பொருளடக்கத்திற்கு தாவுக

பொடிக்கதைகள்

பெப்ரவரி 15, 2010

நெப்போலியனின் மண்டையோடு! kk01

ருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கால மண்டையோடுகளுள் ஒன்றைச் சுட்டிக்காட்டி "இது நெப்போலியனின் மண்டையோடு!" என்று தம் மகனிடம் சொன்னார் தந்தை.

“இதுவா நெப்போலியனின் மண்டையோடு? இவ்வளவு சிறியதாக இருக்கிறதே?” என்று கேட்டான் மகன்.

“இதுகூடவா தெரியவில்லை உனக்கு? நெப்போலியன் சிறுவனாய் இருக்கையில் எடுக்கப்பட்டது இந்த மண்டையோடு!” என்று எரிந்து விழுந்தார் தந்தை.

எங்கள் நாடென்ன இளைத்ததா?

kk02 னைத்துலக அகழாய்வியல் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

“எங்கள் நாட்டில் தொல்பொருள் ஆய்வுக்காக மண்ணைத் தோண்டும்போது கம்பிகள் புதையுண்டு கிடந்ததைக் கண்டோம். பழங்காலத்திலேயே எங்கள் நாட்டில் தந்திமுறை இருந்திருக்கிறது என்பதை இதிலிருந்து நீங்கள் அறிந்துகொள்ளலாம்!” என்று பெருமையோடு கூறினார் ஆராய்ச்சியாளர் ஒருவர்.

“எங்கள் நாட்டில் மண்ணினுள்ளே அப்படிக் கம்பிகள் எவையும் காணப்படவில்லை. எனவே பழங்காலத்திலேயே எங்கள் நாட்டில் கம்பியில்லாத் தந்திமுறை இருந்திருக்கிறது என்பதை இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்!” என்றார் வேறொரு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்.

அடுத்த கேள்வி என்ன? kk03

புகழ்பெற்ற சோதிடர் ஒருவர் தம் எதிரில் அமர்ந்திருந்தவரிடம் "நீங்கள் மூன்று கேள்விகள் மட்டும் கேட்கலாம்; கட்டணம் முப்பது வெள்ளி!” என்றார்.

“மூன்றே மூன்று கேள்விகளுக்குக் கட்டணம் முப்பது வெள்ளி என்பது அதிகமில்லையா?” என்று கேட்டார் வந்தவர்.

“ஆமாம்! சரி, உங்களின் இரண்டாவது கேள்வி என்ன?” என்றார் சோதிடர்.

பாவம் மருத்துவர்!

kk04 சுற்றுலாப் பயணிகளிடம் தன் நாட்டைப்பற்றி வெகுவாகப் புகழ்ந்துகொண்டிருந்தான் வழிகாட்டி.

“எங்கள் நாட்டில் யாருக்கும் நோய் வருவதே இல்லை. அதனால் யாரும் இங்கு இறப்பதே இல்லை!” என்று பெருமையாகச் சொன்னான்.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தெருவில் ஒரு பிண ஊர்வலம் வந்தது.

“எவரும் இங்கு இறப்பதே இல்லை என்றாயே! இதோ ஒரு பிண ஊர்வலம் வருகிறதே?” என்று இடக்காகக் கேட்டார் சுற்றுலாப் பயணி ஒருவர்.

“ஓ! அதைக் கேட்கிறீர்களா? அவர்தாம் எங்கள் நாட்டிலிருந்த ஒரே ஒரு மருத்துவர்! பாவம், வருமானம் இல்லாததால் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டார்!” என்றான் வழிகாட்டி.

யார் மடையன்? kk05

வேலையாளின் அசட்டுத்தனத்தைத் தாங்க முடியவில்லை அவரால்.

“செய்வதைத் தவறாகச் செய்துவிட்டு, நான் அப்படித்தான் சொன்னேன் என்கிறாயே! நீ மடையனா, நான் மடையனா?” என்று கூச்சலிட்டார்.

“அது என்னவோ எனக்குத் தெரியாது ஐயா! ஆனால் நீங்கள் நிச்சயம் மடையன் ஒருவனை வேலைக்கு அமர்த்தியிருக்க மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!” என்றான் வேலையாள் அமைதியாக.

யார் அவர்?

kk06 மிகப் பெரிய கூட்டம் கூடி இருந்தது.

ஓர் எலுமிச்சம்பழத்தை எடுத்து நன்கு பிழிந்தார் மல்லர் (பயில்வான்). சாறு முழுதும் இறங்கிவிட்டது.

சக்கையைக் கூட்டித்தினருக்குக் காட்டி, "உங்களுள் யாரேனும் இதைப் பிழிந்து மேலும் ஒரு துளிச் சாற்றை வெளிக்கொணர்வீர்கள் என்றால் நான் ஆயிரம் வெள்ளி பரிசாகத் தருகிறேன்!” என்று அறைகூவல் விடுத்தார்.

அறைகூவலை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.

சற்று நேரம் கழித்து நோஞ்சான் பேர்வழி ஒருவர் மேடைக்கு வந்தார்; பழச்சக்கையை வாங்கினார்; பிழிந்தார்; சாறு கொட்டியது.

மருண்டுபோன மல்லர், "ஐயா, நீங்கள் யார்?” என்று கேட்டார்.

“நானா? நான் வருமான வரி அதிகாரி!” என்றார் வந்தவர்.

kk07

(நனவுகள்: 23.8.2009, 28.08.2009 – சுவை: மார்ச்சு 1970)

- அ. நம்பி

6 மறுமொழிகள் leave one →
  1. பெப்ரவரி 15, 2010 3:21 பிற்பகல்

    very very funny,, ” add more like this..thnx to share …

  2. பெப்ரவரி 15, 2010 3:42 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //very very funny,, ” add more like this..thnx to share …//

    மகிழ்ச்சி; இந்தக் கதைகளைப்போல் மேலும் எழுத முயல்வேன்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. பெப்ரவரி 15, 2010 8:27 பிற்பகல்

    ப‌ட‌ங்க‌ளும் க‌தையும்

    அருமை

    வாழ்த்துக‌ள்

  4. பெப்ரவரி 15, 2010 8:55 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //ப‌ட‌ங்க‌ளும் க‌தையும்

    அருமை//

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறியறிதல் உடையேன்.

  5. ஜூலை 31, 2010 2:27 மு.பகல்

    நனவுகள் வளர
    நல் வாழ்த்துக்கள்

  6. ஜூலை 31, 2010 4:18 மு.பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //நனவுகள் வளர
    நல் வாழ்த்துக்கள்//

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers