புளியின் ஓசை

2009 April 28

unn01

இலங்கையில் போர்நிறுத்தம் கோரிக் கடந்த ஆண்டு நவம்பர்த் திங்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது நாடகத்தின் முதல் காட்சி.

மைய அரசுக்கு இறுதி வேண்டுகோள், ஆறாவது இறுதி வேண்டுகோள், பதினேழாவது இறுதி வேண்டுகோள், இருபத்தெட்டரையாவது இறுதி வேண்டுகோள் என்று பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன; இப்படிச் சில காட்சிகள்.

அனைத்துக்கட்சிக் கூட்டம், கடிதங்கள், தந்திகள், மனிதச் சங்கிலி என்று நாடகக் காட்சிகள் தொடர்ந்தன.

நாடகத் துறையிலும் திரைப்படத்துறையிலும் பட்டறிவு வாய்ந்தவர் ஆதலால் கருணாநிதியின் இந்த நாடகக் காட்சிகள் திறம்படவே அரங்கேற்றப்பட்டன.

ஆனால் தமிழக மக்களில் பெரும்பாலானோர் ஏமாறுவதாக இல்லை.

தமிழக மக்களின் ஈழத் தமிழர் ஆதரவானது காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு எதிர்ப்பாக மாறத் தொடங்கியது.

ஈழத் தமிழினத்தின் இன்னலை எதிர்க்கட்சிகள் மிகச் சரியாகக் கையாளத் தொடங்கினர்.

எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்தவர் ஆயிற்றே, கருணாநிதிக்குத் தெரியாதா என்ன?

தேர்தலில் படுதோல்வி அடைய நேரிடும் என்பது நிச்சயமான உண்மை ஆயிற்று.

tmr

வயிற்றில் புளி கரைபடத் தொடங்கியது. 

`ஏதாவது செய்து நிலைமையைத் திசைதிருப்பவேண்டும்’ எனும் இக்கட்டான நிலை.

திடீர் உண்ணாநோன்புப் போராட்டம் அரங்கேறியது.

அவசரமாக அரங்கேற்றப்பட்டதால் இந்தக் காட்சி மக்களைக் கவரவில்லை.

மலிவான நகைச்சுவைக் காட்சியாக அமைந்துவிட்டது.

போராட்டத்துக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட காரணங்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டு வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்ட காரணங்களும் கேலிச் சிரிப்பை வரவழைப்பனவாக அமைந்துவிட்டன.

kj

வயிற்றில் புளி இன்னும் கரைந்துகொண்டுதான் இருக்கிறது; முன்பைவிட மிகுதியாகக் கரைந்துகொண்டிருக்கிறது.

ஈழத் தமிழ்மக்களின் இன்னலைப் பயன்படுத்திக்கொண்டு தேர்தலில் தம் பக்கமாக நிறைகோலைத் திருப்பவேண்டும்.

நன்கு திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்படும்.

மே 13-ஆம் நாள்வரை நாடகத்தில் இன்னும் பல காட்சிகளை மக்கள் எதிர்பார்க்கலாம்.

- அ. நம்பி

இணையத்தில் எழுதுபவர்கள் ஈழத் தமிழ்மக்களின் பிரச்சினையில் கருணாநிதியின் செயல்களையும் செயலின்மையையும் விளக்கி எழுதினால் சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. `இழிவு செய்கிறார்கள்’ என வருந்துகிறார்கள்; சினம் கொள்கிறார்கள்.

கருணாநிதி குறித்து `மரியாதை’ இல்லாமல் எழுதப்படுகிறது என எண்ணுபவர்களுக்காக:

1. நாடகத் துறையிலும் திரைப்படத்துறையிலும் பட்டறிவு வாய்ந்தவர் ஆதலால் கருணாநிதியின் இந்த நாடகக் காட்சிகள் திறம்படவே அரங்கேற்றப்பட்டன.

திருத்தம்: நாடகத் துறையிலும் திரைப்படத்துறையிலும் பட்டறிவு வாய்ந்தவர் ஆதலால் உலகெங்கணும் வாழும் கோடானு கோடித் தமிழ்மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் தமிழினத் தலைவர், நடமாடும் தொல்காப்பியர், வாழும் வள்ளுவர், இருக்கும் இளங்கோ, முத்தமிழ் அறிஞர், செந்தமிழ் வித்தகர், செம்மொழிச் செம்மல், சொல்லின் செல்வர், பைந்தமிழ்ப் பாவலர், ஈழத்தின் காவலர், தண்டவாளம் வென்றவர், குடமுருட்டி சென்றவர், கலைத்துறையின் தலைமகன், அஞ்சுகத்தாயின் அருந்தவப் புதல்வர், டாக்டர் கலைஞர் ஐயா அவர்களின் இந்த நாடகக் காட்சிகள் திறம்படவே அரங்கேற்றப்பட்டன.

2. எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்தவர் ஆயிற்றே, கருணாநிதிக்குத் தெரியாதா என்ன?

திருத்தம்: எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்தவர் ஆயிற்றே, உலகெங்கணும் வாழும் கோடானு கோடித் தமிழ்மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் தமிழினத் தலைவர், நடமாடும் தொல்காப்பியர், வாழும் வள்ளுவர், இருக்கும் இளங்கோ, முத்தமிழ் அறிஞர், செந்தமிழ் வித்தகர், செம்மொழிச் செம்மல், சொல்லின் செல்வர், பைந்தமிழ்ப் பாவலர், ஈழத்தின் காவலர், தண்டவாளம் வென்றவர், குடமுருட்டி சென்றவர், கலைத்துறையின் தலைமகன், அஞ்சுகத்தாயின் அருந்தவப் புதல்வர், டாக்டர் கலைஞர் ஐயா அவர்களுக்குத் தெரியாதா என்ன?

9 Responses leave one →
  1. 2009 April 28
    velavan permalink

    pulien osai very good.

  2. 2009 April 28

    அன்பருக்கு,

    //pulien osai very good.//

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. 2009 April 28
    mrkkrm permalink

    Well said.

  4. 2009 April 28

    புளி கரைந்தாலும் அதற்குள் கொட்டை இருப்பதால் அது மீண்டும் மீண்டும் முளைத்து கொண்டே இருக்கிறது.

  5. 2009 April 28
    suban permalink

    நன்றாக இருந்தது.
    இதனை ஒரு நகைச்சுவைத் திரைப்படமாக தயாரித்தால் இன்னும் நல்லது.
    படத்தின் பெயருக்கு எனது பரிந்துரை “முதலாம் புளிகேசி”

  6. 2009 April 28

    அன்பருக்கு,

    //இதனை ஒரு நகைச்சுவைத் திரைப்படமாக தயாரித்தால் இன்னும் நல்லது.
    படத்தின் பெயருக்கு எனது பரிந்துரை “முதலாம் புளிகேசி”//

    படங்கள் தயாரித்து அனுபவம் உண்டோ, அற்புதமாகப் பெயர் வைக்கிறீர்களே?

    `முதலாம் புளிகேசி’ – இந்தப் பெயருக்காக மட்டுமே படம் நூறு நாள்கள் ஓடும்.

  7. 2009 April 28

    இரண்டு மாதத்திற்கு முன் கலைஞர் ஐயாவின் (ஐயாதான் ஒரு கேடு) ஈழம் குறித்த பேட்டிகளும், இன்றைய தேதியில் அடிக்கும் கூத்தும் வேதனையையும் வெறுப்பையும் உண்டாக்குகிறது. பழ.நெடுமாறன், சீமான் இன்னும் சிலரை தவிர்த்து யாரும் உண்மையான உள்ளத்துடன் ஈழத் தமிழர்களின் ந்ல்வாழ்வுக்கு குரல் கொடுப்பதாய் தெரியவில்லை. அந்திம காலத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துதான் சாவேன் என்று அடம்பிடிக்கும் கருணாநிதியின் விதியை யாரால் மாற்ற முடியும்.

    புலிப்படையினர் ஆவேச தாக்குதல் தொடங்கும் போது ஓடி ஒளிவதற்கு ராஜபக்சேவும் அவன் தம்பியும் இப்போதே எங்காவது ஒரு காணி நிலத்தை ரிசர்வ் செய்து கொள்ள சொல்லுங்கள்.

    இன்னும் சில தினங்களில் புலிப்படைகள் தொடங்க போகும் யுத்தம் மகா மூர்க்கமாக இருக்கும்.

    சிங்கள படைகள் மட்டும் அல்ல … புலி படைகளும் இறுதி கட்ட போர் கட்டாயத்தில் உள்ளனர்….

  8. 2009 April 28

    அன்பருக்கு,

    //அந்திம காலத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துதான் சாவேன் என்று அடம்பிடிக்கும் கருணாநிதியின் விதியை யாரால் மாற்ற முடியும். //

    யாராலும் மாற்ற முடியாது. அவரவர் செயல்களுக்கு அவரவரே பொறுப்பு.

  9. 2009 April 30

    Dear mrkkrm,

    //Well said.//

    Sorry for the delay; your comment was `hidden’ in the spam queue.

    Thanks for visiting and leaving a comment.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS