நித்தமும் தந்தால் முத்தமும் சலிக்கும்…!

2009 October 24
by அ.நம்பி

சமய நெறிகளே மக்களின் வாழ்வு நெறிகளாக இருக்கவேண்டும்.

சமய நூல்களில் சொல்லப்பட்டுள்ள உண்மைகளே மக்களின் நம்பிக்கைகளாக இருக்கவேண்டும்.

மக்களிடையே வழக்கத்திலுள்ள நடைமுறைகளைச் சமயத்தில் ஏற்றக்கூடாது.

மக்களின் நம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் சமயப்பூச்சுப் பூசக்கூடாது.

சமய நெறிகளோடு முரண்படும் வழக்கங்களை விட்டொழித்தல் வேண்டும்.

`வழிவழியாகச் செய்துவருகிறோம்; விட முடியாது; செய்துதான் ஆவோம்’ என்று சொல்பவர்கள் செய்துகொள்ளட்டும்.

ஐதிகம் என்று சொல்லிப் புறக்கணிக்க மறுப்பவர்கள் செய்துகொள்ளட்டும்.

தனிப்பட்ட முறையில் செய்துகொள்ளட்டும்.

ஏன் கோவிலில் செய்யவேண்டும்?

கோவிலில் செய்தால் அது சமயக்கொள்கை என்று பலரால் தவறாகக் கொள்ளப்படும்.

சமயப்பூச்சு இல்லாமல் செய்துகொண்டால் என்ன?

கழுதைகளுக்கோ நாய்களுக்கோ திருமணம் செய்துவைத்தால் மழை பெய்யும் என்று எந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது?

இவைபோலும் வெறும் நம்பிக்கைகள் ஒன்றா, இரண்டா?

மாந்தரிடம் அறியாமை இருத்தல் இயல்புதான்.

ஆனால் அறியாமைக்கும் ஓர் எல்லை வேண்டாவா?

- அ. நம்பி

செய்தி:

dm01

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்!

கோவில்பட்டியில் மழை வேண்டி சங்கரேஸ்வரி கோயிலில் கழுதைகளுக்கு திருமணம் நடந்தது.

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும், குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது. கழுதைக்கு திருமணம் செய்தால் மழை வரும் என்பது ஐதீகம். இதற்காக கோவில்பட்டி சங்கரேஸ்வரி கோயிலில் கழுதைகளுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சங்கர் என்ற ஆண் கழுதையும், கோமதி என்ற பெண் கழுதையும் தேர்ந்தெடுக்கப்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்து, அவைகளுக்கு புத்தாடை, மாலை அணிவித்து கோவில் முன்பு சிறப்பு பிரார்த்தனைகள் செய்து மஞ்சள் கயிறு கட்டி திருமணம் செய்தனர். இந்த திருமணத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் கூடி இருந்தனர்.

செய்தி:

dm02

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்

தூத்துக்குடி: மழை பெய்ய வேண்டி கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோயிலில் கழுதைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. ஆண் கழுதைக்கு பட்டுவேட்டி, சட்டையுடன் அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளைபோல அலங்கரிக்கப்பட்டது. பெண் கழுதைக்கு சேலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அர்ச்சகர் சுப்பிரமணியன் மந்திரங்கள் சொல்ல ஆண் கழுதை சார்பில் பெண் கழுதையின் கழுத்தில் தாலி கட்டப்பட்டது. கூடியிருந்த பெண்கள் குலவை எழுப்பி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பால், பழம் சாப்பிட்ட பின் கழுதைகள் கோயிலை வலம் வந்தன. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

வேப்பமரத்துக்கும் அரசமரத்துக்கும் திருமணம்:

இடுப்பொடிந்த கோழிக்கு உரல்குழியே கைலாசம்!

5 Responses leave one →
  1. 2009 October 25

    நித்தம் போனால் முத்தம் சலிக்கும் என்பது முதுமொழி. இதன் அர்த்தம்
    ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டுக்குப்போனால் அந்த வீட்டு முத்தம் சலிக்கும்
    இந்த இடத்தில் முத்தம் என்பது முற்றம் என்கின்ற நிலத்தைக்குறிக்கிறது.
    யார் வீட்டுக்கும் அடிக்கடி போகக்கூடாது என்பதை விளக்கவே இப் பழமொழி
    ஏற்படுத்தப்பட்டது
    நீங்கள் முதுமொழியா உங்கள் எண்ணம் போல் மாற்ற முயல்கிறீர்கள்.

  2. 2009 October 25

    அன்பருக்கு,

    `நித்தம் போனால் முற்றம் சலிக்கும்’, `நித்தம் போனால் முத்தம் சலிக்கும்’, `நித்தமும் தந்தால் முத்தமும் சலிக்கும்’ என்பன மக்களிடையே வழங்கி வரும் பழமொழிகள்; இவை ஒரே பழமொழியின் வெவ்வேறு வடிவங்களாக இருக்கக்கூடும். `நாம் கேள்விப்பட்டதுதான் பழமொழி; சற்று வேறுபடுவது பழமொழி அன்று’ எனச் சொல்ல இயலாது. அன்புகூர்ந்து பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள்; நூல்களிலும் தேடிப் பாருங்கள்.

    //…உங்கள் எண்ணம் போல் மாற்ற முயல்கிறீர்கள்.//

    மாற்றுவதில் தவறு இல்லை. நாம் எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு ஏற்பப் பழமொழிகளைச் சற்று மாற்றிப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம்தான் ஐயா.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. 2009 October 26

    //நீங்கள் முதுமொழியா உங்கள் எண்ணம் போல் மாற்ற முயல்கிறீர்கள்//

    அப்படி என்றால் காலத்திற்கு ஏற்றவாறு கருத்து சொன்னால் நீங்கள் ஏற்று கொள்ள மாட்டீர்கள் ,அப்படியா m.thevesvaran

  4. 2009 October 29
    bicky permalink

    Pochu Poh, konja nanjam peanchi kittu iruntha malaiyum inimeh penyathu Kovil pattiyileh… amam sollipottean

  5. 2009 October 29

    அன்பருக்கு,

    //Pochu Poh, konja nanjam peanchi kittu iruntha malaiyum inimeh penyathu Kovil pattiyileh… amam sollipottean//

    இப்படி நடந்துவிடக் கூடாது ஐயா; பெரும் தொல்லையில் வந்து முடியும்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS