தன்னிகர் இல்லாத தண்ணியாண்டவர்…!
`எங்கும் மது, எப்போதும் மது’.
இதுவே நம் குறிக்கோள்.
`தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்’ அருந்திக் களித்து வாழ்ந்த முன்னோர்களின் வழிவந்தவர்கள் நாம்.
(தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் – தேளின் கடுப்பைப்போல் மயக்கம் தரக்கூடிய நாள்பட்டுப் புளித்த கள். புறநானூறு: 392)
`பாம்பு வெகுண்டன்ன தேறல்’ பருகிப் பெருமயக்கில் ஆழ்ந்து வாழ்ந்த மூதாதையரின் வழித்தோன்றல்கள் நாம்.
(பாம்பு வெகுண்டன்ன தேறல் – பாம்பின் நஞ்சு விரைந்து ஏறுதல்போல் மயக்கம் கொடுக்கும் கள். சிறுபாணாற்றுப்படை: 237)
இது நம் பண்பாடு.
நம் தீவினைப் பயனால் இடைக்காலத்தில் இப்பண்பாட்டில் தொய்வு ஏற்பட்டது.
`மது அருந்துதல் கூடாது’ என்பவர்களுக்குச் செவிகொடுத்தோம்.
இழந்த பண்பாட்டை மீட்பது நம் கடமை அன்றோ?
நம் சமுதாயத்தில் பெரும்பாலோர் கடமை உணர்ச்சி மிக்கவர்கள்.
இழந்த பழம்பெருமையை மீட்கப் பலர் பெருமுயற்சி எடுத்தார்கள்.
தலைவர்கள், பொதுமக்கள் எனும் பாகுபாடு இல்லாமல் கடுமையாக உழைத்தார்கள்.
அவர்களின் கடும் உழைப்பின் பலனை இன்று அடைந்துவிட்டோம்.
இழந்த பண்பாட்டை மீட்டாயிற்று.
மது அருந்திக் களித்துக் கிடப்போரின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.
இது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி; எண்ணி எண்ணிப் பெருமை கொள்ளத்தக்க செய்தி.
தமிழர் வாழும் இடமெல்லாம் மதுக்குளங்கள் பெருகட்டும்; ஆறுகளில் நீருக்கு மாற்றாக மது இருகரை புரண்டு ஓடட்டும்.
அனைவரும் `பாம்புக் கடுப்பன்ன தோப்பி’ அருந்தி மகிழ்வோம்.
(பாம்புக் கடுப்பன்ன தோப்பி – தோப்பி: நெல்லிலிருந்து ஆக்கப்படும் மது. அகநானூறு: 348)
இவ்வுலகில் மனிதப் பிறப்பெடுத்ததன் பயனை அடைவோம்.
- அ. நம்பி
தினமலர் 26.9.2009
குடிக்க ஆரம்பித்துவிட்டு நிறுத்துவது எத்தனை கஷ்டமோ அத்தனை கஷ்டம் மதுவிலக்கை ரத்து செய்து விட்டு திரும்ப அமல் செய்வது. முக்கிய காரணம் மிகப்பெருத்த ரெவின்யூ லாஸ். இந்த வருமானத்தை வேறே எதைக்கொண்டும் ஈடுகட்ட முடியாது அரசாங்கத்தால். ஆரோக்கியம் கெடாமல் விபச்சாரம் செய்ய அரசாங்கமே ஐடியா தருவது போல ஆரோக்யத்துக்கு பாதனை இல்லாமல் குடிப்பது எப்படி என்றும் விழிப்புணர்ச்சியைப் பரப்பலாம்!
http://kgjawarlal.wordpress.com
அன்பருக்கு,
//முக்கிய காரணம் மிகப்பெருத்த ரெவின்யூ லாஸ். இந்த வருமானத்தை வேறே எதைக்கொண்டும் ஈடுகட்ட முடியாது அரசாங்கத்தால்.//
எந்த நாடாயினும் மக்கள் நலம் கருதும் அரசென்றால் மக்களுக்காக எவ்வித வருமான இழப்பையும் ஈடுகட்ட முடியும். முடியாது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத கூற்று ஐயா.
//ஆரோக்கியம் கெடாமல் விபச்சாரம் செய்ய அரசாங்கமே ஐடியா தருவது போல…//
நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.
//…ஆரோக்யத்துக்கு பாதனை இல்லாமல் குடிப்பது எப்படி என்றும் விழிப்புணர்ச்சியைப் பரப்பலாம்!//
உடல்நலத்துக்குத் தீங்கு இல்லாமல் குடிப்பது எப்படி? விழிப்புணர்ச்சிக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்கள்; புண்ணியம் உண்டாகும்.
எடுத்துக்கொண்ட தலைப்பில் வலுவான ஆதாரங்களை வைத்தது கண்டு :)))
வாழ்த்துக்கள் நண்பரே
குடியும் குடித்தனமுமாய் வாழக்கடவது :))
அன்பருக்கு,
//எடுத்துக்கொண்ட தலைப்பில் வலுவான ஆதாரங்களை வைத்தது கண்டு :)))//
நம் இனத்தின் வாழ்வாதாரமாக இருப்பது மது; ஆதாரம் இல்லாமல் எழுதலாமா?
//குடியும் குடித்தனமுமாய் வாழக்கடவது :))//
அன்புகூர்ந்து வாழ்த்தியமை மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. ஆயினும் நான் குடிப்பழக்கம் இல்லாதவன் ஆதலால் நம் சமுதாயத்தில் உள்ள நற்`குடி’ மக்கள் அனைவருக்கும் உங்களின் மயக்கம் தரும் வாழ்த்துதலை உங்கள் சார்பில் உரித்தாக்குகிறேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
மதுவை ஏன் அருந்துகிறார்கள்?
ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்
போதை வந்த போது புத்தில்லையே
புத்தி வந்த போது நண்பன் இல்லையே
என்ரு சொன்னவன்தான்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்ரு எழுதினான்.
மது சில சமயம் மருன்தாகவும் பயன் படுகிறது அல்லவா? உடல் வலிக்கும் மன வலிக்கும்?
அன்பருக்கு,
நல்வாழ்வுக்கான அறநெறிகள் தமிழிலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன; அவற்றை விட்டுவிட்டுத் திரைப்படப் பாடல்களை நம் வாழ்வின் வழிகாட்டியாகக் கொள்ளத் தேவை என்ன வந்தது?
//மது சில சமயம் மருன்தாகவும் பயன் படுகிறது அல்லவா? உடல் வலிக்கும் மன வலிக்கும்?//
உடல்வலிக்கும் உள்ள வலிக்கும் மருந்தாக மருத்துவமனைகளில் மதுவைத் தருகிறார்களா ஐயா?
Aiyya Avargaleh, Sila samayangalil Mathu Marunthaga Payanpadugirathu enbathai oppukolkirean – aanal mane vallikku Mathu Marunthalleh.
Unmaiyil piratchai ethu vendral, bothaikagavum, mayakthukagavumeh Tamilan Mathu arunthugiraan – Marunthukku Koodeh Mathuvai Marunthaga Parkavillai.
Romba Kolapiteano?
அன்பருக்கு,
//Romba Kolapiteano?//
இல்லையே, தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.
//Marunthukku Koodeh Mathuvai Marunthaga Parkavillai.//
நன்றாக உள்ளது ஐயா.
தமிழில் தட்டச்சு செய்ய முயற்சி செய்யலாமே? உதவி தேவையெனில் தொடர்புகொள்ளுங்கள்.
என் மின்னஞ்சல் முகவரி: pnrtrmr@gmail.com