கல்லூரிகளில் கழுதைப்புலிகள்
தொடரும் ராகிங் கொடுமை – மாணவி தற்கொலை முயற்சி
ஆந்திர மாநிலம் குண்டூரில் மூத்த மாணவிகளின் ராகிங் கொடுமை காரணமாக வேளாண் பட்டப்படிப்பு மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார்.
20 வயதாகும் அந்த மாணவி ஆந்திர அரசு வேளாண் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் பயின்று வருகிறார். அவரது மூத்த மாணவிகள் கல்லூரியில் அவரை நிர்வாணமாக ஆடச் சொன்னதாகத் தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த அந்த மாணவி பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு நினைவு திரும்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் இமாச்சல பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ராகிங் கொடுமையில் சிக்கி மாணவர் ஒருவர் பலியானார். இந்தக் கொடுமையின் பதற்றம் தணிவதற்குள் ஆந்திராவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நட்புக்கு ராகிங் கூட பாதை வகுக்கும் என வைரமுத்து பாடல் எழுதி இருக்கிறாரே?
திரைப்படப் பாடல்களை அடிப்படையாகக்கொண்டு சமுதாய ஒழுங்குமுறைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறீர்களா?
Ragging is cruel.
It is done by the so called students from the families of politicians, anti social elements and the so called affluent socity people who never care for the welfare of the socity in general.
They should be put behind bars. If they are allowed in the educational institutions to persue their education
they will become educated rowdies and join the politics to corrupt the entire society. That is what happening nowadays!
Everybody knows well that many elected MLAs and MPs and even ministers on whom several cases pending for bribery, looting, and even for murder.
The media which is exposing the incidents of ragging when it results in the killing or death of a victim for some days and then switch over to another episode after.
Most of the principals of the educational institutions are helpless as they are not allowed to exercise any control over these incidents because most of the ragging incidents are done by the sons of politically powerful or anti social elements.
Unless the criminals are eradicated from the society the peace loving people cannot live at all.
But who is to bell the devil?
The present judiciary is not capable of doing it because its powers are constrained due to mafia and political people.
Of late the judges are being threatened not only by the people in politics but also from the legal fraternity.
This is not good for the nation as a whole.
நண்பரே,
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
பேய்கள் ஆட்சி செய்யும்,சரி
பிணங்கள்தான் பேய்களாகின்றன
பேய்கள் மனிதர்களுக்குள் புகுந்துகொண்டு அவர்களை ஆட்டி வைக்கின்றன.
சாமியாடிகள் என்பவர்களின் மனதுக்குள் புகுந்துகொண்டு
பேய்கள் புகுந்துகொண்ட அப்பாவி மனிதர்களை வதைக்கின்றன
அவர்களை சுற்றியுள்ள மூட பேய்கள் இதற்க்கு தூபம் போடுகின்றன.
ஆனால் பிணங்கள் எப்படி சாத்திரங்களை தின்னும்?
விளக்கினால் உயிரோடு வாழும் இதுபோன்ற நடை பிணங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மனிதர்கள் ஆட்சிசெய்தால் சாத்திரங்கள் மக்களுக்கு அறவழி காட்டி நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.
பேய்கள் ஆட்சிசெய்தால் சாத்திரங்களின் இயல்பு மாற்றப்பட்டுவிடும். பேய்களின் இயல்பைப் பின்பற்றிச் சாத்திரங்கள் பிணங்களைத் தின்னத் தொடங்கிவிடும்.
மனிதர் ஆட்சியில் நல்லவை நல்லவையாக இருக்கும்.
பேய் ஆட்சியில் அல்லவை நல்லவையாகக் கொள்ளப்படும்.