கண்ணாத்தாளின் கதை

2009 November 9
by அ.நம்பி

knn02

“நீ என்னாடி எனக்கு யோக்யம் சொல்றது! ஒன்னெப் பாத்துத்தான் ஊர் முளுக்கச் சிரிக்குதே!” என்று ஏழு ஊருக்குக் கேட்கும்படி உரக்கக் கத்தினாள் காமாட்சி.

“சரிதான், மூடுடி வாயெ! பெரீய பத்தினியாட்டம் பேச வந்துட்டா! ஒன்னெப்பத்தி இங்க யாருக்குத்தாண்டி தெரியாது?” என்று இரைந்தாள் மாரியாயி.

சாதாரணமாகக் கோழிப் பிரச்சினையில் தொடங்கியது வாய்ச்சண்டை. ஆனால் சண்டைக்குக் காரணமான கோழியை இருவருமே மறந்துவிட்டார்கள். அவளின் நடத்தையை இவளும் இவளின் நடத்தையை அவளுமாக அலசிக்கொண்டு இருந்தார்கள்.

காது கொடுத்துக் கேட்க முடியாத மொழியில் காது கொடுத்துக் கேட்கக்கூடாத எத்தனையோ சங்கதிகளை இருவரும் மாறி மாறி  வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து படிக்க: இங்கு

- அ. நம்பி

4 Responses leave one →
  1. 2009 November 10

    சும்மா சண்டை போடுறதுக்கு கோழி சாக்கு அவ்வளவுதான். இது பல நாளா ஏங்கிய வாய்ப்பு…கிடச்சுடுத்து…அப்புறம் என்ன வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் மேல தான்….:-)

  2. 2009 November 10

    அன்பருக்கு,

    //சும்மா சண்டை போடுறதுக்கு கோழி சாக்கு அவ்வளவுதான். இது பல நாளா ஏங்கிய வாய்ப்பு…கிடச்சுடுத்து…அப்புறம் என்ன வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் மேல தான்….:-)//

    நீங்கள் சொல்வது உண்மை. சண்டை போடவேண்டும்; அதற்கு ஒரு காரணம் வேண்டும்; அவ்வளவுதான்.

  3. 2009 November 10
    மனோகரன் permalink

    தோட்டப்புறத் தமிழரின் கறைபடிந்த வாழ்க்கை அது. கதையாக மட்டும் இல்லை, நடைமுறை வாழ்க்கையின் உண்மை சம்பவங்கள். நமது சமுதாயம் சம்சு, கள்ளு என்ற அரக்கனாலும் ஒழுக்கம் அற்ற வாழ்க்கையாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் எப்படி பல தமிழ் குடும்பங்கள் சிக்கித் சீரழிந்தன என்பதை ஐயா அழகாக எடுத்து இயம்பியுள்ளியீர். கதையில் வரும் அந்த உண்மைகளை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. தமிழரின் தோட்டப்புற வாழ்க்கை, அது ஒரு செம்மண் சாலை.தமிழரின் கறை படிந்த இரத்தத்தை போல……

  4. 2009 November 10

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    இது கற்பனைக் கதைதான் என்றாலும் இந்தக் கண்ணாத்தாளைப்போல் எத்தனையோ கண்ணாத்தாள்கள் இருந்தனர் என்பது உண்மை. `…நடைமுறை வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்கள்…’ என்று நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS