மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் வாழ்க!
உலகெங்கணும் வாழும் கோடானு கோடித் தமிழ்மக்களின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் தமிழினத் தலைவர், நடமாடும் தொல்காப்பியர், வாழும் வள்ளுவர், இருக்கும் இளங்கோ, முத்தமிழ் அறிஞர், செந்தமிழ் வித்தகர், செம்மொழிச் செம்மல், சொல்லின் செல்வர், பைந்தமிழ்ப் பாவலர், ஈழத்தின் காவலர், தண்டவாளம் வென்றவர், குடமுருட்டி சென்றவர், கலைத்துறையின் தலைமகன், அஞ்சுகத்தாயின் அருந்தவப் புதல்வர், டாக்டர் கலைஞர் ஐயா அவர்களே,
உங்களின் திடீர் உண்ணாநோன்பு உலகத் தமிழர்களை உலுக்கிவிட்டது. தமிழர்கள் உங்களுக்காக அழுது புலம்புகின்றனர். தமிழர்கள் விடும் கண்ணீர் பெருக்கெடுத்தமையால் சென்னை, தில்லி உட்பட உலகின் பல நகரங்களில் பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
`தினகரன்’ நாளிதழில் இன்று வெளிவந்த உங்கள் அறிக்கையில் வேலை நிறுத்தத்தின் பலன்களை விளக்கியுள்ளீர்கள்.
இன்று உண்ணாநோன்பு இருக்கிறீர்கள்; அவ்வாறெனில் பலனேதும் விளையவில்லை என்றுதானே பொருள்?
எனவே ஐயா, இந்த உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஒன்று விளங்கவில்லை.
யாருக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்துகிறீர்கள்?
அகில பாரதத்துக்கும் அன்னையான சொக்கத்தங்கம் அந்தோணியா மைனோவுக்கு எதிராகவா?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நிறைந்த மனமோகனசிங்கத்துக்கு எதிராகவா?
ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மைய அரசுக்கு எதிராகவா?
தமிழீழம் குறித்துப் பேசிய ஜெயலலிதாவுக்கு எதிராகவா?
ஒட்டுமொத்த அதிமுக கூட்டணிக்கு எதிராகவா?
இல்லை, தமிழக வாக்காளர்களை ஏய்க்கவா?
பணிவுடன்
- அ. நம்பி
கருணாநிதியின் அடுத்த நாடகம் அண்ணா சமாதியில் அரங்கேறுகின்றது தொண்டர் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கத்துகின்றார்கள் ஒருதரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கத்தவேயில்லை
அன்பருக்கு,
அடுத்தடுத்து நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. வேறு எந்த நாடகக் கலைஞருக்கும் இவ்வளவு கற்பனை ஆற்றல் இருக்குமா என்பது ஐயமே.
ஒரு நல்ல தமிழ் இலக்கியவாதி என்கிற வரையில் திரு.கலைஞர் கருணாநிதியின் மேல் எனக்கு ஒரு மரியாதை உண்டு. ஆனால் மிக மோசமான சூழ்ச்சிக்கார அரசியல் தலைவர் என்கிற முறையில் அவர் மீது எப்போதும் மரியாதை கிடையாது. தனக்கும் தன் குடும்ப நலனுக்கும் ஆதாயம் தரும் எனில் நாளையே மோசமான கொடுமைக்கார கம்னியூச தலைவன் ஷ்டாலின் என்பார். பழைய நாட்களை நன்கு ஆராய்ந்து பார்த்தால், கூட்டணி விட்டு கூட்டணி தாவுவது, லஞ்சம் ஊழல், எதிரியை நண்பன் ஆக்குவது நண்பனை தூரோகியாக்குவது, மக்களை முட்டாள் ஆக்குவது என்று இன்று தமிழ் நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் காரணம் திரு. கருணாநிதியாகத்தான் இருக்கும். ஈழத்தமிழர்கள் செத்தால் என்ன..? மலேசிய தமிழர்கள் வாழ்ந்தால் என்ன….? அவருக்கும் அவர் குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்மை எனில் அவர் வாய் எது வேண்டுமானாலும் பேசும்.
அன்பருக்கு,
//கூட்டணி விட்டு கூட்டணி தாவுவது, லஞ்சம் ஊழல், எதிரியை நண்பன் ஆக்குவது நண்பனை தூரோகியாக்குவது, மக்களை முட்டாள் ஆக்குவது என்று இன்று தமிழ் நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் காரணம் திரு. கருணாநிதியாகத்தான் இருக்கும்.//
மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் உண்மை நிலையை விளக்கியுள்ளீர்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
Perhaps he is visiting the place where he will take his permanant seat soon.I hope you have understood.
அன்பருக்கு,
//Perhaps he is visiting the place where he will take his permanant seat soon.I hope you have understood.//
விளங்குகிறது; நன்றாக விளங்குகிறது.
வெளிப்படையாகவும், இரத்தின சுருக்கமாகவும் உள்ள உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை.
நன்றி மதியழகன்.
அன்பருக்கு,
//வெளிப்படையாகவும், இரத்தின சுருக்கமாகவும் உள்ள உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை.
நன்றி மதியழகன்.//
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.