கும்பகோணத்தில் மூட்டை தூக்க…
இத்தாலிய அந்தோணியா மைனோவின் இந்தியப் புடைவைத் தலைப்பில் தொங்கிக்கொண்டு பிழைப்பு நடத்தும் தொங்குபாலு தங்கபாலு என்னும் அதிமேதாவி சொல்கிறார்:
- இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க.வின் நிலைப்பாடும் சரியான பாதை தான். இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்.
- இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இலங்கை தமிழர் பிரச்சினைக்கும், இந்தியாவில் நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கை பிரச்சினை என்பது வேறு. இந்திய பிரச்சினை என்பது வேறு. இந்தியாவின் வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் யார் என்பதை மக்கள் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டிய தேர்தல். எங்கள் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும்.
"இலங்கை தமிழர் பிரச்சினைக்கும், இந்தியாவில் நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கை பிரச்சினை என்பது வேறு. இந்திய பிரச்சினை என்பது வேறு" என்று இப்போது கண்டுபிடித்துச் சொல்லும் இவர் தம் அறிக்கையில் மீண்டும் மீண்டும் இலங்கைப் பிரச்சினை குறித்து உளறுவது ஏன்?
(தினத்தந்தி – எங்கள் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை கே.வி.தங்கபாலு பேட்டி)
`தமிழ்முரசு’ நாளிதழில் (தினகரன் குழும நாளிதழ்) முதற்பக்கத்தில் (3.5.2009) திமுக வெளியிட்ட விளம்பரம்:
இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனில் ஏன் இந்த விளம்பரம்?
`திமுக தவறு செய்துவிட்டது’ என்று தங்கபாலு சொல்கிறாரா?
`திமுக மக்களை ஏமாற்றுகிறது’ என்று சொல்கிறாரா?
இல்லை, கூட்டணியில் கூடிப் பேசி ஊரை ஏமாற்றுகிறார்களா?
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இலங்கை தமிழர் பிரச்சினைக்கும், இந்தியாவில் நடக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கை பிரச்சினை என்பது வேறு. இந்திய பிரச்சினை என்பது வேறு. இந்தியாவின் வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் யார் என்பதை மக்கள் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டிய தேர்தல். எங்கள் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும்.
நம்பிக்கை வேண்டியதுதான்; ஆனால் அதற்காக இப்படியா?
`கும்பகோணத்தில் மூட்டை தூக்கக் குற்றாலத்திலேயே முண்டாசு கட்டினானாம்’ என்று பெரியவர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள்.
தூக்குவதற்கு மூட்டைகள் கிடைக்குமா என்பது கும்பகோணத்துக்குச் சென்ற பின்னர்தான் தெரியும்.
குற்றாலத்திலேயே முண்டாசு கட்டிக்கொண்டு திரியும் அறிவுக்கொழுந்துகள் எப்படி வேண்டுமானாலும் தருக்கித் திரியட்டும்; உதவுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஈழத் தமிழனின் நெஞ்சுக் காயங்களைத் தம் அழுக்கடைந்த கைநகங்களால் மேலும் மேலும் கீறிக் கிழிக்காமல் இருந்தால் போதும்.
- அ. நம்பி
`கும்பகோணத்தில் மூட்டை தூக்கக் குற்றாலத்திலேயே முண்டாசு கட்டினானாம்’
பழமொழி நல்லாயிருக்கே.
அன்பருக்கு,
//பழமொழி நல்லாயிருக்கே.//
பழமொழி பொருத்தமாய் இருக்கிறதா என்று சொல்லவில்லையே?
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
அழுக்கடைந்த கைநகங்களால் – உண்மை பொதிந்த வார்த்தைகள்.
அரசியல் ஆதாயத்துக்காக இத்தாலிய அந்தோணியா மைனோவின் காலை கூடக் கழுவி விடும் கைகள். அழுக்கடைந்த கைகள்.
அன்பருக்கு,
//அரசியல் ஆதாயத்துக்காக இத்தாலிய அந்தோணியா மைனோவின் காலை கூடக் கழுவி விடும் கைகள்.//
இதற்கும் போட்டா போட்டி இருக்கிறது.
all leaders in tamil nadu & out side tamil nadu…..all are liers
அன்பருக்கு,
வாருங்கள். வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.