வெளியே தளுக்கு உள்ளே அழுக்கு
வட்டார ஆட்சியர் மாநாட்டில்: – 20.6.2008
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதே நமது மொழிக் கொள்கை. – கருணாநிதி
திரைப்பட ஒலிவட்டு வெளியீட்டு விழாவில்: – 20.7.2008
இன்றைக்கு இந்தியாவிலேயே முழு வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களைக் காணுகிறீர்கள். ராஜாஜி மண்டபத்தில் படப்பிடிப்பு நடத்த முன்பு ஒரு லட்ச ரூபாய் கட்டணம். இப்போது அது வெறும் ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுவிட்டது.
இவ்வளவுக்கும் பிறகு நான் உங்களைக் கேட்பதென்ன? நல்ல தமிழில் தலைப்புகளைச் சூட்டுங்கள் என்றுதானே. இதைக்கூடக் கேட்கக் கூடாதா? இவ்வளவு சலுகைகள் அளித்தும்கூட தமிழில் பெயர் வைக்காமல் ஏபிசிடி என்றெல்லாம் பெயர் சூட்டுகிறார்கள்……
……இனிமேலாவது நல்ல தூய தமிழில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் தமிழ் என்று ஒப்புக் கொள்ளும் அளவுக்கு தலைப்புகளை வைப்போம். எதிர்காலத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே படங்களை எடுப்போம். தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் திரைத்துறையினர் எடுத்துக்கொள்ள வேண்டும். – கருணாநிதி
2009:
கோவையில்
கனிமொழிசெம்மொழி மாநாடு
31.10.2009
இன்று முதல்
உங்கள் Sun TV-இல்
Surf excel
Deal-ஆ No Deal-ஆ
தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…
73 நாடுகளில் கலக்கிய
Mega Game Show
Deal-ஆ No Deal-ஆ
உங்கள் Sun TV-இல்
`ஊருக்குத்தானடி உபதேசம்,
உனக்கும் எனக்கும் இல்லை!’
நரியை நாட்டமை பண்ண சொன்னால் ,இதுதான் ஐயா நடக்கும்
அன்பருக்கு,
//நரியை நாட்டமை பண்ண சொன்னால் ,இதுதான் ஐயா நடக்கும்//
ஏழு தலைமுறைக்கும் சேர்த்து இப்போதே சொத்துச் சேர்க்கவேண்டும்; அவ்வாறு சேர்க்க அரசியல் வலு வேன்டும்; இதுதான் முதன்மை நோக்கம்.
Pl. dont waste your precious time by watching all these nonsense
அன்பருக்கு,
//Pl. dont waste your precious time by watching all these nonsense//
குப்பை வாணிகர்கள்!
அருமையான பதிவு. கருணாநிதிபோல் தாங்களும் நீண்ட நாள் வாழ்க
அன்பருக்கு,
வாருங்கள்.
//கருணாநிதிபோல் தாங்களும் நீண்ட நாள் வாழ்க//
கருணாநிதிபோல்…? வாழ்த்துகிறீர்களா திட்டுகிறீர்களா என்று விளங்கவில்லை ஐயா; எனினும் வாழ்த்தாகவே எடுத்துக்கொள்கிறேன்.
வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றியறிதல் உடையேன்.