"மதம் மாறுங்கள்; வேலை கிடைக்கும்!”
வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டினார்: மதமாற்றம் செய்து ரூ. 5 கோடி மோசடி – சென்னை பாதிரியார் மீது புகார்
சென்னை, ஏப். 6-
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ராதா கிருஷ்ணனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
சென்னை அண்ணாசாலை மற்றும் தியாகராய நகர் ஆகிய இடங்களில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் நிறுவனம் நடத்தி வந்தவர் பாதிரியார் ஸ்டீபன் லூயிஸ்.
இவர் எனது மகன்கள் சுகுமாறன், சுரேஷ்குமார் ஆகியோருக்கும் அருள் என்பவருக்கும் ஐரோப்பிய நாடுகளான கனடா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் பைபிள் மெடிலின் என்ற அறக்கட்டளை மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறினார். அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் என்றார். ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வீதம் 3 பேருக்கும் தவணை முறையில் ரூ. 6 லட்சம் கட்டினோம். அதற்கு ரசீதும் போட்டு தந்தார்.
பல மாதங்கள் சென்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. நீங்கள் கிறிஸ்தவர்களாக மாறுங்கள். உங்கள் வீடு தேடி வேலை வரும் என்று ஆசை காட்டினார். அதை நம்பி நாங்களும் மதம் மாறினோம். அதன் பின்னரும் அவர் வேலை பெற்று தரவில்லை. மாறாக எங்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.
ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தை திருப்பி தருவதாக கூறி போலி காசோலை தந்தார். அவரிடம் சென்று அடிக்கடி பணம் கேட்டோம். அதற்கு அவர் தனக்கு பெரிய புள்ளிகளோடு தொடர்பு உள்ளது. பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதுவரை அவர் பணம் தரவில்லை.
எங்களை போல 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இது போல ஆசை காட்டி மோசடி செய்துள்ளார். ரூ. 5 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் சண்முகவேல் கூறி இருந்தார்.
இவரைப் போலவே 50-க்கும் மேற்பட்டோர் பாதிரியார் ஸ்டீபன்லூயிஸ், உதவியாளர் சைமன்பால் ஆகியோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரிக்க தியாகராய நகர் துணை கமிஷனர் முத்து சாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. – மாலைமலர்:
வேலை வாங்கி தருவதாக மோசடி
சென்னை, ஏப்.6: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளதாக பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரில் கூறியிருப்பதாவது:
எண்ணூரில் வசித்து வரும் நான் தையல் வேலை செய்து வருகிறேன். நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் என்னிடம் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் தையல் வேலை செய்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்று கூறினார்.
அத்துடன் அவர் என்னை சைமன் பால் என்ற பாதிரியாரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். பாதிரியார் சைமன்பால் என்னை ஸ்டீபன்லூயி என்பவரிடம் அழைத்துச் சென்று வெளிநாட்டில் வேலைக்கு சேருவதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் வரை கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை என்னை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பவில்லை. இது பற்றி கேட்டபோது சரியான பதில்அவரிடம் இருந்து கிடைக்காததால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, பணம் தர முடியாது என்று பதிலளித்ததோடு என்னை மிரட்டினார்கள் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதேபோல் பழைய வண்ணாரப் பேட்டை சண்முகவேல், ஊரப்பாக்கம் குமார், பம்மல் லூர்துசாமி மற்றும் சாமுவேல், கணேஷ் உள்ளிட்ட 10 பேர் இந்த மூவர் மீதும் தங்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியதாக புகார் கூறி உள்ளனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். – மாலைச்சுடர்:
பேராசை பெருநஷ்டம் என்பது இன்னமும் ஏட்டளவிலேதான் உள்ளது.
ஏமாற்றுபவர்கள் இவர்களை போன்றவர்களுக்கு விரிக்கும் வலையில் மிகவும் எளிதாக வந்து விழும் இது போன்ற மனிதர்கள் தினம்தினம் தமிழகம் கண்டு வருவதை கண்ணுற்றும், படிக்காத பாமரர்களும் மெத்தபடித்த மனிதர்களும் கூட விட்டில் பூச்சிகள் போல் விழுந்து அனைத்தையும் தொலைத்துவிட்டு அவதிபடுவதை கண்டபோதும் திருந்தாத ஜென்மங்கள்
ஏமாற்றுபவர்களும், எத்தர்களும் எல்லா ஜாதியிலும்,மதத்திலும்,இனத்திலும் உண்டு. தன் சொந்த பெற்றோர்களையே சொத்துக்காக ஏமாற்றும் மகனும் உண்டு,தன் கூட பிறந்த உடன்பிறப்புகளையே ஏமாற்றி நடுத்தெருவில் நிற்க வைக்கும் நல்லவர்களும் இங்கு உண்டு.
.
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் அறியாத இந்த மூடர்கள் வாழ்வில் காணுவது ஏமாற்றமும் இழப்புகளும்,அதனால் விளையும் துன்பங்களும் துயரங்களும்.
இவர்களை பார்த்தாவது யாராவது திருந்துகிறார்களா என்றால் இல்லை என்பதுதான் வேதனை.
அதனால்தான் ஒரு கவிஞன் அன்றே பாடினான்
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம் என்று
அறிவிருந்தும் ஆசைக்கு அடிமையாவோர் அல்லல்பட்டுதான் அழிவர்.இதை யாரும் தடுக்க முடியாது.
ஏமாறுபவன் இருப்பதால் தான் ஏமாற்றுபவனும் இருக்கிறான்.
//ஏமாறுபவன் இருப்பதால் தான் ஏமாற்றுபவனும் இருக்கிறான்.//
எனவே ஏமாற்றுவது சரி என்கிறீர்களா?
ஒருவனிடம் ஏமாறுபவன்தான் பலபேரை ஏமாற்றுபவனாக மறு அவதாரம் எடுக்கிறான்
//ஒருவனிடம் ஏமாறுபவன்தான் பலபேரை ஏமாற்றுபவனாக மறு அவதாரம் எடுக்கிறான்//
ஏற்கெனவே ஏமாறியவன்தான் பல பேரையும் ஏமாற்றுகிறான் என்கிறீர்களா? மிகச் சரி.