தில்லுமுல்லுப் பரப்புகை
ஈழத் தமிழன் பட்டினி கிடந்தாலும் பட்டினி கிடந்து செத்தாலும் பிணவாணிகர்களுக்குப் பெருத்த ஆதாயம்.
மே 13-ஆம் நாள்வரை தொடர்ந்து பரப்புகை செய்யலாம்.
தமிழனின் பேரிடரை வாக்குகளாக மாற்றலாம்.
ஏன் கூடாது?
தமிழ்நாட்டின் மாமன்னர் முதலாம் வடுகபூபதி இதனைத்தானே செய்துகொண்டிருக்கிறார்?
அங்கே சிதைந்துகொண்டிருப்பவர்களுக்கு உணவு போய்ச் சேர்ந்தால் என்ன, சேராவிட்டால் என்ன?
செய்தி போதும்; செய்தியால் வாக்குகள் கிடைத்தால் போதும்.
- அ. நம்பி
இது உண்மை நிலவரம்:
இது தேர்தல் பரப்புகை:
சென்னையில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் உணவுப்பைகள் கப்பல்கள் மூலமாக, ஓரிரு தினங்களில் அனுப்பப்படுகிறது
சென்னை, மே.8-
இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அடங்கிய 50 ஆயிரம் பைகள், சென்னையில் இருந்து கப்பல்கள் மூலம் ஓரிரு தினங்களில் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை
இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான போர் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து, அங்குள்ள தமிழர்களின் நிலை மோசமானது. உயிர் பிழைப்பதற்காக இருப்பிடத்தை விட்டு காடுகளுக்குள் சென்று தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கு உணவு, துணிகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி கடந்த நவம்பர் 13-ந் தேதி சென்னையில் இருந்து உணவுப்பொருட்கள், துணி, சோப்பு உள்ளிட்ட பல பொருட்கள் அனுப்பப்பட்டன. 80 ஆயிரம் பைகளில் இவை அடைக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் ஒவ்வொருவருக்கும் வினியோகிக்கப்பட்டது.
50 ஆயிரம் பைகள்
இலங்கை தமிழர்களுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய 50 ஆயிரம் பைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவற்றை தயார் செய்து பைகளில் போட்டு அடைக்கும் பணி, சென்னையில் உள்ள 10 சிவில் சப்ளைஸ் குடோன்களில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.
ஒவ்வொரு பையிலும் தனித்தனியாக அரிசி (`ஏ’ கிரேடு தரமான அரிசி ) 15 கிலோ, துவரம் பருப்பு 2 கிலோ, சர்க்கரை 1 கிலோ, தேயிலை பாக்கெட் 2, ஒரு ரின் சோப்பு, ஒரு கோல்கேட் பேஸ்ட், ரெக்சோனா சோப்பு ஒன்று போன்ற பொருட்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர அவர்களுக்கு தேவையான துணிமணிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனி பாக்கெட்டுகளில் அடைக்கிறது. இந்த முறை தலா 2 தட்டு, டம்ளர், கரண்டிகள் கூடுதலாக அனுப்பப்பட உள்ளன. இந்த பாத்திரங்களும் தனியாக பார்சல் செய்யப்படுகின்றன. –
கப்பல் மூலம்…
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இலங்கை தமிழனுக்கும் தலா ஒரு உணவுப்பை, துணி பார்சல், பாத்திர பார்சல் வழங்கப்படும். உணவு பார்சலுக்கு ரூ.350, துணி பார்சலுக்கு ரூ.900, பாத்திர பார்சலுக்கு ரூ.280 செலவிடப்படுகிறது. அதாவது, நபர் ஒருவருக்கு ரூ.1,530 செலவில் இவை வழங்கப்பட உள்ளன. – செய்தி:
அனுப்பப்பட்டது
அனுப்பபடுகிறது
என்று எத்தனை நாட்கள் சொல்லிகொண்டிருப்பீர்கள்?
அவைகள் அவர்களுக்கு போய் சேர்ந்து பயன்பட்டதா என்ற தகவலே இல்லையே?
அவைகளை சிங்கள ராணுவம் பெற்றுக்கொண்டு உண்டு கொழுத்து தமிழர்களை
அழித்தொழிக்க அல்லவோ பயன்படுகிறது
இந்தியா அரசு நினைத்திருந்தால் ஐ நா சபையில் அமளி செய்து
ஐ நா அமைதி படையை அங்கு கொண்டு நிறுத்தி தமிழருக்கு உதவி இருக்கலாம்
அவர்கள் அவ்வாறு செய்யாமைக்கு காரணம் தமிழ்நாட்டில் உள்ள சிதறிப்போன சுயநலம் கொண்ட அரசியல் கட்சி தலைவர்களே.பொறுப்பு.
அவர்களை இன்னும் ஆதரிக்கும் சுயநலம் கொண்ட இங்குள்ள இரக்கமில்லா மனிதர்களின் அணிவகுப்பு.
நினைக்கவே அருவெறுப்பு .
அன்பருக்கு,
//இந்தியா அரசு நினைத்திருந்தால் ஐ நா சபையில் அமளி செய்து
ஐ நா அமைதி படையை அங்கு கொண்டு நிறுத்தி தமிழருக்கு உதவி இருக்கலாம்.//
கொலைக்கு உடந்தையாய் இருக்கும் இந்திய அரசு கொலையை நிறுத்த நினைக்குமா?
மைய அரசைத் தாங்கிப் பிடிக்கும் தமிழகக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருந்தால் நிலைமை மாறி இருக்கக்கூடும்.