முந்நூறாயிரம் கண்ணாடிகளும் ஒரு திருக்கோவிலும்…!

2009 October 26
by அ.நம்பி

rkk01

rkk03

rkk02

rkk04

மரத்தால் கோவில் கட்டலாம்.

கல்லால் கோவில் கட்டலாம்.

கண்ணாடியால் கோவில் கட்ட முடியுமா?

`முடியும்’ என எண்பித்திருக்கிறார்கள் மலேசியர்கள்.

ஜொகூர் மாநிலத்தின் தலைநகரான ஜொகூர் பாருவில் அமைந்துள்ளது அருள்மிகு இராஜகாளியம்மன் திருக்கோவில்.

தொண்ணூறு விழுக்காடு கண்ணாடியால் ஆனது இந்தக் கோவில்.

நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களிலான 3,00,000 கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றுக் குடமுழுக்குக் கண்ட இந்தத் திருக்கோவில் மலேசியாவின் முதலாவது `கண்ணாடிக் கோவில்’ மட்டும் அன்று; உலகின் முதலாவது கண்ணாடிக் கோவிலும் இதுதான் என்னும் சிறப்பைப் பெறுகிறது.

கோவில் முகவரி: 22, லோரோங் சத்து, ஜாலான் தெப்ராவ், 801000 ஜொகூர் பாரு. (No. 22, Lorong Satu, Jalan Tebrau, 80100 Johor Bahru.)

திருக்கோவில் இணையத்தளம்: இங்கு

செய்தி:

More than 30,000 throng “glass temple” in Johor

மேலும் படங்கள் (சீனமொழி நாளிதழ்): இங்கு

6 Responses leave one →
  1. 2009 October 26

    அட! அட்டகாசமா இருக்கே!!!

    பார்த்துடணும் அடுத்தமுறை அங்கே போகும்போது.

    தகவலுக்கு நன்றி.

  2. 2009 October 26

    அம்மா,

    //அட! அட்டகாசமா இருக்கே!!!

    பார்த்துடணும் அடுத்தமுறை அங்கே போகும்போது.//

    கட்டாயம் பார்க்கவேண்டும்; தமிழ் மலேசியன் என்னும் முறையில் உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. 2009 October 26

    கண்டிப்பாக பார்க்க வேண்டும் போல் இருக்கிறது ,தகவலுக்கு நன்றி ,அதுவும்
    சிரத்தை எடுத்து சீன பத்திரிக்கை தகவலையும் இணைத்திருக்கிறீர்கள்

  4. 2009 October 26

    அன்பருக்கு,

    //கண்டிப்பாக பார்க்க வேண்டும் போல் இருக்கிறது ,தகவலுக்கு நன்றி ,அதுவும்
    சிரத்தை எடுத்து சீன பத்திரிக்கை தகவலையும் இணைத்திருக்கிறீர்கள்.//

    திண்ணமாகப் பார்க்கவேண்டும்; சென்று பாருங்கள் ஐயா.

  5. 2009 October 27

    அருமையான செய்தி! கேட்கவும் பார்க்கவும் வியப்பும் அதிசயமும்தான்! தகவலுக்கு நன்றிகள்! தொடர்க உங்கள் நற்பணி!

  6. 2009 October 27

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //அருமையான செய்தி! கேட்கவும் பார்க்கவும் வியப்பும் அதிசயமும்தான்! தகவலுக்கு நன்றிகள்! தொடர்க உங்கள் நற்பணி!//

    படங்களே உள்ளத்தைக் கவர்கின்றன. நேரில் பார்த்தால்…?

    நீங்கள் சொல்வதுபோல் இந்தக் கோவில் வியப்புக்கு உரியதுதான்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS