பொருளடக்கத்திற்கு தாவுக

இந்த மீன்கள்… உங்களுக்காக!

ஜனவரி 28, 2010

fh01a மிக விரைவாக நீந்தக்கூடிய மீன் (sailfish) இது. இதன் விரைவு மணிக்கு 62 கல் (62 mph; 100 km/h) ஆகும். இந்த மீன் எட்டு அடிக்கும் கூடுதலாக வளரும்.
fh02a தென் அமெரிக்காவில்  நன்னீரில் வாழும் நான்கு அடி நீள மீன் (poraque) இது. இரையைப் பிடிக்கவும் தற்காப்புக்காகவும் தன் உடலிலிருந்து மின்சார ஆற்றலை வெளிப்படுத்தும் இயல்புடையது. 650 வாட் அளவு மின்சாரத்தை இதனால் வெளிப்படுத்த இயலும். விலாங்கு (electric eel) என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் இது விலாங்கு அன்று.
fh03 ண்ணீருக்கு வெளியிலும் மூச்சிழுக்கும் (சுவாசிக்கும்) திறனுடைய மீன் (lungfish) இது. வாழும் சதுப்புநில நீர்நிலையில்  நீர் வற்றிவிட்டால் மண்ணைத் தோண்டிக்கொண்டு உள்ளே சென்றுவிடும் இந்த மீனால் மண்ணுக்குள் நான்கு ஆண்டு காலம் உயிர்வாழ முடியும். அப்போது தன் நுரையீரல்களைக் கொண்டு மூச்சிழுக்கும். ஆறு அடி ஐந்து அங்குலம் நீளம் வரை இந்த மீன் வளரும்.
fh04aல்லா மீன்களும் குளிர் இரத்தம் உடையவையே என்றாலும் இந்த மீனினம்தான் (icefish) மிகுந்த குளிர்ச்சியான இரத்தம் உடையது. அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள கடலில் வாழும் இந்த மீனின் இரத்தத்தில் உறைதலுக்கு எதிரான ஆற்றல் (antifreeze) இயல்பாகவே உள்ளது. பிற மீன்கள் இறந்துபோகும் தட்பவெப்ப நிலையிலும் (0°C, 32°F) இந்த மீன் உயிர்வாழும். இரண்டு அடி நான்கு அங்குலம் வளரக்கூடியது இந்த மீன்.
fh05a ன்னீர் மீன்களுள் மிக மிக ஆபத்தான மீன் தென் அமெரிக்காவின் சில ஆறுகளுள் காணப்படும் பிரான்யா (piranha) ஆகும். எட்டு அங்குலம் முதல் ஓர் அடி நீளம் வரைக்கும் வளரக்கூடிய இந்த மீன் எப்போதும் கூட்டமாகவே திரியும் இயல்புடையது. ஒரு கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் இருக்கும். எதிர்பாராமல் ஆற்றில் விழும் குதிரை முதலிய விலங்குகளின் இறைச்சியைச் சில மணித்துளிகளில் ஒரு பிரான்யா மீன்கூட்டம் தின்று தீர்த்துவிடும்; மாந்தருக்கும் இதே நிலைதான்.
fh06a 
 
 

முட்டை இடும் உயிரினங்களுள் மிகுதியான எண்ணிக்கையில் முட்டை இடுவது இந்த மீன் (ocean sunfish) ஆகும். ஒரேவேளையில் முப்பது கோடி முட்டைகளை இடும். பதின்மூன்று அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த மீனின் எடை 2000 கிலோகிராமுக்கும் மிகுதியாகும்.

fh07

 
 

சுறாமீன்களுள் மிகச் சிறியது இது (dwarf lantern shark). முழுமையாக வளர்ந்தால் இந்தச் சுறா ஆறு அங்குல நீளம் மட்டுமே இருக்கும். அடிப்பாகத்தில் ஒளி உருவாக்கும் உறுப்பு உள்ளது.

fh08ன்னீர் மீன்களுள் மிகச் சிறியதும் மிகக் குறைவான எடை கொண்டதுமான மீன் இது (dwarf pygmy goby). பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆறுகளில் காணப்படும் இந்த மீனின் நீளம் எட்டு மில்லிமீட்டர் (0.8 cm; ⅓ inches) ஆகும். எடை? 250 மீன்களைச் சேர்த்தால் ஒரு கிராம் எடை இருக்கும். (ஒரு மீனின் எடை நான்கு முதல் ஐந்து மில்லிகிராம் ஆகும்.)
fh09a ன்னீர் மீன்களுள் மிக நீளமானது அரபாய்மா (arapaima) ஆகும். தென் அமெரிக்க ஆறுகளில் வாழும் இந்த மீன் பதினான்கு அடி ஒன்பது அங்குல நீளம் வளரக்கூடியது. எடை இருநூறு கிலோகிராம் (440 பவுண்டு).
fh10

ந்த மீன் (Mekong giant catfish) நன்னீர் மீன்களுள் மிகுந்த எடை கொண்டது. இதன் நீளம் அரபாய்மா மீனைவிடக் குறைவுதான் என்றாலும் எடை மிகுதி ஆகும். முந்நூறு கிலோகிராம் (670 பவுண்டு) வரை எட்டும். (படத்தில் உள்ள மீனின் நீளம்: 9 அடி; எடை: 646 பவுண்டு). கம்போடியாவின் மீகோங் ஆற்றுப் பகுதியில் இந்த மீன்கள் வாழ்கின்றன.

fh11a
 

து திமிங்கிலச் சுறா (whale shark). மீன்களுள் இதுவே ஆகப் பெரியது.  46 அடி நீளம் வளரும். எடை பதினான்கு டன்னுக்கும் (14,000 கிலோகிராம்) மிகுதி ஆகும்.

- அ. நம்பி

4 மறுமொழிகள் leave one →
  1. ஜனவரி 28, 2010 3:30 பிற்பகல்

    good collection

  2. ஜனவரி 28, 2010 3:58 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //good collection//

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. பெப்ரவரி 5, 2010 8:34 பிற்பகல்

    விபரணச்சித்திரங்களில் இவற்றைப் பார்த்துள்ளேன். நல்ல தொகுப்பு.
    ஒரு தகவல் இந்த திமிங்கிலச் சுறாவின் குட்டியை இது வரை எந்த ஆய்வாளரும் பார்க்கவில்லையாம்.
    இதன் இனப்பெருக்க ரகசியம் இன்னும் புரியவில்லையாம். இது ஒரு தனிமை விரும்பி மீன். இது
    மிகப் பெரிய மீனாக இருந்தும் கடல் நீரில் உள்ள நுண்ணுயிர்களை வடித்து உண்டே உயிர் வாழுகிறதாம்.

  4. பெப்ரவரி 5, 2010 8:50 பிற்பகல்

    அன்பருக்கு,

    //ஒரு தகவல் இந்த திமிங்கிலச் சுறாவின் குட்டியை இது வரை எந்த ஆய்வாளரும் பார்க்கவில்லையாம்.
    இதன் இனப்பெருக்க ரகசியம் இன்னும் புரியவில்லையாம். இது ஒரு தனிமை விரும்பி மீன்.//

    எனக்கு இவை முற்றிலும் புதிய தகவல்கள்; நூல்களில் ஒருமுறை பார்த்துக்கொண்டு நாளை சேர்த்துவிடுகிறேன் ஐயா. தகவல்களுக்கு நன்றியறிதல் உடையேன்.

    //இது மிகப் பெரிய மீனாக இருந்தும் கடல் நீரில் உள்ள நுண்ணுயிர்களை வடித்து உண்டே உயிர் வாழுகிறதாம்.//

    இஃது எனக்கு நன்கு தெரிந்த செய்திதான் ஐயா. ஆனாலும் எழுதும்போது எப்படியோ விடுபட்டுவிட்டது. இதையும் நாளை சேர்த்துக்கொள்கிறேன்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers