எருதுக்குப் புண் அழற்சி; காக்கைக்கோ பசி அழற்சி!
சொல்பவர்: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஜி. பொன்னம்பலம்.
சொல்பவர்: கருணாநிதி உலகெங்கணும் வாழும் கோடானு கோடித் தமிழ்மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் தமிழினத் தலைவர், நடமாடும் தொல்காப்பியர், வாழும் வள்ளுவர், இருக்கும் இளங்கோ, முத்தமிழ் அறிஞர், செந்தமிழ் வித்தகர், செம்மொழிச் செம்மல், சொல்லின் செல்வர், பைந்தமிழ்ப் பாவலர், ஈழத்தின் காவலர், தண்டவாளம் வென்றவர், குடமுருட்டி சென்றவர், கலைத்துறையின் தலைமகன், அஞ்சுகத்தாயின் அருந்தவப் புதல்வர், டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள்.
ஆமாம்; ஈழத்தில் தமிழ்மக்களுக்கு ஏதும் ஆகவில்லை. இதோ, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பிள்ளைகளும் பெரியவர்களும் தூவானத்தில் நனைந்து ஆடிப் பாடிக் களித்துக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்!
`எருதுக்குப் புண் அழற்சி; காக்கைக்கோ பசி அழற்சி’ – இது பழமொழி.
- அ. நம்பி

பழமொழி மாத்திரமிலலை, புது மொழியும் அதுவேதான்.
அன்பருக்கு,
//பழமொழி மாத்திரமிலலை, புது மொழியும் அதுவேதான்.//
நீங்கள் சொல்வது உண்மை. பழமொழிக்குப் புத்துயிர் கொடுத்துப் புதுமொழியாக்கப் பலர் இருக்கின்றனர்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.