இந்தப் பாம்புகள்… உங்களுக்காக!
ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் பாம்பு தைப்பான் (inland taipan) ஆகும். நச்சுப்பாம்புகளுள் மிகக் கொடியது இது. இந்தப் பாம்பின் நச்சுச் சுரப்பியில் எப்போதும் மிகக் குறைந்த அளவு நஞ்சுதான் (0.1 g) இருக்கும். ஆனால் இந்தக் குறைந்த அளவு நஞ்சு மனிதர்கள் ஐம்பது பேரைக் கொல்லப் போதுமானது ஆகும். (இரண்டு நூறாயிரம் எலிகளைக் கொல்ல வல்லது இந்த அளவு நஞ்சு.)
ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் வாழும் கறுப்பு மம்பா (black mamba) உலகின் மிக விரைவான பாம்பு. இந்தப் பாம்பின் விரைவு மணிக்குப் பன்னிரண்டு கல் (12 mph; 19 km/h) ஆகும். இது 11 அடி நீளம் வளரும்.
மலைப்பாம்புதான் (Asian reticulated python) உலகின் மிக நீளமான பாம்பு. இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மலைப்பாம்பின் நீளம் முப்பத்து மூன்று அடி (10 m) ஆகும்.
அமேசன் ஆற்றுப்பகுதியில் உள்ள சதுப்புநிலத்தில் உயிர்வாழும் பாம்பு அனாகொண்டா (anaconda). பாம்புகளுள் மிகுந்த எடைகொண்டது இது. பிடிபட்ட 27 அடி 9 அங்குலம் நீளமுள்ள ஓர் அனாகொண்டாவின் எடை ஏறத்தாழ 227 கிலோகிராம் (500 பவுண்டு) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நச்சுப் பாம்புகளுள் மிகச் சிறியது தெற்கு ஆப்பிரிக்காவில் நமிபியா நாட்டில் காணப்படும் நமாகுவா குறும்பாம்பு (Namaqua dwarf adder) ஆகும். முழு வளர்ச்சி அடைந்த பாம்பு எட்டு அங்குல (20 cm) நீளம் மட்டுமே இருக்கும்.
மூன்று கரீபியன் தீவுகளில் மட்டும் காணப்படும் இந்தப் பாம்பு நூல் பாம்பு (thread snake) எனப்படுகிறது. பாம்புகளுள் மிகச் சிறியது இது. இந்தப் பாம்பினத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறிய பாம்பின் நீளம் நாலேகால் அங்குலம் (10.8 cm) ஆகும்.
மேலும் ஒரு செய்தி:
மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒருவகை விரியன் பாம்புதான் ( Gaboon viper) பாம்புகளுள் மிக நீளமான நச்சுப் பற்களைக் கொண்டது. இதன் நச்சுப் பற்களின் நீளம் இரண்டு அங்குலம் (5 cm) ஆகும்.
- அ. நம்பி
Innum podalaam…paambukal patri…?!
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//Innum podalaam…paambukal patri…?!//
பாம்புகளின் நச்சுப் பற்கள் குறித்த ஒரு செய்தி விடுபட்டுவிட்டது; சேர்த்து விடலாமா ஐயா?
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
i like all the pictures in your blog
அன்பருக்கு,
//i like all the pictures in your blog//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
பாம்பு விமர்சனம்(விபரம்) மிக மிக நன்று. தாங்கள் பாம்பு பண்ணை வைக்க ஏதேனும் எண்ணம் உண்டா?
அன்பருக்கு,
//பாம்பு விமர்சனம்(விபரம்) மிக மிக நன்று. தாங்கள் பாம்பு பண்ணை வைக்க ஏதேனும் எண்ணம் உண்டா?//
பாம்புத் தொழிலில் ஈடுபடும் எண்ணம் ஏதும் இல்லை ஐயா. `பாம்பொடு பழகேல்’ என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான்.
ஓர் ஆங்கில நூலில் பாம்புகள் குறித்துச் சில வியத்தகு செய்திகள் கிடைத்தன; அவற்றைப் பகிர்ந்துகொண்டேன். அவ்வளவுதான்.
உங்கள் பரிந்துரைக்கு நன்றியறிதல் உடையேன்.
ஹ ஹா .. எல்லா படத்தயும் போட்டிங்க …. உலகத்திலேயே அதிபயங்கர விஷம் கொண்ட , ஆயிரம் நாக்கு கொண்ட பயங்கர ஜந்து படத்த போடல நீங்க?
அட நம்ம அரசியல் வாதிங்கோ தான் …
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//ஹ ஹா .. எல்லா படத்தயும் போட்டிங்க …. உலகத்திலேயே அதிபயங்கர விஷம் கொண்ட , ஆயிரம் நாக்கு கொண்ட பயங்கர ஜந்து படத்த போடல நீங்க?
அட நம்ம அரசியல் வாதிங்கோ தான் …/
அந்தப் படங்களையும் சேர்த்துப் போட்டால் பாம்புகளின் `பெருமை’ குறைந்து விடுமே ஐயா!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
நம்ம ராஜ நாகம் பற்றி எந்தக் குறிப்பும் அதில் இல்லையா?
அன்பருக்கு,
//நம்ம ராஜ நாகம் பற்றி எந்தக் குறிப்பும் அதில் இல்லையா?//
இல்லை ஐயா; ஆனாலும் நான் சேர்த்திருக்கவேண்டும். என் தவறுதான். ஒப்புக்கொள்கிறேன்.