எங்கள் ஊரில் ஆறே இல்லையே…!

2009 October 23
by அ.நம்பி

“எனக்கு வாக்கு அளியுங்கள்; நான் வெற்றி பெற்றால் இந்த ஊரில் ஒரு பாலம் கட்டித் தருவேன்!” என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார் வேட்பாளர்.

“பாலம் கட்டுவீர்களா? எங்கள் ஊரில் ஆறே இல்லையே!” என்றனர் ஊர்மக்கள்.

“அதனால் என்ன? முதலில் ஓர் ஆறு வெட்டுவேன்; பிறகு அதன்மேல் பாலம் கட்டுவேன்!” என்றார் அந்த வேட்பாளர்.

அரசியல்வாதிகளின் சாதனைகள் இப்படி.

ஆனால் கீழே உள்ளவை உண்மையான சாதனைகள்.

மனிதர்கள் மட்டுமா சாதனை செய்வார்கள்?

விலங்குகளும் சாதனை செய்யும்; தாவரங்களும் செய்யும்.

இவை கின்னஸ் சாதனைகள்.

gw02

நான்கு கால் பாய்ச்சலில் எவ்வளவு விரைவாக ஓட முடியும்? ஜப்பானைச் சேர்ந்த கெனிச்சி இட்டோ ஓடினார்; ஓடிய தொலைவு நூறு மீட்டர்; நேரம் 18.58 நொடி.

ரு படகு; நீளம் 143 அடி 4 அங்குலம். படகில் இருந்த குழுவினர் 143 பேர். இடம்: ஆலப்புழை, கேரளா. ஒரு படகில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான குழுவினர் இடம்பெற்ற சாதனை இது. gw07
gw04 ரையில் வாழும் நத்தைகளுள் மிகப் பெரியது ஆப்பிரிக்க நத்தை. இந்த இனத்தைச் சேர்ந்த பெரிய நத்தை ஒன்றின் அளவு: நீளம் 15.5. அங்குலம்; ஓட்டின் நீளம் 10.75 அங்குலம்; எடை 900 கிராம் (இரண்டு பவுண்டு).
ந்த நாய்க்குப் பெயர் டிக்கர். படத்தைப் பார்த்தாலே இந்த நாயின் சாதனை தெரிந்துவிடும். நாய்களுள் மிக நீளமான காதுகளை உடைய நாய் இது. வலக்காதின் நீளம் 13.75 அங்குலம்; இடக்காதின் நீளம் 13.5 அங்குலம். gw06
gw01 மிகுந்த எடைகொண்ட எலுமிச்சம்பழம்; எடை 5.265 கிலோகிராம். இந்தப் படம் எடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 8, 2003. இடம்: இஸ்ரேலில் உள்ள ஒரு பண்ணை.
மிகுந்த எடைகொண்ட ஆப்பிள் பழம்; எடை: 1.849 கிலோகிராம். நாள்: அக்டோபர் 24, 2005. இடம்: ஜப்பானில் உள்ள ஒரு பண்ணை. gw05

- அ. நம்பி

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS