சகுனம் நல்லதென்று விடிய விடியத் திருடலாமா?

2009 October 28

அவன் இளைஞன்; அகவை இருபத்திரண்டு ஆண்டு; நார்வே நாட்டினன்.

டென்மார்க்கில் இருந்து படகுப் பயணம்; நார்வேயில் கிறிஸ்டியன்சாண்ட் என்னும் துறைமுக நகரில் இறங்கினான்.

வழக்கமான சோதனைக்காக ஆயத்துறையினர் (சுங்கத்துறையினர்) அவனைத் தடுத்து நிறுத்தினர்; சோதித்தனர்.

அவன் கொண்டுவந்த பையில் ஒரு சிலந்தி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அது தராந்துலா (tarantula) என்னும் வகையைச் சேர்ந்த மிகுந்த நஞ்சுள்ள சிலந்தி.

சிலந்தியைக் கண்டதும் ஆயத்துறையினருக்கு அந்த இளைஞன்பால் ஐயம் தோன்றியது; அவனை முழுமையாகச் சோதிக்க முடிவு செய்தனர்.

nm01

nm06

மார்பைச் சுற்றிப் பதினான்கு காலுறைகளைப் பிணைத்திருந்தான். ஒவ்வொரு காலுறையினுள்ளும் ஒரு சிறிய மலைப்பாம்பு! மொத்தம் பதினான்கு மலைப்பாம்புகள்!

அதிர்ச்சி அடைந்த ஆயத்துறையினர் அவன் காற்சட்டையைக் களையப் பணித்தனர்.

nm02 nm07

nm05

இரு கால்களிலும் பத்துத் தகரச் சிமிழ்கள்; சிமிழ்களில் பத்துப் பல்லிகள் (albino leopard geckos).

`திறமை மிகுந்த’ அந்த இளைஞனை யாரும் பாராட்டவில்லை; கிறிஸ்டியன்சாண்ட் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

தண்டம் (அமெரிக்க வெள்ளி: $2,256; மலேசிய ரிங்கிட்: MR7,963) கட்ட ஒப்புக்கொண்டால் அவனை விடுவிப்பார்கள்.

`திறமை’க்குத் தண்டமா…?

- அ. நம்பி

8 Responses leave one →
  1. 2009 October 28
    tamilvanan permalink

    திற‌மைதான், க‌ட‌த்துவ‌தில் திற‌மை.கொஞ்ச‌வா முடியும்…

  2. 2009 October 28

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //திற‌மைதான், க‌ட‌த்துவ‌தில் திற‌மை.கொஞ்ச‌வா முடியும்…//

    பெரிய அளவில் கடத்தல் செய்பவனுக்குக்`கடத்தல் மன்னன்‘ என்று விருது வழங்கிச் சிறப்பிக்கின்றனவே சில தமிழிதழ்கள்…?

  3. 2009 October 29
    bicky permalink

    Nallathor Varaivu aiyyaa.. Mikka Nandri

  4. 2009 October 29

    திறமையைவிட தைரியத்தை எண்ணினால் ஆச்சரியம்தான் :))

  5. 2009 October 29

    அன்பருக்கு,

    //Nallathor Varaivu aiyyaa.. Mikka Nandri//

    அந்த இளைஞன்தானே நம் `நன்றியறிதலுக்கு’ உரியவன்…?

  6. 2009 October 29

    அன்பருக்கு,

    //திறமையைவிட தைரியத்தை எண்ணினால் ஆச்சரியம்தான் :))//

    உண்மைதான் ஐயா; பணம் வருமென்றால் எதனையும் செய்வதற்கு மனிதனுக்குத் திறமையும் துணிவும் தடையின்றி வரும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

  7. 2009 October 29

    ஜப்பானியர்: உலகிலேயே நங்கள் தான் மிகவும் மரியாதையை உள்ளவர்கள். ஏன் என்றல் தலையை ஆட்டி ஆட்டி ஆய், ஆய் என்று பதில் சொல்லுவோம்.

    தமிழர்: நாங்கள் அதைவிட இன்னும் மேல். திருடனைக்கூட நாங்கள் `திரு’ போட்டுத்தான் அழைப்போம்.

    மறைந்த அண்ணன் ஆதி குமணன் சொல்லிய நகைச்சுவை இது .

    இதைதான் அந்த தமிழ் இதழ்களும் செய்கின்றனவோ?

  8. 2009 October 29

    அன்பருக்கு,

    //இதைதான் அந்த தமிழ் இதழ்களும் செய்கின்றனவோ?//

    இருக்கலாம் ஐயா; நாளிழ்களில் அடிக்கடி `கடத்தல் மன்னர்கள்’ குறித்துச் செய்திகளைக் காண முடிகிறதே!

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS