ஈழம்: நான்கின் வளர்ச்சி ஐந்து
அடுத்து என்ன?
எல்லாம் முடிந்துவிட்டனவா?
ஈழத் தமிழர்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
வினாக்கள் பல.
உள்ளத்தைச் சிதைக்கும் எல்லா வினாக்களுக்கும் காலம் விடை சொல்லும்.
- அ. நம்பி
மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக்கொண்டு, இனம்புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது!
"ஈழம் எங்கள் தாகம்’ என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய்நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதாண்டு காலம் சிம்ம சொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டு விட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன!
ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள்: ""அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன் பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போர்க் களங்களில் தென்படுவான்! அங்கே போய்ப் பாருங்கள்!”
ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு மகனை ஈழத் தாய் ஒருத்தி அந்த மண்ணின் விடுதலைக்காகச் சுமந்தாள்!
முழுதும் படிக்க – இங்கு:

//உலகின் மூத்த இனம், சிந்து சமவெளி நாகரிகம் கண்ட இனம், தெய்வப் புலமைத் திருவள்ளுவனைப் பெற்ற இனம் நாதியற்றுப் போக இயற்கை அனுமதிக்காது.//
YES
அன்பருக்கு,
ஈழத் தமிழ்மக்கள் எதிர்பார்ப்பது திண்ணமாக நடக்கும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
VANAKAM. ULAGA TAMILANUKU MUGAVARAI KODUTHA ANNAN PIRABA VARUVAR VELVAR. TAMIL NADU KARUNANITHI INNA THUROKI.
MALARUM TAMIL EELAM.
TAMILAN’
MALAYSIA
There is no word to express for he’s life.he is a reall armour of man.
i pray to God for his soul to be in peace.Mr. V.Prabakaran is a mighty warrior,Iron man.They only can touch his flesh but his aim would sucsss in one day.that day is not very far away,it will be soon….
அன்பருக்கு,
//MALARUM TAMIL EELAM.//
மனிதரின் விடுதலை வேட்கையை அழித்தொழிக்க எவராலும் முடியாது. இன்றோ நாளையோ இல்லையெனினும் எதிர்காலத்தில் ஈழம் தனிநாடாக உருவாவது திண்ணம்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
திலகவதி அவர்களுக்கு,
அந்த மாமனிதரைக் குறித்து இருவேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன; உடனடியாக முடிவெடுக்கத் தேவையில்லை; பொறுத்திருங்கள்.
வரவுக்கும் கருத்துச் சொன்னமைக்கும் நன்றியறிதல் உடையேன்.
ஆக்கமிக்க கருத்துக்கள் ஐயா, கண்ணீரை வரவழைத்து விட்டது உங்கள் உரை, நடந்தது நடந்துவிட்டது! காலன் தன் கொடுங்கரங்களால் ஒரு மாவீரனை உள்வாங்கிவிட்டான்(உண்மையாயிருந்தால்) அடுத்தடுத்து நிகழ்வுகள் நிச்சயம்! ஒன்றுபட்ட உலகத்தமிழர்களாக எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச ஈழமக்களுக்காகவாவது நலம் கிட்ட வேண்டி ஒன்றாய் பிரார்த்தனைகள் செய்வோம், ஒவ்வொரு தமிழனும், ஏன் நல் மனம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் வேண்டுதல் செய்வோம், இயற்கையிடம், அவர்கள் வாழ்வை மீட்டுக்கொடுக்க,
“இயற்கையே பஞ்சபூதங்களால் உலகை ஆளும் மகா சக்தியே, வாடிடும் எங்கள் ஈழச்சகோதர சகோதரிகளைக்காப்பாற்று”
எல்லோரும் வேண்டியிருப்போம், எனினும் மீண்டும் மீண்டும் மனமார நாம் சொல்வோம், மனித மனதின் சக்தி மகத்தானது, நிச்சயம் வெல்வோம்,
அன்பருக்கு,
//எல்லோரும் வேண்டியிருப்போம், எனினும் மீண்டும் மீண்டும் மனமார நாம் சொல்வோம், மனித மனதின் சக்தி மகத்தானது, நிச்சயம் வெல்வோம்.//
உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள்; நானும் பகிர்ந்துகொள்கிறேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
விதை விதைக்கப்பட்டுவிட்டது.
விதை முளைத்தே தீரும்
பூமிக்குள் வேர்விட்டு பரந்துவிட்டது
கிளைகளை கழித்துள்ளதால் இனி மரம் நன்றாகவே வளரும்.
வினையும் விதைக்கப்பட்டுவிட்டது
அதன் பலனையும் அவர்கள் அனுபவித்துதான் ஆகேவேண்டும்.
காலம் பதில் சொல்லும்
கவலை வேண்டாம்
அன்பருக்கு,
//கிளைகளை கழித்துள்ளதால் இனி மரம் நன்றாகவே வளரும்.//
உண்மை; அடிமரம் அப்படியே உள்ளது; வருங்காலத்தில் வெடித்துக் கிளைத்து வளரும்; ஐயமில்லை.