தமிழக வாக்காளர்களுக்கு…

2009 May 11

te03

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே,
   வாய்ச்சொல்லில் வீரரடி!

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ! – கிளியே,
   நாளில் மறப்பாரடீ!

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ! – கிளியே,
   பேசிப் பயனென்னடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர்செய்யப்
பேதைகள் போலுயிரைக் – கிளியே,
   பேணி இருந்தாரடீ!

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ! – கிளியே,
   ஊமைச் சனங்களடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக் கோர்கணமும் – கிளியே,
    வாழத் தகுதியுண்டோ?

மானம்சிறி தென்றெண்ணி வாழ்வுபெரி தென்றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில் – கிளியே,
   இருக்க நிலைமையுண்டோ?

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்புங்கொண்டே! – கிளியே,
   சிறுமை யடைவாரடீ!

சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை இரங்காரடீ! – கிளியே,
   செம்மை மறந்தாரடீ!

te01 te02

தமிழக வாக்காளர்களுக்குப் பணிவான வேண்டுகோள்:

pr05

3 Responses leave one →
  1. 2009 May 16

    சனியன்று வாக்கு எண்ணிக்கை
    யாரை சனி பிடிக்கிறதோ?
    யாரை சனி விடுகிறதோ?
    இன்று தெரிந்துவிடும்
    மக்களின் எண்ணம் புரிந்துவிடும்
    5 விரலா இல்லை
    2.விரலா இல்லை
    கையா அல்லது தாமரையா

  2. 2009 August 19

    tamil naddil engaiya tamilan irukkan(silarai tavira)
    nan(malaysia)tamil naddukku sutri parka kuda varamadden

  3. 2009 August 19

    அன்பருக்கு,

    அரசியலோடு ஒட்டுமொத்த இனத்தைச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு பாழ்பட்டுப் போனதற்குக் காரணம் அரசியல்; இனம் அன்று.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS