எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
நாள்தோறும் சிதைந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழினத்துக்கு உதவாவிட்டால் போகிறது.
அவர்களைப் பகடிப்பொருள் ஆக்கவேண்டுமா?
தேர்தல் என்றால் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விடுவது இயல்புதான்.
அதற்காக ஈழத் தமிழனின் பேரவலத்தை நையாண்டிப்பொருள் ஆக்கவேண்டுமா?
எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
இது பழமொழி.
கீழே உள்ளது கருணாநிதி மொழி.
சரத் ஃபொன்சேகா மகிழ்ச்சி அடையக்கூடும்.
- அ. நம்பி
“டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள – காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.
அவர்கள் வாதப்படி நாம் கை கழுவி விட்டவர்கள் – அல்லது கையாலாகாதவர்கள் – இவர்கள்தான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் அந்தக் கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள் – முழங்கட்டுமே முரசம் – கொட்டட்டுமே பேரிகை.
இலங்கை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! ராஜபக்சேயை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?
ஒரு நாள் பகல் இரவு 24 மணி நேரத்தில் – 20 மணி நேரம் தொகுதிப் பங்கீடு – அட்வான்சாக ராஜ்ய சபா – இப்படி பேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலே ஒரு "வீரம் அல்லவா பொசுக்"கென வந்து விடுகிறது.
உடனே பூகம்பமாக வெடித்துப் புயலாக சீறி – மத்திய ஆட்சியிலே இருக்கும் காங்கிரஸ் மீதும் கனல் கக்குகிறார்கள் – தமிழகத்திலே இருக்கும் கழக ஆட்சி மீதும் தணல் கொட்டுகிறார்கள்.
அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை.
அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய (?) நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம்.
இந்த இலங்கை மீது படையெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு – அவரையும் அழைத்துச் செல்லுங்கள்.
அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று – அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.
எச்சரிக்கை. அவர் தவறிப்போய் 2002ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே முதலமைச்சராக இருந்து முன் மொழிந்து நிறைவேற்றினாரே ஒரு தீர்மானம் – தளபதி பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வருவோமென்று – அதை நினைத்து ராஜபக்சேவுக்குப் பதிலாக பிரபாகரனை கைது செய்து விடப்போகிறார்.
எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’
செய்தி: நக்கீரன்

பா (பாதை).ம (மாறிய) க (கட்சி) கோடை வருவதால் பசுமை நிறைந்த (இரட்டை இலை) கட்சிக்கு மாறியதால் மனம் வெதும்பி இந்த புலம்பல். இதுவே அக்கட்சி அவர்களுடன் இருந்தால் வாருங்கள் அனைவரும் சேர்ந்து முத்து குளிக்கலாம்,நாங்கள் முத்துக்களை எடுத்து கொள்ளுகிறோம்,உங்களுக்கு கிளிஞ்சல்களை தருகிறோம் என்று பெருமையோடு சொல்லியிருப்பார்
//பா (பாதை).ம (மாறிய) க (கட்சி) கோடை வருவதால் பசுமை நிறைந்த (இரட்டை இலை) கட்சிக்கு மாறியதால் மனம் வெதும்பி இந்த புலம்பல். //
பேசட்டும்; `தேர்தல் பரப்புகையில் இஃது இயல்புதான்’ என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் செத்துக்கொண்டிருக்கும் ஈழத் தமிழனின் போராட்டத்தை எள்ளி நகையாட வேண்டுமா?
kaligaren pulampal,poramai
ராஜா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
எதைச் சொன்னாலும் புரிந்துகொள்ளும் திறனற்ற மக்கள்;
அதை நன்றாகப் புரிந்துகொண்ட அவர்களை மொட்டையடிக்கும் அரசியல் தலைவர்கள்.
தாங்கள் மொட்டையடிக்கப்படுகிறோம் என்பதைக்கூட உணராமல் இருப்பதற்கு மொட்டையடித்துக்கொள்ள ஆகும் கட்டணத்திற்குச் சலுகை. கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டால் அரசு உதவித்தொகை தருவதுபோல் வாக்களிக்கச் சென்றால் பெரிய காந்தி படம், பிரியாணிப் பொட்டலம், துன்பத்தை மறக்கச் சாராயப் பாக்கெட் , மாடுகளுக்கு மூக்குக் குத்தி மூக்கணாங்கயிறு போடுவதுபோல், மூக்குத்தி, தன்மானத்தை இழந்து மானத்தைக் காக்கப் புடவை இன்னும் எத்தனையோ எத்தனையோ கிடைக்கும்போது வேறென்ன வேண்டும் ?
இவ்வாறு மக்களைப் பழக்கப்படுத்திவிட்டார்கள் அரசியல்வாதிகள். நாற்பத்திரண்டு ஆண்டு பழக்கம்; பழக்கத்தை மாற்றிக்கொள்ளுவது எளிதன்று.
மக்களை மூடர்களாக, தங்கள் சொல்படி தலையாட்டும் பொம்மைகளாக, என்றென்றும் பிச்சைக்காரர்களாக, அவர்களுக்கு வார்த்தை ஜாலங்கள் மூலமும், மதியை மயக்கும் மது மூலமும், இலவசங்கள் மூலமும், பார்ப்பன எதிர்ப்பு பொய்ப் பிரச்சாரங்கள் மூலமும், சமூக விரோதிகளின் துணையுடனும் வைத்திருக்கவே இந்த பகுத்தறிவு (அ)சிங்கங்கள் முடிவு செய்து விட்டன.
அவைகளை 60 ஆண்டுகளுக்கு மேலாகவே, தந்திரமாகவே, வெற்றிகரமாகவே நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன. தங்களுக்குள்ளேயே மாறி மாறி அணிகள் அமைத்து ஆரிய மாயை ஆரிய மாயை என்று இந்த சூரிய மாயைகள் அவ்வப்போது புதுப்புது அவதாரங்கள் எடுத்து மக்களை திசைதிருப்பி சிந்திக்க விடாமல் செய்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளுகின்றன. என்பது அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும் மாயைக்கு அடிமையான மக்கள் அந்த வலையிலிருந்து மீள்வது அந்த மாயவன் ஒருவனாலேயே சாத்தியம்.
பார்ப்பான் என்றால் அனைத்து உயிர்களையும் சமமாக பார்ப்பவன் என்ற பொருளை மறைத்துவிட்டு ஒரு பிரிவினரின் மீது அந்த முத்திரையைக் குத்தி இழிவு செய்வதே தொழிலாகிப் போய்விட்டது.
சுயநலம் அனைத்துப் பிரிவினர்களிடையேயும் உள்ளது. பிறரை அடிமைப்படுத்தும் பண்பு அனைவரிடமும் உள்ளது.
அப்படி இருக்க எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே?
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை.