தலைமையமைச்சரின் தீபாவளி வாழ்த்து

2009 October 16
by அ.நம்பி

மலேசியத் தலைமையமைச்சர் டத்தோ சிரீ முகமது நஜிப் பின் துன் ஹஜி அப்துல் ரசாக் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி:

pmm02

Deepavali Nal Vazhthukal

Oct 15, 2009

This coming weekend, the Indian community in Malaysia all over the country will be celebrating the sacred holiday of Hari Deepavali, the ancient Festival of Lights symbolising the victory of good over evil.

As Malaysians continue to celebrate Hari Raya Aidilfitri, Deepavali is a golden opportunity for ties between ethnic groups to be strengthened in true 1Malaysia spirit.  As is customary, members of the Indian community will be graciously welcoming their fellow Malaysians to open houses, permitting all to interact with one another and enjoy Indian delicacies such as jalebi and murukku in mutual respect, harmony and unity.  On Saturday, I will be attending such an open house, to be held at the Putra World Trade Centre, Kuala Lumpur.  It is an event I am very much looking forward to, after receiving warm receptions from Malaysian Indians this year.

In this same breath, I thought about the walkabout in Brickfields, Kuala Lumpur, where I fondly recall chatting with traders over a refreshing glass of Teh O Ais Limau.   More recently, I was honoured to receive an invitation to the Hindu temple of Batu Caves.  There, I observed Malaysians of all cultural backgrounds taking part in the inaugural 1Malaysia Batu Caves Carnival and I hope to see many more celebrations of our diverse communities.

However and wherever you choose to celebrate this colourful festival, may Deepavali light up your weekend.  Selamat Hari Deepavali and Deepavali Nal Vazhthukal! – 1Malaysia:

pmm01

தமிழாக்கம்:

தீபாவளி வாழ்த்துகள்

Oct 15, 2009

இவ்வார இறுதியில், மலேசிய வாழ் இந்தியர்கள் தீபாவளி திருநாளை மிக விமரிசையாகக் கொண்டாடவிருக்கின்றனர். தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகி வெற்றி விழாவென கொண்டாடும் நாளே இத்தீபாவளி ஆகும்.

நோன்புப் பெருநாளுக்கு அடுத்து மலேசியர்களால் கொண்டாடப்படும் இத்தீபாவளி திருநாளில் பல்வேறு இனத்தினர் ஒற்றுமையை வலுப்படுத்தும் அதே வேளையில் ஒரே மலேசியா எனும் கோட்பாட்டின் உணர்வுகளையும்  பகிர்ந்துள்ளனர்.

இதுபோன்ற திருநாள்களில் இந்திய பெருமக்கள் விருந்தினர்களை வீட்டுக்கு அழைப்பதும் அவர்களை வரவேற்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல்வேறு இனத்தவர் பங்கு கொள்ளும் விருந்தோம்பலில் மகிழ்ச்சியுடன் இந்திய பலகாரங்களான ஜிலேபி, முறுக்கு போன்ற பல்வகை உணவுகளைச் சுவைப்பதோடு ஒற்றுமை, சுபிட்சம் ஆகிய பண்புகளை மறவாமல் காக்கின்றனர்.

எதிர்வரும் சனிக்கிழமை, கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப அரங்கில் நடைபெறவிருக்கும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் நான் கலந்து கொள்ளவிருக்கின்றேன். இந்நிகழ்வு நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நிகழ்வாகும். ஏனெனில், மலேசிய இந்திய மக்கள் என்னை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அழைத்திருக்கும் நிகழ்ச்சியாகும்.

இவ்வேளையில் கடந்த முறை நான் கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் கடையில் ‘தே ஓ லிமாவ் ஐஸ்’ சுவைத்துக்கொண்டே அங்குள்ள வணிகர்களிடம் மனம்விட்டு பேசியதை நினைவுகூர்ந்து பார்க்கிறேன். அண்மையில் கூட பத்துமலை திருத்தலத்திலிருந்து எனக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டது. அங்கு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்துமலை ஒரே மலேசியா விழாவில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை ஒருங்கே காண வாய்ப்பு கிட்டியது.

நீங்கள் இத்தீபத் திருநாளை எங்கு, எப்படி கொண்டாடினாலும், உங்களது நாள்கள் திருநாளாக மலரட்டும். எனது இதயங் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்! – 1Malaysia:

4 Responses leave one →
  1. 2009 October 16
    துபாய்ராஜா permalink

    அய்யாவுக்கும், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  2. 2009 October 16

    அன்பருக்கு,

    //அய்யாவுக்கும், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்கு நன்றியறிதல் உடையேன்; உங்களுக்கும் இல்லத்தாருக்கும் அன்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  3. 2009 October 26

    எனக்கு இந்த தீபாவளி கொண்டாடத்தில் உடன்பாடு இல்லை அய்யா.அதனல்தான்
    வாழ்த்து சொல்லவில்லை ,மன்னிக்கவும் அய்யா

  4. 2009 October 26

    அன்பருக்கு,

    உடன்பாடு இல்லாத ஒன்றைச் செய்யாது தவிர்த்தல் சரிதான்; மன்னிப்பு என்பது எதற்கு? தேவை இல்லை ஐயா.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS