பொருளடக்கத்திற்கு தாவுக

கமலா டீச்சரும் மினிஸ்கர்ட்டும்

செப்டம்பர் 17, 2009

ktm2

போன திங்கக்கெளமைக்குப் போன திங்கக்கெளம அல்லாருக்கும் முந்தியே ஸ்கூலுக்குப் போயிட்டேன். புது இங்கிலீஸ் டீச்சர் வருவாங்கன்னு வெள்ளிக்கெளமையே பெரிய வாத்தியார் சொல்லி இருந்தாரு. மொதமொதல்ல பாத்து `குட்மோனிங் டீச்சர்’ சொல்லணும்னு எனக்கு ஆசையா இருந்திச்சு.

நான் போனதுக்கு அப்புறந்தான் அல்லாரும் வந்தாங்க. கிஸ்ணன் சாரும் பெராஞ்சிஸ் சாருந்தான் மொதல்ல வந்தாங்க. எனக்கு ஆச்சரியமாப் போயிடிச்சு. இவங்கதான் எப்பவும் கடேசியா வருவாங்க. கிஸ்ணன் சாரோட `ஓண்டா’வில பெராஞ்சிஸ் சார் ஏறிக்கிட்டு வந்தாரு.

கிஸ்ணன் சார் ரொம்ப அளகா சட்ட சிலுவார்லாம் போட்டிருந்தாரு. போன வருசத்துக்கு மின்னாடி அவருக்குக் கலியாணம் நடந்திச்சு. அப்ப இருந்த மாரியே மாப்ள கணக்கா இருந்தாரு.

பெராஞ்சிஸ் சார் மட்டும் என்னாவாம்? நல்லா தலையெல்லாம் சீவி இருந்தாரு. எப்பவும் தலையில வெள்ள வெள்ளயா அஞ்சாறு முடி இருக்கும். இன்னிக்கு ஒன்னுகூடக் காணல. நல்லா பாலீஸ் பண்ணின கறுப்புச் சப்பாத்துப் போட்டிருந்தாரு.

தொடர்ந்து படிக்க: இங்கு

- அ. நம்பி

9 மறுமொழிகள் leave one →
  1. தமி்ழ்வாணன் நிரந்தரத் தொடுப்பு
    செப்டம்பர் 17, 2009 6:37 பிற்பகல்

    1970களிலே தங்களால் எழுதப்பட்ட கதையிலேயே பிற மொழிக் கலப்பு உள்ளதே !!
    இன்று அப்படி எழுதும் படைப்பாளிகளை தாறு மாறாக திட்டுகிறார்களே… மொழி பற்று அற்றவர்கள் என்று.. இதில் உங்கள் கருத்து என்ன?
    கதையும் கதையின் போக்கும் நன்று.

  2. செப்டம்பர் 17, 2009 7:52 பிற்பகல்

    அன்பர்களுக்கு,

    ஒரு சிறு திருத்தம்

    கதையில் காலவேறுபாட்டைக் காட்ட இரண்டு இடங்களில் சிவப்பு எழுத்துகளைப் பயன்படுத்தி இருக்கவேண்டும்; செய்யத் தவறிவிட்டேன்; படிக்கும்போது சிறு குழப்பம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

    இப்போது திருத்தப்பட்டுவிட்டது. தவற்றுக்கு வருந்துகிறேன்.

  3. செப்டம்பர் 17, 2009 8:13 பிற்பகல்

    அன்பருக்கு,

    //1970களிலே தங்களால் எழுதப்பட்ட கதையிலேயே பிற மொழிக் கலப்பு உள்ளதே !!//

    `…இடமறிந்து நிலையறிந்து இன்றியமையாத பிறமொழிச் சொற்களை மட்டும் கலந்து நல்ல தமிழ் எழுத முற்பட வேண்டும் என்றறிக.’ என்பார் அறிஞர் அ. கி. பரந்தாமனார்.

    பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவது என் இயல்பன்று; என் எழுத்துகளில் பிறமொழிக் கலப்பு மிக மிக அருகியே காணப்படும். அறிஞர் அ. கி. ப. அவர்களின் கொள்கையே என் கொள்கை.

    மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன் சொல்வதாக இக்கதை எழுதப்பட்டுள்ளது; அவன் கூற்றாக எழுதும்போது அவன் மொழியில் எழுதுவதுதான் சரியாக அமையும். ஆனால் இதே கதையை எழுத்தாளன் தன் கூற்றாக எழுதினால் இப்படி எழுதுதல் கூடாது.

    //இன்று அப்படி எழுதும் படைப்பாளிகளை தாறு மாறாக திட்டுகிறார்களே… மொழி பற்று அற்றவர்கள் என்று.. இதில் உங்கள் கருத்து என்ன?//

    கூடை கூடையாகவும் மூட்டை மூட்டையாகவும் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே கலந்து எழுதினால் திட்டாமல் என்ன செய்வார்கள்?

    மொழிப்பற்று…? உண்மைதான். ஓரளவேனும் மொழிப்பற்று இருந்தால் மொழிக்குக் கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபடுவார்களா?

  4. செப்டம்பர் 24, 2009 3:19 பிற்பகல்

    //மொழிப்பற்று…? உண்மைதான். ஓரளவேனும் மொழிப்பற்று இருந்தால் மொழிக்குக் கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபடுவார்களா?//

    அருமையான பதில். தங்களின் கொள்கையை நான் போற்றுகிறேன் ஐயா. தொடர்ந்து நல்ல படைப்புகளையும் தக்க நேரத்தில் நல்ல பதிலடியும் கொடுங்கள்.

    நன்றி.

  5. செப்டம்பர் 24, 2009 3:39 பிற்பகல்

    அன்பருக்கு,

    //அருமையான பதில். தங்களின் கொள்கையை நான் போற்றுகிறேன் ஐயா. தொடர்ந்து நல்ல படைப்புகளையும் தக்க நேரத்தில் நல்ல பதிலடியும் கொடுங்கள்//

    தொடர்ந்து வாருங்கள் ஐயா.

    வாழ்க; வளர்க.

  6. அக்டோபர் 6, 2009 10:48 மு.பகல்

    tamil patrtru miga mukkiam.
    ungalin sevai todarattum.
    vaazhtukkal.

  7. அக்டோபர் 6, 2009 12:04 பிற்பகல்

    அன்பருக்கு,

    //tamil patrtru miga mukkiam.
    ungalin sevai todarattum.
    vaazhtukkal.//

    தொடர்ந்து வாருங்கள் ஐயா.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  8. அக்டோபர் 26, 2009 1:30 பிற்பகல்

    //மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன் சொல்வதாக இக்கதை எழுதப்பட்டுள்ளது; அவன் கூற்றாக எழுதும்போது அவன் மொழியில் எழுதுவதுதான் சரியாக அமையும். ஆனால் இதே கதையை எழுத்தாளன் தன் கூற்றாக எழுதினால் இப்படி எழுதுதல் கூடாது.//

    இதுதான் உண்மை ,என்னை 9 வயது பையனாக ஆக்கி விட்டீர்களே அய்யா.என் இளமையை திருப்பி கொடுத்ததற்கு நன்றி உடையவனாக இருப்பேன் அய்யா

  9. அக்டோபர் 26, 2009 3:16 பிற்பகல்

    அன்பருக்கு,

    //இதுதான் உண்மை ,என்னை 9 வயது பையனாக ஆக்கி விட்டீர்களே அய்யா.என் இளமையை திருப்பி கொடுத்ததற்கு நன்றி உடையவனாக இருப்பேன் அய்யா.//

    கழிந்துபோன காலத்தை மீண்டும் பெறமுடியாது என்பது உண்மை எனினும் அவ்வப்போது அதனை எண்ணிப் பார்த்து `இளமை வாழ்க்கை’ வாழ்வது நல்லதுதான் ஐயா.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers