வடுகபூபதியின் கனவு – ஏழு
“என்னுடைய பல நோக்கங்கள் உலகத் தொன்மொழி மாநாட்டின்வழி எவ்வாறு நிறைவேறும் என்று உனக்கு ஐயம்! அப்படித்தானே?” என்று கேட்டார் மன்னர் தட்சிணாலயர். அவர் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“ஆமாம் தந்தையே, எனக்கு ஐயமாகத்தான் உள்ளது!” என்றார் உருசியகுமாரன்.
“ஐயம் வேண்டா மகனே, என் நோக்கங்கள் யாவும் திண்ணமாக நிறைவேறும்!”
“விளக்கிச் சொன்னால் நல்லது அரசே!”
“மருதநாட்டு மக்களுள் பலர் அன்றாட வாழ்க்கையில் மேலைநாட்டு மொழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். தங்கள் தாய்மொழியை அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை. அப்படியே பயன்படுத்தினாலும் அந்த மேலைநாட்டு மொழியைக் கலந்துதான் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். இது ஊரறிந்த உண்மை!”
“சொல்லுங்கள் தந்தையே!”
“ஆனால் இதைக்கொண்டு அவர்களுக்குத் தங்கள் தாய்மொழியின்பால் பற்று இல்லை என்று சொல்லிவிட முடியாது. மருதமொழி மிகவும் வளமான மொழி, மிக உயர்ந்த மொழி, மிகத் தொன்மையான மொழி என்று அவர்களுள் பலர் எண்ணுகிறார்கள். ஆனால் இத்தகைய எண்ணம் அவர்கள் உள்ளத்தில் பெரும்பாலும் உறங்கியே கிடக்கிறது. மருதர்களின் தாய்மொழி உணர்வைத்தான் தொன்மொழி மாநாட்டின்வழி நான் பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன்!”
“இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் தந்தையே!”
“தொன்மொழி மாநாடு குறித்து ஆறேழு திங்கள் மிக விரிவான முறையில் பரப்புகை செய்யவேண்டும். மிகப் பெரிய விழாவாக மாநாடு நடந்தேற ஏற்பாடுகள் செய்யவேண்டும். மாநாட்டால் மருதமொழி மிகுந்த வளம்பெறும் என்றும் எல்லாத் துறைகளிலும் முன்னேறும் என்றும் உலக மொழிகளுள் முதன்மையான இடத்தைப் பெறும் என்றும் மருதமக்களை நம்பச் செய்யவேண்டும். நம் பரப்புகையும் அவர்களின் தாய்மொழிப் பற்றும் சேர்ந்து அவர்களை நம்பச் செய்யும்; அவர்கள் நம்புவார்கள்!”
“அவர்கள் அவ்வாறு நம்புவதனால் நமக்கு என்ன நன்மை அரசே?”
“என்ன நன்மையா? என்னால் அவர்கள் தாய்மொழி உயர்வு பெறுகிறது என்று நம்பினால் என்னை ஆதரிக்க மாட்டர்களா என்ன? `தொன்மொழி வளர்க்கும் தோன்றல்‘ என்று மாநாட்டில் எனக்கு விருது வழங்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். ஏற்கெனவே மதுவிலும் கூத்திலும் இலவசப் பொருள்களிலும் மயங்கிக் கிடக்கும் அவர்கள் மேலும் மயங்கி என்னை முழுமையாக ஆதரிப்பார்கள்! நம் எதிரிகள் தலையெடுக்கவே முடியாது!”
“தந்தையே, தொன்மொழி மாநாட்டால் மருதமொழி உண்மையில் உயர்வும் வளர்ச்சியும் பெறுமா?”
“உருசியகுமாரா, கலைத்துறையினர் இன்று மாலை எனக்குப் பாராட்டுவிழா நடத்துகின்றனர்; காலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நான் செல்லவேண்டும்!” என்று எழுந்துகொண்டார் மாமன்னர் தட்சிணாலய வடுகபூபதி.
(நிறைவு)
- அ. நம்பி
ஐயா, ஏதோ ஒரு உண்மையான நாடகத்தை பார்த்த உணர்வு, உணர்வுகள் அற்றுக் கிடக்கும் தமிழரிடம் இன்னும் எதைச் சொல்லி ஏமாற்றுவர்களோ? …உண்மைகளை ஓங்கி சொல்லி இருகின்றீர்கள் ஐயா….உங்கள் கதை மாந்தர்களின் பெயர்கள் அருமை. ஒரு குறை படங்கள் தான் இல்லை.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் ஐயா.
அன்பருக்கு,
//ஏதோ ஒரு உண்மையான நாடகத்தை பார்த்த உணர்வு,//
வரலாற்றுக் கதைகள் இத்தகைய உணர்வைத் தருவது இயல்புதான் ஐயா.
//உணர்வுகள் அற்றுக் கிடக்கும் தமிழரிடம் இன்னும் எதைச் சொல்லி ஏமாற்றுவர்களோ?//
மன்னர் வடுகபூபதி கற்பனை வளம் மிக்கவர்.
//…உண்மைகளை ஓங்கி சொல்லி இருகின்றீர்கள் ஐயா….//
கற்பனை என்றாலும் வரலாற்றுக் கதையில் உண்மையைத்தானே சொல்லவேண்டும்!
//உங்கள் கதை மாந்தர்களின் பெயர்கள் அருமை.//
வரலாற்றுக் கதைமாந்தர்களின் பெயர்கள்; அப்படித்தான் இருக்கும்.
//ஒரு குறை படங்கள் தான் இல்லை.//
ஓவியர்கள் யாரும் கிடைக்கவில்லை ஐயா.
//தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் ஐயா.//
பொங்கல் வாழ்த்துகள்.
ஏன் உங்க கனவுல ஜெயலலிதா வரலை. ஏதானும் நிஜ காரணம்
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//ஏன் உங்க கனவுல ஜெயலலிதா வரலை. //
இது நான் கண்ட கனவு அன்று; வடுகபூபதியின் `கனவு’; கல்கியின் `பார்த்திபன் கனவு’ போல என்று வைத்துக்கொள்ளலாமே ஐயா.
//ஏதானும் நிஜ காரணம்//
அவர் `கனவு’ குறித்தும் எழுதத்தான் வேண்டும்; ஆலோசனைக்கு மகிழ்ச்சி; எழுத முயல்வேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
என்ன நம்பி உடனுக்குடன் பதில் வருது. ஆல்வேய்ஸ் ஆன்லைனா. கலக்கிட்டீங்க
அன்பருக்கு,
//என்ன நம்பி உடனுக்குடன் பதில் வருது. ஆல்வேய்ஸ் ஆன்லைனா. கலக்கிட்டீங்க//
பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் எனக்கு வேறு `வேலை வெட்டி’ இல்லை ஐயா. அதனால் பெரும்பகுதி நேரம் இணையத்தில்தான்!
மன்னரின் மற்றுமொரு மாபெரும் புரட்சி இதுவரை மக்கள் கொண்டாடி வந்த புதுவருடத்தை திருத்தி அதன் மூலம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை ஒரே இரவில் உயர்த்தியது. சரித்திரத்தை மாற்றுவது என்பது இதுதானோ???
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//மன்னரின் மற்றுமொரு மாபெரும் புரட்சி…//
மாமன்னர் தட்சிணாலய வடுகபூபதி செய்தனவும் செய்துகொண்டு இருப்பனவும் செய்ய இருப்பனவும்… எல்லாமே மாபெரும் புரட்சிகள்தாம் ஐயா. எனவே `மற்றுமொரு மாபெரும் புரட்சி’ என்று நீங்கள் சொல்வது சரிதான் ஐயா.
//இதுவரை மக்கள் கொண்டாடி வந்த புதுவருடத்தை திருத்தி அதன் மூலம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை ஒரே இரவில் உயர்த்தியது.//
ஆமாம், ஆமாம்; மறுக்க முடியாத உண்மை; வரலாற்றில் இடம்பெற வேண்டிய மகத்தான உண்மை! தமிழக வரலாற்று ஆசிரியர்கள் இதனைக் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்.
//சரித்திரத்தை மாற்றுவது என்பது இதுதானோ???//
வரலாற்றை மாற்றுவது என்பதுவும் வரலாறு படைப்பது என்பதுவும் மாமன்னர் வடுகபூபதிக்குக் கைவந்த கலை ஐயா!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
IRANNDU MAATHA THAAMATHATHTHIL INTHA KATHAITH THOKUPPAI PADITHTHU INPURRAEN!!! PALA MANGKAIYKALLAI VITUVITEERKALAE!!!”"ENNAIPURA VAITHTHIYA DAASAR”", “”‘KADALPURA NAATIN PAZHAMAI PERIYOON”" AAKIYOORUM PANGKERRU IRUNTHAAL KATHAIYIN SUVAI KOODI IRUKKUM !!!
அன்பருக்கு,
நன்றாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்; சுருக்கமாக எழுதவேண்டும் என்று நினைத்து எழுதியதால் சேர்த்திருக்க வேண்டிய பலவற்றை விட்டுவிட்டேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.