கலகத்து அரக்கர்களும் ஈழத் தமிழர்களும்…!
எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப் பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?
முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரஸையும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம்! ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக் கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன?
இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறு வேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?
கட்டுரை – இங்கு:
ராவணன் என்னும் அரக்கர் தலைவன் வாழ்ந்த நாடு இலங்கை.
அவனை அழித்தான் ராமபிரான்.
இங்குள்ள தமிழ் தலைவர்கள் ராவணன் தமிழன் என்று அவர்களோடு
சேர்த்துக்கொள்ளுகிறார்கள்.
தற்ப்போது யார் தமிழர்களை காக்க போகிறார்கள் என்று தெரியவில்லை
அவரை நடிப்பில் யாரும் விஞ்சவோ மிஞ்சவோ முடியாது
கண்டனங்களை தனக்கு சாதகமாக்கும் வித்தை கற்றவர்.
எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்
ஆகவே தினமணி கருத்து ஒன்றும் அவரை பாதிக்காது
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே என்ற மந்திரத்தை நன்கு கற்று தெளிந்தவர்
அன்பருக்கு,
தமிழ்நாட்டின் மாமன்னர் வடுகபூபதிக்குத் தெரியாத வஞ்சகக் கலை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை ஐயா.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
என்று பாடியவனும்,நடித்து காட்டியவனும் காலத்திற்கு இரையாகிபோனார்கள்
ஆனால் ஏமாற்றுபவர்கள் மட்டும் தொடர்ந்து தமிழ் மக்களை போட்டி போட்டிக்கொண்டு மொட்டையடித்து கொண்டு வருகிறார்கள்.
உலகம் இவ்வளவுதான்
இதுதான் கூடவே இருந்து கொல்லும் சனியன்
இந்த நூற்றாண்டின் கேடு கெட்ட பிறப்புக்கள் (2கருணா) நிதிக்காகவும் பதவிக்காகவும் இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் எவர்கள் வீடு பெண்கள் பாவம். உலகம் ஈழ தமிழனுக்கு உதவ நினைத்தாலும் இவன் தூது போய் குறுக்கால நிக்கிறான் ,
அன்பருக்கு,
இவர்களின் முகத்திரை கிழிபடும் நாளை எதிர்பார்ப்போம் ஐயா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.