வஞ்சக மன்னர் வடுகபூபதி

2009 May 7

mks1

கட்சி அரசியல் என்பது எல்லா நாடுகளிலும் ஏறத்தாழ ஒரே இயல்புடையதுதான்.

அரசியல்வாதிகளின் இயல்பும் பொதுவாக நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை.

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளின் செயல்கள் எல்லா நாடுகளிலும் பெரும்பாலும் ஒத்த தன்மை உடையனவாகவே இருக்கும்.

வாக்குகளை நோக்கமாகக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.

இந்த வாக்குறுதிகளில் `இருப்பது வாக்கு; இல்லாதது உறுதி’ என்பது பொதுவான உண்மை.

எனவே தேர்தல் நேரத்தில் சொல்லப்படும் வாக்குறுதிகளைப் பெரும்பாலோர் கருத்தில் கொள்வதில்லை.

தமிழகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் கட்சிகள் சொல்லும் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்வதும் புறந்தள்ளுவதும் தமிழக வாக்காளர்களின் உரிமை.

உள்ளூர்ப் பிரச்சினகள் குறித்து என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.

ஆனால் ஒவ்வொரு மணித்துளியும் உரிமைக்காகவும் உயிருக்காகவும் உணவுக்காகவும் மானத்துக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்களின் சொல்லொணா இன்னலை வெறும் தேர்தல் பரப்புகைக்குப் பயன்படுத்திக்கொள்வது என்ன நியாயம்?

ஈழ மக்களையும் தமிழக மக்களையும் ஒருசேர ஏமாற்றுவது நடைமுறையாகிவிட்டது.

சிலமுறை ஏமாற்றினால் அதற்குப் பெயர் ஏமாற்றுவேலை.

பலமுறை ஏமாற்றினால் நாடகம்.

தொடர்ந்து ஏமாற்றினால் கபட நாடகம்; வஞ்சக நாடகம்.

- அ. நம்பி

dntn01 dnmn1

வீடு வீடாக செல்! வாக்குகளைக் கேள்! தெரு தெருவாக அலைந்திடு! வீதி வீதியாக சென்றிடு ஊரெல்லாம் சுற்றிடு! தமிழ்நாட்டை காப்பாற்றிடு! இந்தியத் தாயகத்தை பாதுகாத்திடு! – அதற்காகவே தி.மு.க கழகம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே, நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம். அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். – கருணாநிதி

செய்தி:

10 Responses leave one →
  1. 2009 May 7

    எதற்கையா வெற்றி தேடி தர வேண்டும்?
    கனிமொழியை காபினெட் அமைச்சராகாவா?
    கயல்விழியை ராஜ்ய சபா உறுப்பினராக்கவா?
    உதயநிதியை ராஜ்ய சபா உறுப்பினராக்கவா?
    இன்னும் எதற்காக?

  2. 2009 May 7

    அன்பருக்கு,

    //எதற்கையா வெற்றி தேடி தர வேண்டும்?
    கனிமொழியை காபினெட் அமைச்சராகாவா?
    கயல்விழியை ராஜ்ய சபா உறுப்பினராக்கவா?
    உதயநிதியை ராஜ்ய சபா உறுப்பினராக்கவா?//

    ஆமாம்.

    //இன்னும் எதற்காக?//

    இன்னும் ஏழு தலைமுறைகளுக்கு நிதியைப் பெருக்குவதற்காக.

  3. 2009 May 8
    BADMANATHAN permalink

    EN ANBARNTHA TAMIL NENJANGALE,EELLATHIL ULLA NAM URAVINARGALLUKU NAMMAL MUDINHA VARAIKUM GURAL GODUPOM.AANAL MATRAVARGALAI POLE ARASIYALUKAGE VERUM VAI VAARTHAI MATTUM VENDAM,TAMIL TUROGI KARUNANITHI,JEYALALITHA POLE.20 VARUDATUKU MUNBU RAJIV KANTHI KOLAYAI SOLLI-SOLLI EELATHIL ULLA NAM URAVINARGALAI GONDRU GUVIKKA SINGALAVANUKU UTHAVI SEITHU GONDIRUKIRAN INDIA NAATUKARAN.PERUKUTAN INDIAVIL 7 KODI TAMILAN.ONNUM SEIYA MUDIYAVILLAI,KARANAM ENNA TERIYUMA NEENGAL TERTEDUTA TALAIVAN EVANUM SARIYILLAI.ENTHA MURAI TERTALILAVUTU NANDRAGE YOSITU MUDIVU SEIYAVUM.ANBARNTE URAVINARGALE APPADI SEIYAVIDDAL UNGGALAI ORU NAAL ENTHE NILLAIKU TALLAPADUVIRKAL.KAVANAM.

    ORU TAMILANUKU ORU TAMILANTHAN UTAVI SEIYA VENDUM.ENNORU JATHIKARAN UTAVI SEIYA MATTAN.

    TAMIL VAALGE,
    TAMIL MAKKAL VALGE,
    TAMIL INAM VALGE,
    TAMIL EELAM VALGE,
    NAMATHU SAATHANAI TALAIVAR,NAM TAMILANIN TALAIVAR,ANNAN VELUPILLAI PRABKARAN VALGE,VALGE,VALGE…..

  4. 2009 May 8

    அன்பருக்கு,

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  5. 2009 May 8
    Tamilvanan permalink

    வஞ்சக மன்னர் வடுகபூபதி -தமி்ழின துரோகி.
    இனிமேல்தான் தமி்ழ் ஈழத்தை பெற்று தருவாராம். ரொம்ப நம்பிட்டோம்.

    மகனுக்கோ, மகளுக்கோ, மருமகனுக்கோ, மருமகளுக்கோ, பேரப்பிள்ளைக்கோ, வைப்பாட்டிக்கோ அல்லது வைப்பாட்டி பிள்ளைகளுக்கோ கேபினட் மந்திரி அல்லது துணைப் பிரதமர் பதவி பெற்று தருவார் என்று சொன்னால் நிச்சயம் நாடே நம்பும்.

  6. 2009 May 8

    அன்பருக்கு,

    //மகனுக்கோ, மகளுக்கோ, மருமகனுக்கோ, மருமகளுக்கோ, பேரப்பிள்ளைக்கோ, வைப்பாட்டிக்கோ அல்லது வைப்பாட்டி பிள்ளைகளுக்கோ……//

    இந்தப் பட்டியல் இன்னும் நீளும்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  7. 2009 May 14

    soollatha sei

  8. 2009 May 14

    அன்பருக்கு,

    //soollatha sei//

    தேர்தலுக்காகச் சொன்னார்; தேர்தல் முடிந்துவிட்டது; இனி அவர் சொல்லவும் மாட்டார்; செய்யவும் மாட்டார்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  9. 2009 May 16

    அவருக்கு தேவையான அளவு கிடைத்துவிட்டது

  10. 2009 May 23

    சுற்றங்களுக்காக பதவி பெற பறந்து சென்ற தலையும் அதன் வாரிசுகளும்
    வரிந்து கட்டிக்கொண்டு அவைகளை பெற போராடின
    இல்லை என தெரிந்ததும் பதவிஏர்ப்பு விழாவில் கூட கலந்துகொள்ளும்
    பெருந்தன்மை இல்லாமல் கூட்டமாக திரும்பி தமிழன் என்பவன் இப்படிதான்
    நடந்துகொள்வான் என்பதை உலகிற்கு பறைசாற்றிய வாழும் வள்ளுவருக்கு நன்றிகள்.
    லாலுவும், வாஜ்பஎயும், அத்வானியும், பாஸ்வானும் தங்கள் தேர்தலில் நடந்துகொண்ட விதத்தை வெளியில் காட்டிகொள்ளாமல் விழாவில் கலந்துகொண்டு. அரசியல் நாகரீகத்தை காத்தனர்.
    தமிழ்நாட்டில் மட்டும்தான் சுயநலம் கூத்தாடுகிறது.
    என்றும் திருந்தாத இனம். தமிழினம்
    புறநானூற்று பெருமை பேசியே புரட்டும் கூட்டம்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS