சிறிய பீடி பெரிய விளைவு

2008 May 14
by அ.நம்பி

bd1

நீரிழிவுக்கும் இதயநோய்க்கும் அடுத்து இந்திய மக்களைக் கொல்வது பீடி என ஆய்வொன்று கூறுகிறது.

113 கோடி இந்தியர்களுள் பீடி புகைப்பவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ பத்துக் கோடியாகும். பீடி புகைப்பவர்களுள் மிகுதியான எண்ணிக்கையினர் படிப்பறிவு இல்லாதவர்களும் வறியவர்களும் ஆவர்.

உடல்நலத்துக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பது சிகரெட்டு என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்ததாகும். ஆனால் சிகரெட்டைவிட மிகுதியும் கேடு விளைவிப்பது பீடி என இந்திய நலத்துறை அமைச்சின் இந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறது.

பீடியில் நச்சுகள் மிகுதியும் உள்ளன. It is more harmful than cigarette smoking as it contains more tar, nicotine, carbon monoxide, carcinogenic hydrocarbons and other toxic and class A carcinogenic substances like nitrosamines (NNN & NNK), but surprisingly less tobacco than a cigarette.

நுரையீரல் புற்று, வாய்ப்புற்று, இதயநோய்கள், நுரையீரல் நோய்கள் முதலியவற்றால் பீடி புகைப்பவர்கள் பாதிப்படையக் கூடும்.

ஆண்டொன்றுக்கு 80,000 கோடி பீடிகளும் 10,000 கோடி சிகரெட்டுகளும் இந்தியாவில் புகைக்கப்படுகின்றன.

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS