சோதிடக் குற்றவாளிகள்…!

2009 October 13

hc02

`சமுதாயம் உருப்படவே கூடாது’ என உறுதிபூண்டு செயல்படுகிறார்கள் சோதிடர்கள்.

தங்கள் வருமானத்துக்காகச் சமுதாயத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள்.

சமுதாயத்தின் அறியாமையே இவர்களின் முதலீடு.

முதலீடு கூடினால் வருமானமும் கூடும்.

அதனால் அறியாமையைப் பெருக்குவதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுகிறார்கள்.

எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் கைக்கொண்டு சமுதாயத்தில் அறியாமையை வளர்க்கிறார்கள்.

அறியாமை வளர வளர இவர்களுக்கு வருமானமும் பெருகும்.

ஒரு நாளிதழில் நேற்று வெளிவந்த சோதிடப் பகுதிக்கு இப்படி ஒரு தலைப்பு:

apt02

`கிரகங்கள் பலவீனம்’ என்றும் `ஆறு ராசிக்காரர்களுக்கு ஆபத்து’ என்றும் மிகப் பெரிய எழுத்தில் தலைப்புக் கொடுப்பதன் நோக்கம் என்ன?

படிப்பவர்களை அச்சுறுத்தும் வேலை இது.

சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அச்சம் தோன்றக்கூடும்.

அடுத்து இப்படி ஒரு வரி:

apt03

`உங்களுக்கு ஆபத்து விளையப்போகிறது; எங்களிடம் வாருங்கள்; பணம் கொடுங்கள். பரிகாரம் சொல்கிறோம்; செய்கிறோம்; ஆபத்து நீங்கிவிடும்!’

இதுதானே பொருள்?

ஏமாற்றிப் பணம் பறித்த சோதிடர்கள் இப்போது அச்சுறுத்திப் பணம் பறிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

apt01

எந்த நாடாயினும் அச்சுறுத்திப் பணம் பறித்தல் (blackmail) என்பது குற்றச் செயலே ஆகும்.

அச்சுறுத்திப் பணம் பறிப்பவர்கள் குற்றவாளிகளே (criminals) ஆவார்கள்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் சோதிடர்களைக் காவல் துறையினர்  சிறைசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.

இவ்வாறு நடப்பதற்கு இன்னும் ஏழு தலைமுறைகள் காத்திருக்க வேண்டுமோ?

- அ. நம்பி

14 Responses leave one →
  1. 2009 October 13
    Robin permalink

    //சமுதாயத்தின் அறியாமையே இவர்களின் முதலீடு.

    முதலீடு கூடினால் வருமானமும் கூடும். // உண்மை.

  2. 2009 October 13

    திரு நம்பி அவர்களே,
    சமுதாயத்தில் ஆழத்தில் பதிந்திருக்கும் ஒரு பய உணர்ச்சியை பணமாக்கும் முற்சியில் ஈடு பட்டிருபவர்களை அடையாளும் காட்டும் உங்கள் முயற்சி பாராட்ட தக்கது.

    ஆனால், இது சமுதாயத்தின் அவலங்களில் ஒரு மிக மிக சிறிய பகுதியே. ஒவ்வொரு அவலங்களையும் இவ்வாறு எடுத்து கூறி ஒரு முழுமையான விழிப்பை உருவாக்குவது என்பது முடியுமா என தெரியவில்லை. அனால், இந்த பய உணர்ச்சியின் அடிப்படையை உணர்த்த, உணர நம்மால் முடியும் என நினைக்கிறேன். அவ்வாறு செய்தல், இப்போதைய சமுதாயத்துக்கு மட்டும் அல்லாமல், வரபோகும் சமுதாயத்துக்கும் பேருதவியாக இருக்கலாம்.

    நன்றி!

  3. 2009 October 13

    அன்பருக்கு,

    // //சமுதாயத்தின் அறியாமையே இவர்களின் முதலீடு.

    முதலீடு கூடினால் வருமானமும் கூடும். // உண்மை.//

    அதனால்தான் சற்றும் அயராது முதலீட்டைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  4. 2009 October 13

    அன்பருக்கு,

    //ஆனால், இது சமுதாயத்தின் அவலங்களில் ஒரு மிக மிக சிறிய பகுதியே. ஒவ்வொரு அவலங்களையும் இவ்வாறு எடுத்து கூறி ஒரு முழுமையான விழிப்பை உருவாக்குவது என்பது முடியுமா என தெரியவில்லை. //

    செய்வதற்கு மிக மிக அரிய செயல் இது. சாண் ஏறினால் முழம் வழுக்கும். சிந்தனைப் புரட்சி ஒன்றுதான் விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும்.

    //அனால், இந்த பய உணர்ச்சியின் அடிப்படையை உணர்த்த, உணர நம்மால் முடியும் என நினைக்கிறேன். அவ்வாறு செய்தல், இப்போதைய சமுதாயத்துக்கு மட்டும் அல்லாமல், வரபோகும் சமுதாயத்துக்கும் பேருதவியாக இருக்கலாம்.//

    பலரும் முனைந்து தொய்வின்றிச் செயல்படவேண்டும் ஐயா. அவ்வாறு செய்தால் நீங்கள் சொல்வது ஒருவேளை நடக்கக்கூடும்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  5. 2009 October 14
    t.r.pattabiraman permalink

    பிறரை எப்போதும் நிந்தித்தே வாழுகின்ற தற்க்கால தமிழன் எப்போதும் சுயமாக சிந்திக்க மறந்ததுதான் இத்தனை துன்பங்களுக்கும் காரணம். எதன்பின்பாவது அல்லது எவனாவது ஒருவனை தலைவனாக ஏற்றுக்கொண்டு பிறகு எல்லாவற்றையும் அவனுக்கே அழுதுவிட்டு பிச்சை எடுத்து கொண்டு
    அலைவது அவன் பண்பாடு
    அதனால்தான் அவன் படுகிறான் இவ்வளவு பாடு.

  6. 2009 October 14

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //எவனாவது ஒருவனை தலைவனாக ஏற்றுக்கொண்டு பிறகு எல்லாவற்றையும் அவனுக்கே அழுதுவிட்டு பிச்சை எடுத்து கொண்டு
    அலைவது அவன் பண்பாடு
    அதனால்தான் அவன் படுகிறான் இவ்வளவு பாடு.//

    `பண்பாட்டை’ இழக்கலாமோ?

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  7. 2009 October 14
    s.thiyagaraja permalink

    part and parcel of the hinduism,keep it up,good job
    no other religion practice this stupidity.

  8. 2009 October 15

    அன்பருக்கு,

    //part and parcel of the hinduism//

    இது மிக மிகத் தவறான கருத்து ஐயா; சோதிடம் என்பது இந்து சமயத்தில் உள்ளது அன்று. தங்கள் பிழைப்புக்காகச் சோதிடத்துக்குச் சமயச் சாயம் பூசியவர்கள் சோதிடர்களே ஆவர். சோதிடர்கள் சொல்கிறார்கள் என்பதனாலும் இந்துக்களுள் பலர் சோதிடத்தை நம்புகின்றனர் என்பதனாலும் சோதிடம் என்பது இந்து சமயத்தில் உள்ளது என்று ஆகாது.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  9. 2009 October 16
    t.r.pattabiraman permalink

    உலகத்தோடு ஒட்ட ஒழுகத் தெரியாது.அடுத்தவன் உயர்வை கண்டு பொறாமைப்படாமல் இருக்கமுடியாது. ஒற்றுமையாய் வாழ தெரியாது
    சுயநலமில்லாமல் இருக்க தெரியாது. மூட நம்பிக்கைகளை விட மனம்
    கிடையாது. உள்ளும் புறமும் என்றும் ஒன்றாக இருக்காது. தன இனத்தையே
    காட்டி கொடுத்து கடைசியில் தானும் சேர்ந்து அழியும் வரலாறு கொண்டவன்.எதையும் சிந்திக்காமல், ஆராய்ந்து பாராமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பி நாசமாய் போய்கொண்டிருப்பவன்.கடற்கரையில் இருக்கும் மணல் துகள்களை எண்ணி விடலாம். ஆனால் இவன் தன் இன மக்களின் மோசடிகளில் சிக்கி இழந்த உடைமைகள், நிதி மதிப்பு எவ்வளவு கோடி என்று கணக்கிட இயலாது. இவந்தான் இன்றைய பெரும்பாலான தமிழனின் ஒட்ட்டுமொத்த முகம்

  10. 2009 October 16

    அன்பருக்கு,

    சுருக்கமாக ஒரு பட்டியல் கொடுத்துள்ளீர்கள். பட்டியலில் எதனையும் மறுக்க முடியவில்லை ஐயா.

  11. 2009 November 13
    trpattabiraman permalink

    There are thousands of websites for astrology related subjects and crores of people all over the world are addicted to it. I don’t know whether Mr Thiyagarajan is aware of it or not.

  12. 2009 November 13

    அன்பருக்கு,

    //There are thousands of websites for astrology related subjects and crores of people all over the world are addicted to it. I don’t know whether Mr Thiyagarajan is aware of it or not.//

    உண்மையான கருத்து.

  13. 2009 December 22
    nila permalink

    DEAR NAMBI SIR,
    YOU ARE TOTALLY BLAMED ONLY ASTROLOGERS….
    ACTUALLY MEDIA IS THE MAIN CULPRIT….
    THEY GIVE MORE IMPORTANCE TO THIS KIND OF NEWS ITEM….
    WHY ALL TV CHANNEL TELECASTING THE ASTROLOGICAL
    NEWS…..INCLUDING THE SO CALLED RATIONAL T.V… SUN/KALAIGNAR
    T V ALSO TELECASTING…… THEY WANT UTILIZE THE SECTION
    OF PEOPLE WEAKNESS FOR THAT THEY GIVE FALSE HOPE….
    YOU HAVE TO QUOTE THIS ALSO IN YOUR COLUMN….

    NILA

  14. 2009 December 22

    அம்மா,

    //ACTUALLY MEDIA IS THE MAIN CULPRIT….//

    உங்கள் கருத்து முற்றிலும் சரி.

    பொருள்வேட்கையால் ஊடகங்கள் இவ்வாறு செய்கின்றன.

    //THEY WANT UTILIZE THE SECTION
    OF PEOPLE WEAKNESS FOR THAT THEY GIVE FALSE HOPE….
    YOU HAVE TO QUOTE THIS ALSO IN YOUR COLUMN….//

    ஊடகத்தினரின் பொருள்வேட்கை குறித்தும் அவர்களால் சமுதாயம் கெட்டழிவது குறித்தும் பலமுறை எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதுவேன்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

    ( நீங்கள் பெண் என்று உங்கள் பெயரைக்கொண்டு கருதி `அம்மா’ என்று விளித்து எழுதினேன். நீங்கள் பெண் அல்லர் எனில் சொல்லுங்கள்; திருத்தம் செய்ய இயலும்.)

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS