றலாம். ஆனால், உழைப்பு நம்மை ஏமாற்றாது. இதை அனைவரும் உணர வேண்டும். //

    உண்மைதான் ஐயா.

    //பில்லி, சூனியம் போன்றவை மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படுபவை. இந்நவீன யுகத்தில் இதை நம்புவது முட்டாள் தனம்தான். //

    நம்புவது முட்டாள்தனம்தான்; ஆனால் நம்பாதவர்களையும் நம்பச் செய்யும் அளவுக்கு அவர்கள் பரப்புகை செய்கிறார்கள்; அவர்கள் தரும் பணத்துக்காக விளம்பரங்களை வெளியிட்டு ஊடகங்களும் துணைபோகின்றன.

    //உண்மையான இறைபக்தியோடு வணங்கினால் போதும். எல்லாம் நன்மையாகவே முடியும். பணத்திற்காக பாதை தவறக்கூடாது.//

    சரியாகச் சொன்னீர்கள் ஐயா.

  6. NA.JEYABALAN MANGAI, ULU TIRAM, JOHOR, Malaysia நிரந்தரத் தொடுப்பு
    மார்ச் 24, 2010 1:30 மு.பகல்

    VANAKKAM NANBARGALE. MALAYSIA ITAZLGALILUM MANTIRAM MAAYAM, POONRA VILAMBARANGGALUM, MADRUM PARISU KULUKKU ENNGALAI PADRIYA VILAMBARANGGALUM. VANTUKKONDUTAN IRUKKIRATU. PATTIRIKKAI KALUKKUM SAMUTAAYA SINTANAI VENDUM. SINTIPPARGALA?

  7. மார்ச் 24, 2010 10:26 மு.பகல்

    அன்பருக்கு,

    //MALAYSIA ITAZLGALILUM MANTIRAM MAAYAM, POONRA VILAMBARANGGALUM, MADRUM PARISU KULUKKU ENNGALAI PADRIYA VILAMBARANGGALUM. VANTUKKONDUTAN IRUKKIRATU. //

    விளம்பரங்களின்வழி வரும் வருமானமே அவர்களின் குறிக்கோள் ஐயா.

    //PATTIRIKKAI KALUKKUM SAMUTAAYA SINTANAI VENDUM. //

    வேண்டும் என்பது உண்மைதான்; ஆனால்…

    //SINTIPPARGALA?//

    சிந்திக்கத் தொடங்கினால் விளம்பர வருமானம் போய்விடுமே ஐயா; எனவே சிந்திக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers