பிணந்தின்னிக் கழுகுகள்!
2009 April 13
- ஈழத் தமிழர்களின் ஆவி முக்கியமா? குடும்ப ஆட்சி முக்கியமா? இப்படித் தெளிவாகக் கேட்டால் குழப்பமில்லாமல் முடிவெடுத்துவிடுவார் கருணாநிதி!
- இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டு இரண்டு லட்சம் தமிழர்களைச் சிங்களக் காடையர்கள் கொல்லவும், ஈழமண் தமிழர்களின் ரத்தத்தால் செஞ்சகதியாக மாறவும் துணைபுரியும் மத்திய அரசையும், அதில் அங்கம் வகிக்கும் திமுகவையும் எந்தத் தமிழனாவது மன்னிப்பானா?
- அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்துள்ள இவ்வளவு கொடுமைகளுக்கும் மத்திய அரசு மட்டுமே காரணம் இல்லை; அந்த அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியும்தான் காரணம் என்பது கூடவா மக்களுக்குப் புரியாது?
- ஐ.நா. சபை கண்ணீர் வடிக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பரிவு கொள்கின்றன. அமெரிக்கா கூட பரிந்து பேசுகிறது! தில்லி அரசு மட்டும் இரங்க மறுக்கிறது. யாரோடோ உள்ள பழைய பகையை அப்பாவி மக்களிடம் தீர்த்துக் கொள்ள நினைப்பது காட்டுமிராண்டித்தனம் அல்லவா!
கட்டுரை இங்கு:
நிதானம் ஊண்டா?
அடப்பாவி!
ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலை புலிகளை மன்னிக்க மாட்டார்களாம்
யார் தெரியுமா?
ஜெயந்தி நடராஜனும், மணிசங்கர் அய்யரும்
இவர்கள் யார் அவர்களை மன்னிக்க ?
ராஜீவ்வ் காந்தியின் தர்ம பத்தினியும் சீமந்த புத்ரியுமே அவர்களை மன்னித்து விட்ட பிறகு இவர்கள் எதற்காக எகிறுகிறார்கள் தெரியவில்லை
தமிழர்களுக்காக இவர்கள் ஒன்றும் செய்யவேண்டாம்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் இருந்தால் போதும்.
//நிதானம் ஊண்டா?
அடப்பாவி!//
விளங்கவில்லை; சற்றுத் தெளிவாகச் சொன்னால் நல்லது.
//ராஜீவ்வ் காந்தியின் தர்ம பத்தினியும் சீமந்த புத்ரியுமே அவர்களை மன்னித்து விட்ட பிறகு…//
நாடகக் காட்சிகளை உண்மையெனக் கொண்டால் மயக்கம்தான் மிஞ்சும்.
இரண்டுமே நாடகம்தான்
நடிப்பில் இருவருமே ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர் என்பதுதான் உண்மை
//இரண்டுமே நாடகம்தான்
நடிப்பில் இருவருமே ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர் என்பதுதான் உண்மை//
உண்மை.
அதுதான் குழந்தையை கிள்ளிவிட்டு குழந்தை அழும்போது தொட்டிலையும் தாலாட்டுவது
ஈழத்தில் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அவர்களுக்கு ஆடைகள் வழங்குகிறார்களாம்,உணவு வழங்குகிறார்களாம்
நாள்தோறும் கருப்புகன்னாடியும், தலைப்பாகையும் சேர்ந்துகொண்டு கசாப்புகாரனை ஆடுகளை வெட்டாதே என்று மன்றாடி கொண்டு இருக்கின்றன.
அவனோ நான் வெட்டமாட்டேன் ஒருவழியாக ஒழித்தேவிடுவேன் என்று கத்தியை தீட்டி தீட்டி செயல்பட்டுகொண்டிருக்கிறான்.
அதற்க்கு இங்கிருக்கும் கதர் சட்டைகளும் கதை அளந்துகொண்டு இருக்கின்றன