சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்…!
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
– பாவேந்தர்
செம்மொழி மாநாடு : கனிமொழிக்கு பொறுப்பு
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான ஆய்வரங்க அமைப்புக் குழுவின் செயலராக கனிமொழி எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். மாநாட்டுக்கான தனி அலுவலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் வரும் ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநாட்டில் ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள, ஆய்வரங்க அமைப்புக் குழுவை அமைத்து, அரசு ஆணையிட்டுள்ளது.
குழுவின் தலைவராக இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி, துணைத் தலைவர்களாக அவ்வை நடராஜன், பொற்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக்கு, குழுவின் செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அய்யா இவைகள் ஒன்றும் ஆச்சரியம் இல்லை இது அவரின் நாகரிகம் ,குடும்ப அரசியல் ,அடுத்து அறிவிப்பு வரபோகுது பாருங்கள் ,சண்டாளன் ராஜபக்சே அதிகார
பூர்வமாக தமிழ் மாநாட்டை திறந்து வைக்க போகிறார் என்று .வாழ்த்துக்கள் அய்யா
அன்பருக்கு,
//இவைகள் ஒன்றும் ஆச்சரியம் இல்லை இது அவரின் நாகரிகம் ,குடும்ப அரசியல்//
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இப்படித்தான் நடக்கிறது; வியப்பேதும் இல்லை என்பது உண்மை.
//அடுத்து அறிவிப்பு வரபோகுது பாருங்கள் ,சண்டாளன் ராஜபக்சே அதிகார
பூர்வமாக தமிழ் மாநாட்டை திறந்து வைக்க போகிறார் என்று//
அச்சுறுத்தாதீர்கள் ஐயா; யார் கண்டது, நடந்தாலும் நடக்கும்…!